விருச்சிகம் |
(40/100) + புத்திரர்களால் பெருமை, - கடன் வாங்கும் நிலை குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். விசாகம் 4, அனுஷம், கேட்டை முடியாது என்ற வார்த்தையே பிடிக்காத விருச்சிகராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு மூன்றாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி
உள்ளார். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 7, 9, 11 ஆகிய
இடங்களை பார்க்கிறார். குரு அமர்ந்த இடம் கொஞ்சம் அனுகூலக் குறைவானதுதான்.
இருப்பினும், அவர் பார்க்கும் இடங்கள் ஓரளவு நன்மை தருவதாக அமைந்துள்ளன.
ஆனால், பேச்சில் கடுமை கூடும் என்பதால் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.
பணவரவு பற்றாக்குறையாகவே இருக்கும். குடும்பத்தின் வளர்ச்சிக்காக
தகுதிக்கு மீறிய கடன் வாங்கும் நிலை ஏற்படும். சகோதரர்கள் சொல்லும்
ஆலோசனைகள் சில உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், அவை ஆசிரியர் ஒரு
மாணவனுக்கு சொல்லும் கண்டிப்பான அறிவுரை போன்றது என்பதை உணர்ந்து
செயல்பட்டால் நன்மை கிடைக்கும். வீடு,
வாகன வகையில் மாற்றம் செய்வதில் செலவு அதிகரிக்கும். தாய்வழி
உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்களின் எதிர்கால
வளர்ச்சி குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் வளர்ச்சிக்கு
பாதிப்பு ஏதுமில்லை. குலதெய்வ வழிபாடு நிறைவேறி பரிபூரண நல்லருளை
பெறுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். முக்கிய செயல்களை
நிறைவேற்றும்போது பின்விளைவுகளை உணர்ந்து செயல்படுத்துவதால் நலம் பெறலாம்.
வழக்கு விவகாரங்கள் அவ்வளவு சாதகமான சூழ்நிலையத் தராது. கணவன்,
மனைவி ஒற்றுமை பலப்படும் அளவுக்கு குருவின் பார்வை பலமாக உள்ளது. நற்குணம்
நிறைந்த புதிய நண்பர்கள் அறிமுகமாகி இக்கட்டான நிலைகளில் உதவுவர்.
வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் வேண்டும். சிறு விபத்துகளுக்கு
வாய்ப்புண்டு. ஆபத்தான இடங்களுக்குச் செல்வது, ஆபத்தான சாகசச் செயல்களில்
ஈடுபடுவது, பிறருக்காக ஜாமீன் கொடுப்பது, பணப்பிரச்னையில் பொறுப்பேற்பது
ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பயணங்களின் போது பொருட்கள் திருட்டு
போகலாம். கவனம். தொழிலதிபர்கள்:
இன்றிருக்கும் நிலையை அப்படியே தொடர்ந்தாலே போதும். புதிய மாற்றங்கள்
செய்தால் செலவு மிகக்கடுமையாகி விடும். டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, தோல்,
பட்டாசு, தீப்பெட்டி, அடுப்பு, மர அறுவை, மெழுகுவர்த்தி, மருத்துவ
உபகரணங்கள் உற்பத்தி செய்வோர், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு இக்கட்டான
நேரமாக இருக்கிறது. பிற தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.
நிர்வாகத்தில் தேவையான சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் லாபத்தின் அளவை
உயர்த்திக் கொள்ளலாம். பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அலட்சிய உணர்வு தலைதூக்கும்.
இதனால் பணியில் குளறுபடி உண்டாகி அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக
நேரிடும். சலுகைகள் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.
சிலருக்கு வேலையிழப்பு, பணஇழப்பு போன்ற தண்டனை பெறும் சூழ்நிலை ஏற்படும்.
