மகரம் |
(55/100) + பணத்துக்கு கஷ்டமில்லை, - மற்ற எல்லாமே கஷ்டம் தான் குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில்
சஞ்சரிப்பார். உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 உழைப்பே உயர்ந்தது என்ற கொள்கையுடைய மகரராசி அன்பர்களே! உங்கள்
ராசியில் ஜென்ம குருவாக வந்து குருபகவான் அமர்ந்துள்ளார். மகரத்தில்
இடம்பெற்றுள்ள குருபகவான் தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 5, 7, 9
ஆகிய இடங்களை பார்க்கிறார். ராசியில் குரு உள்ளதால் மனதில் மாறுபட்ட
சிந்தனைகள் தோன்றும். அவற்றை அப்படியே செயல்படுத்தி விடாமல், பரிசீலனை
செய்து நிறைவேற்றுவதால் நல்ல பலன்களைப் பெறலாம். பணவரவில் சரளமான நிலை
இருக்கும். செயல்பாடுகளில் மந்தநிலை தோன்றி விலகும். இளைய சகோதரர்கள்
உங்களுக்கு சொல்லும் ஆலோசனை பயனுடையதாக இருக்கும். மணமாகாத சகோதரிகளுக்கு
திருமணம் நடக்கும். வீடு, வாகன வகையில் தகுதிக்கு மீறிய அபிவிருத்தி
பணிகள் எதுவும் செய்தால் தேவையற்ற சிக்கலில் மாட்ட நேரிடும். தாயின்
உடல்நலம் பாதிக்கப்படலாம் என்பதால் மருத்துவச் செலவு கூடும். ஆனால்,
தந்தையின் உடல்நிலை, பணநிலை நன்றாக இருக்கும். பூர்வ புண்ணிய பலன்கள்
உங்களுக்கு உறுதுணையாக நின்று வாழ்வை வழிநடத்தும். புத்திரர்கள் தகுதி,
திறமையை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர். வேலைவாய்ப்புக்கு
முயற்சி செய்பவர்களுக்கு தகுதியான பணி கிடைக்கும். சொத்து மூலமாக வருமானம்
பெறுபவர்கள் திருப்திகர பணவரவு பெறுவர். எதிரிகளிடமும், எதிர்மறை கருத்து
உள்ளவர்களிடமும் எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதம் வராத அளவிற்கு
நடந்துகொள்ளவும். உடல்நலம் பாதிக்கலாம் என்பதால் கூடுதல் கவனம் அவசியம்.
விலைமதிப்புள்ள பொருள்களை இரவல் வாங்குவதும், கொடுப்பதும் கூடாது. கணவன்,
மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்கள் ஆதரவு மனப்பான்மையுடன்
தேவையான உதவி புரிவர். நண்பர்கள் கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வர்.
கடினமான பணிகளில் ஈடுபடும்பொழுது முன்யோசனையும், தற்காப்பு நடவடிக்கையும்
முக்கிய தேவையாகும். இந்த குரு
பெயர்ச்சி காலத்தில், நீங்கள் கடன் வாங்குவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
இது பல சிக்கல்களை உருவாக்கும். மூத்த சகோதரர்கள் திறமையுடன் செயல்பட்டு
சமூகத்தில் புதிய அந்தஸ்து பெறுவர். வெளியூர் பயணம் இனிய அனுபவத்தையும்,
பணவரவை அதிகம் பெறுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கித்தரும். தொழிலதிபர்கள்:
தொழில் சார்ந்த வகையில் குறைந்த ஆதாயமே கிடைக்கும். கம்ப்யூட்டர், மின்னணு
சாதனங்கள், மின்சார உபகரணங்கள், ஜவுளி, சமையல் சாதனங்கள், கட்டுமானப்
பொருட்கள், தோல், பிளாஸ்டிக், அழகு சாதனம், மோட்டார் வாகனம், உணவு
தானியங்கள், மலைத்தோட்ட பயிர்கள் உற்பத்தி செய்பவர்கள், கல்வி நிறுவனம்,
தொழிற்பயிற்சி பள்ளி, மருத்துவமனை, நிதிநிறுவனம் நடத்துபவர்கள் உற்சாகமாக
செயல்படுவர். மற்ற தொழிலதிபர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். உங்களது
நிர்வாகத் திறமைக்கும், பொருளின் தரத்திற்கும் உரிய வரவேற்பும் பாராட்டும்
கிடைக்கும். புதிய கிளை துவங்கும் முயற்சி நிறைவேறும். வியாபாரிகள்:
நகை, ஜவுளி, ஆட்டோமொபைல், வீட்டு உபயோக சாதனங்கள், மின்சார உபகரணங்கள்,
பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு பொருட்கள், வாசனை திரவியங்கள், நவீன
பர்னிச்சர், காய்கறி, பழம், பேக்கரி, லாலா பொருட்கள், விவசாய
இடுபொருட்கள், ஸ்டேஷனரி, மளிகை சாமான், ரப்பர், தோல் பொருட்கள், மின்னணு
சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் எந்தப் பொருள் வியாபாரம்
செய்தாலும் அளப்பரிய வகையில் வளர்ச்சி காண்பர். லாபம் அதிகரிக்கும். கடந்த
காலங்களில் ஏற்பட்ட பணக்கடனை ஓரளவு சரிசெய்வீர்கள். சிலருக்கு புதிய
தொழிலில் கூட்டுசேரும் வாய்ப்பு உருவாகி நிறைவேறும். பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொதுநல சிந்தனையுடன் பணியை
சிறப்புடையதாக மாற்றுவர். பணியிடங்களில் உயர்ந்த அந்தஸ்து ஏற்படும்.
