துலாம் |
(40/100), + சகோதரர்களால் உதவி, - கடுமையான செலவு குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3 நியாயத்தை கண்ணெனப் போற்றும் துலாம் ராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு நான்காம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி
உள்ளார். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 8, 10, 12 ஆகிய
இடங்களை பார்க்கிறார். குருவின் அமர்வு தரும் பலன்களைவிட அவரின் பார்வை
பெறும் இடங்களில் இருந்துதான் பலனை பெற இருக்கிறீர்கள். பணத்தட்டுப்பாடு
ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தேவைகளைப் பூர்த்தி செய்ய கூடுதல் நேரம் உழைக்க
வேண்டி வரும். தாயாரும், இளைய சகோதரர்களும் பணம் கேட்டு நச்சரிப்பதால்,
அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வீடு, வாகன வகையில் இருக்கும்
அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள இயலாது. புத்திரர்களின் படிப்பு பின்தங்க
வாய்ப்புண்டு. பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்கள் அதை ஏதேனும் ஒரு
வழியில் இழக்க நேரிடும். உங்கள் நேரடிப் பார்வையில் இருந்தால் இதில்
இருந்து தப்பலாம். குலதெய்வ
வழிபாடு நிகழ்த்துவதால் நன்மை தரும் பலன்களை பெறலாம். உடல்நலத்தில்
பாதிப்பு ஏற்படலாம். குடும்பத் தேவையை நிறைவேற்ற கடன் வாங்க வேண்டிய
அவசியம் ஏற்படும். வாங்கிய கடனைத் திருப்பித் தரக்கூட சிரமப்பட
வேண்டியிருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு ஏற்படும்.
நண்பர்களிடமும் இதே நிலை தான். அவர்களுக்குள் ஏற்படும் சண்டையில்
கருத்துச் சொல்ல முற்பட்டு, நீங்கள் கெட்ட பெயர் வாங்கக்கூடும். கவனமாக
இருக்கவும். உங்களை களங்கப்படுத்தவோ அல்லது துன்பப்படுத்தவோ சிலர்
நினைப்பர். பொறுமையுடன் இருந்து அவர்களைச் சமாளியுங்கள். மொத்தத்தில்
உணர்ச்சிவசப்படும் தன்மை கூடலாம் என்பதால், உங்களை நீங்களே
கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். கிடைக்காத பொருளுக்காக ஏங்கும்
மனோபாவம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கிவிடும். கஷ்ட காலத்தில்
மூத்த சகோதரர்கள் உதவி செய்ய முன்வருவர். குடும்பத்தில் சுபநிகழ்வுகள்
இனிதாக அமையும். ஆனால், செலவு மிக அதிகமாக இருக்கும். வெளியூர் பயணம்
ஆதாயம் தரும். சிலருக்கு சொந்தமாக தொழில் துவங்கும் அனுகூல நிலையும்
உள்ளது. தொழிலதிபர்கள்:
தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி காண இயலும். ஆனால், எவ்வளவு லாபம்
வந்தாலும் அது பராமரிப்பு, தொழிலாளர் பிரச்னை உள்ளிட்ட வகைகளில் வரவுக்கு
மீறி செலவாகி விடும். மூத்த தொழிலதிபர்களில் நம்பகமானவர்களின்
வழிகாட்டுதலை ஏற்று செயல்படுவதால் சிரமங்களை தவிர்க்கலாம். இரும்பு, தோல்,
காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மினரல் வாட்டர்,
பால்பொருட்கள், கட்டுமான பொருட்கள், மரத்தொழில், பிளாஸ்டிக், பீங்கான்
தொழில் சார்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி ஏற்பட்டாலும் நினைத்த அளவுக்கு லாபம்
எதிர்பார்ப்பதற்கு இல்லை. லாட்ஜ், டிராவல் ஏஜன்சி நடத்துபவர்களுக்கும்
சுமாரான நிலையே. அனுபவமுள்ள தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்து விலகிச்
செல்வதால் புதியவர்களைக் கொண்டு தொழில் நடத்த சிரமப்பட வேண்டியிருக்கும். வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மோட்டார் உதிரிபாகங்கள், சோப்பு, அழகு சாதனப் பொருட்கள்,
பால்பொருட்கள், உணவு பண்டங்கள், குளிர்பானம், மினரல் வாட்டர், இறைச்சி,
கடல் சார் பொருட்கள், மருந்து, செல்போன், கம்ப்யூட்டர், பாத்திரம், வீட்டு
அலங்கார பொருட்கள், பர்னிச்சர் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபத்திற்கு
வழியில்லை. மற்றவர்களுக்கு ஓரளவு திருப்தி தரும் அளவுக்கு வியாபாரம்
இருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும். பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் முன்னேற்றம் காண்பர்.