குறிப்பாக, சாயத்தொழில், அக்கவுன்ட், உணவு பண்டங்கள் தயாரிப்பு,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில்
பணிபுரிபவர்களுக்கு மிகமிக சோதனையான கால கட்டம். வியாபாரிகள்:
ஜவுளி, மளிகை, தானியங்கள், மின்சார உபகரணங்கள், இறைச்சி, காய்கறி, பழம்,
உணவு பண்டங்கள், பேக்கரி பொருட்கள், பெயின்ட், காகிதம், பால்பொருட்கள்,
குளிர்பானம், பூ வியாபாரிகள் தங்கள் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை
கடுமையாகச் செய்ய வேண்டும். ஏதேனும் காரணத்தால் பொருள் இழப்பு ஏற்பட
வாய்ப்புண்டு. பாத்திரம், பிற உலோகப் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி,
பீங்கான் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு விற்பனை குறைவு
ஏற்பட்டாலும் கட்டுப்படியாகும் லாபம் கிடைக்கும். நகை உள்ளிட்ட மற்ற
வியாபாரிகளுக்கு கடந்த ஆண்டின் நிலை தொடரும். பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு கவனக்குறைவு காரணமாக
பணியில் இடைஞ்சல் ஏற்படும். கூடுதல் பணிச்சுமைக்கும் உள்ளாவார்கள். சிலர்
பணியிட மாற்றம், சஸ்பெண்ட் போன்ற மனக்கஷ்டம் தரும் பலன்களை சந்திப்பர்.
குடும்ப பெண்கள் கணவரின் கூடுதல் அன்பை பெறுவர். சமையலறையில் பாதுகாப்பு
நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். நகை உட்பட விலைமதிப்புள்ள
பொருட்களை தவறவிடும் கிரகநிலை உள்ளது. கவனம் தேவை. சுயதொழில் புரியும்
பெண்கள் கூடுதல் மூலதனமிட்டால், அது திரும்பக் கிடைப்பது சிரமமே. அளவான
மூலதனமும், கடுமையான உழைப்பும், கண்காணிப்பும் இருந்தால் தான் இப்போது
இருக்கும் தொழிலைக் காத்துக் கொள்ள முடியும். சக தொழில் அதிபர்களுடன்
ஆலோசனை கேட்கலாமே தவிர, அவர்களுக்கு பணம் கொடுப்பது, பணப்பொறுப்பு ஏற்பது
ஆகியவை சிக்கலை ஏற்படுத்தி விடும். மாணவர்கள்:
தகவல் தொழில் நுட்பம், சட்டம், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்,
ஏரோநாட்டிக்கல், மரைன், ஓவியம், வணிகவியல், ஆடிட்டிங், சினிமாத்துறை
படிப்பு மாணவர்கள் கவனக்குறைவால் படிப்பில் பின்தங்க நேரிடும். இதனால்
கூடுதல் பணச்செலவும் மன உளைச்சலும் ஏற்படும். பெற்றோர் உங்களுக்கு ஆறுதல்
சொல்லி உங்களின் படிப்பு சிறக்க ஊக்கம் தருவர். நீங்கள் மிக கவனமாக
படிப்பே பிரதானமெனக் கருதினால் குரு பகவானுடன் பிற கிரகங்களும் உங்களுடன்
ஒத்துழைத்து தேர்ச்சி பெறச் செய்வர். கவனம். அரசியல்வாதிகள்:
பொதுவாழ்க்கையில் நல்லது செய்ய முயற்சித்தாலும் அச்செயலை எதிர்க்க புதிய
எதிரிகள் உருவாவர். ஆனால், உங்கள் ஆதரவாளர்கள் நன்றியுடன் செயல்பட்டு
கடுமையான நேரங்களில் கை கொடுப்பர். அரசு அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள்
தொடர் பாக அவர்களைக் கண்டித்தால் வழக்கு போன்ற கஷ்டம் தரும் பலன்களை
அனுபவிக்க நேரிடும்.புத்திரர்களை அரசியலில் ஈடுபடுத்தலாம். விவசாயிகள்:
பயிர் வளர்க்க அதிக செலவை சந்திக்க நேரிடும். விளைபொருட்களை கண்ட விலைக்கு
விற்க வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்படும். கால்நடைகளுக்கு முறையான
மருத்துவம் செய்யாவிட்டால் அவற்றை இழக்க நேரிடும். நீங்கள் செய்ய வேண்டியது: உங்களுக்கு ஏற்படும் சோதனைகளை குரு பகவான் வழிபட்ட திருச்செந்தூர் முருகப்பெருமானால் தான் நீக்க முடியும். அங்கு சென்று வாருங்கள். கீழ்க்கண்ட பாடலை தினமும் 11 முறை பாராயணம் செய்யவும். வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே! செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை. |