விரும்பிய இடமாற்றம், அதிக வருமானம் போன்றவற்றை எளிதில் பெறுவீர்கள். ஆடை
வடிவமைப்பு, உணவு பண்டம் தயாரிப்பு, கலைப்பொருள் வடிவமைப்பு, அலுவலக
நிர்வாகம், பர்னிச்சர் உற்பத்தி, சுற்றுலா நிறுவனம், வியாபார ஸ்தலங்கள்
போன்றவற்றில் பணிபுரிபவர்கள் கனிவுடன் பேசி வாடிக்கையாளர்களிடமும்
நிர்வாகத்திடமும் நற்பெயர் பெறுவர். இதனால் எதிர்கால வாழ்வில்
நம்பிக்கையும், ஒளி மிகுந்த தன்மையும் ஏற்படும். பெண்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் குறைபாடு வராத நன்னிலை
பெறுவர். அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலுள்ள குறைகளைச்
சுட்டிக்காட்டும் மனநிலை உருவாகும். இதை தவிர்ப்பது நல்லது.
குடும்பப்பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். வீட்டுச் செலவுக்கு திண்டாட்டமாக
இருக்கும். பிறந்த வீட்டு சீர் பெறுவதில் பெற்றோருடன் கருத்து வேறுபாடு
ஏற்படும். நகைகள் காணாமல் போகலாம். கவனம். சுயதொழில் புரியும் பெண்கள்
அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் சுமாரான வளர்ச்சி பெறுவார்கள். மாணவர்கள்:
இன்ஜினியரிங், வாகனம், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், மார்க்கெட்டிங்,
மாடலிங், சினிமா தொழில்நுட்பம், புவியியல், தொல்பொருள் ஆய்வு,
வேதசாஸ்திரம், இசை, நடனம், ஆசிரியர் பயிற்சி, நிதி நிர்வாகம், ஆடிட்டிங்
உட்பட பல்வேறு துறையில் பயிற்சி பெறும் மாணவர்களின் படிப்பு பின்தங்கலாம்.
மிகுந்த கவனத்துடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெறும் நிலை ஏற்படும்.
ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். அரசியல்வாதிகள்:
தேவையற்ற பேச்சால் ஆதரவாளர்களின் அன்பைப் இழக்கக்கூடும். கவனம்.
அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும்.
புத்திரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசியல் எதிரிகளால் சிரமங்கள்
பலவற்றை சந்திக்க நேரிடும். அலைச்சல் அதிகமாக இருக்கும். விவசாயிகள்:
மகசூல் சுமாராக இருக்கும். கால்நடை வளர்ப்பிலும் பராமரிப்பிலும் பணச்செலவு
அதிகரிக்கும். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்கள் வரலாம். பொறுமையுடன்
செயல்படுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது:
திருப்பதி அருகிலுள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோயிலுக்குச் சென்று
வழிபடுவதால் வாழ்வில் சகல வளமும் ஏற்படும். கீழ்க்கண்ட பாடலை 11 முறை
பாராயணம் செய்யவும். விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம் தண்மையினாற் கண்ணிற்பணிமின் கனிந்து |