பணிகளில் இடையூறு ஏதும் வராது. ஆனால், சலுகைகள் கிடைப்பதற்கில்லை. சாண்
ஏறினால் முழம் சறுக்கும் என்ற நிலையே இந்த ராசி பணியாளர்களுக்கு பணவரவு
விஷயத்தில் இருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பாத இடத்துக்கு
மாற்றம் வரக்கூடும். எலக்ட்ரிக்கல், இயந்திரம் சார்ந்த பணிகளில்
உள்ளவர்களுக்கு மட்டும் ஓரளவு சலுகை கிடைக்கும். சக பணியாளர்களுடன்
கருத்து வேற்றுமை வரலாம். கவனம். பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன்
செயல்பட்டாலும், சலுகைகளை எதிர்பார்க்க இயலாது. குடும்பப் பெண்களுக்கு
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வீட்டுச்செலவுக்கு திண்டாட
வேண்டியிருக்கும். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் உடல்நலம்,
ஆரோக்கியம் பலம் பெறும். உங்கள் ராசியில் இந்தக் காலத்தில் பெண்
குழந்தைகள் பிறந்தால், எதிர்காலத்தில் அவர்களது மாங்கல்ய பலமே வலுவாக
இருக்குமாம். சுயதொழில் புரியும் பெண்களுக்கும் ஓரளவே லாபம் எதிர்பார்க்க
முடியும். மாணவர்கள்:
தகவல் தொழில்நுட்பம், சட்டம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
இன்ஜினியரிங், விவசாயம், ஆடிட்டிங், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், மரைன்,
டெக்ஸ்டைல் டெக்னாலஜி, வானவியல், வேதசாஸ்திரம், நிதி மேலாண்மை, ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., மார்க்கெட்டிங், மாடலிங், சினிமாட்டோகிராபி, இசை, நடனம் உட்பட
பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆசிரியர்களின் கனிவான அன்பை
பெற்று தரத் தேர்ச்சி பெறுவர். பள்ளி, கல்லூரிகளில் இருந்து இடையில்
விலகியவர்கள் மீண்டும் படிப்பு தொடர வாய்ப்பிருக்கிறது. அரசியல்வாதிகள்:
சமூகப்பணியில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். உரிய வரவேற்பு நிறைவாக
கிடைக்கும். உங்களின் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு ஆலோசனை சொல்லும் திறன்
படைத்த ஆதரவாளர்களை பெறுவீர்கள். எதிரிகள் பலமிழந்து போவர். புத்திரர்களை
அரசியலில் ஈடுபடுத்தி கெட்ட பெயர் வாங்க நேரிடும். கவனம். அரசு
அதிகாரிகளிடம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற தாமதமாகும். விவசாயிகள்:
மகசூல் அதிகமாக கிடைத்தாலும் உரிய விலை கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட
வாய்ப்புண்டு. கால்நடை பராமரிப்பு செலவும் அதிகமாகும். புதிய நிலம்
வாங்கும் விஷயத்தில் மோசடி செய்யப்படுவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் செய்ய வேண்டியது: மன்னார்குடி ராஜகோபால சுவாமியை வணங்கி வந்தால் வளம்தரும் வாழ்வு பெறுவீர்கள். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும் அருமறை முதல்வனை ஆழி மாயனை கருமுகில் வண்ணனை கமலக்கண்ணனை திருமகள் தலைவனை தேவதேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். |