சிம்மம் |
குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.
மகம், பூரம், உத்திரம் - 1
துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு ஆறாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார்.
குருவின் இந்த அமர்வு அனுகூலம் தரும் வகையில் இல்லை. இருப்பினும் குருவின்
பார்வை பெறுகிற ஸ்தானம் பலம்பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற சுப பலன்களை
அள்ளிவழங்கும். மகரத்தில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால்
முறையே ராசிக்கு 10, 12, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார்.
கடந்த
காலத்தில் குருவினால் பெற்ற நற்பலன், சமூக அந்தஸ்து ஆகியவை குறையக்கூடும்.
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு அமர்ந்துள்ளதால் உடல்நலக்குறைவு
ஏற்படும். அதற்கு உட்படாத வகையில் நல்ல பழக்கவழக்கங்கள், நேரத்துக்கு
சாப்பிடுதல் ஆகிய பழக்கங்களை பின்பற்ற வேண்டும். பேசும் வார்த்தையில்
சாந்தமும், கருணையும் நிறைந்திருக்கும். தன, குடும்ப ஸ்தானத்தில் குரு
பார்வை பதிவதால் பணவரவு திருப்திகரமாகும். இளைய சகோதரர்களுக்கு உதவ
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு
துணைநிற்பர்.
வீடு, வாகனம்
சார்ந்த வகையில் பராமரிப்பு பணிகளைச் செய்வதில் தடங்கல் ஏற்படும்.
புத்திரர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு உங்களைப்
பாடாய் படுத்துவர். நண்பர்களும் ஏதாவது எதிர்பார்த்தே உதவி செய்வார்கள்.
குலதெய்வ வழிபாடு நிகழ்த்துவதில் தடை வராது. பூர்வ சொத்தில் வளர்ச்சியும்
வருமானமும் உயரும். மாமன், மைத்துனரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் தகுதி,
திறமை கண்டு சிலர் பொறாமையுடன் எதிர்மறையாக செயல்படுவர். அவர்களின் செயலை
முறியடிக்க உரிய உபாயத்துடன் செயல்படுவது நல்லது.
பணவரவு
திருப்திகரமாக இருக்கும். ஆனால், வீண் செலவுகள் ஏற்பட்டு மிச்சம் பிடிக்க
வழியில்லாமல் போகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறக்க இனிய சந்தர்ப்பங்கள் பல
வகையிலும் துணைநிற்கும். குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களை
இருவரும் திறம்பட நிறைவேற்றுவீர்கள். பாதுகாப்பற்ற செயல்களிலும்
இடங்களிலும் பிரவேசிக்கக் கூடாது. சிலருக்கு சுயமாக தொழில் துவங்கும்
வாய்ப்பு உருவாகி நிறைவேறும். அதற்குரிய பொருளாதார வசதியும் கிடைக்கும்.
பயணங்களால் செலவு அதிகரிக்கும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில்
உடல்நலத்தில் கூடுதல் கவனம் கொள்வது உத்தமம்.
தொழிலதிபர்கள்:
தொழில் சார்ந்த வகையில் தேவையான வளர்ச்சி உருவாக குருவின் பார்வை பலமாக
உள்ளது. கம்ப்யூட்டர், பர்னிச்சர், வாசனை திரவியம், அழகுசாதனப் பொருள்,
மின்சாதனம், மீன்பிடி சாதனம், பால்பொருட்கள், இசைக்கருவிகள், குழந்தை
உணவு, அலங்காரப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், மார்பிள், பாத்திரங்கள்
உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தொழில்வளம் சிறந்து திருப்திகரமான பணவரவு
பெறுவர். மற்ற தொழில் செய்வோருக்கு இவர்களை விட வருமானம் கூடுதலாகும்.
நட்சத்திர ஓட்டல், கல்யாண மண்டபம், சுற்றுலா நிறுவனம், திரையரங்கம்
நடத்துபவர்கள் தொழில்வளர்ச்சி பெறுவர். அபிவிருத்தி பணி செய்வதற்காக வங்கி
கடனுக்கு முயற்சிப்பவர்களுக்கு கிடைத்து விடும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, கம்ப்யூட்டர், செல்போன், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்,
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வீட்டு உபயோக சாதனம், பர்னிச்சர், மின்சாதனம்,
கட்டுமானப் பொருட்கள், விளையாட்டு சாதனங்கள், விவசாய இடுபொருட்கள்,
பிளாஸ்டிக், அழகு சாதனப் பொருட்கள், ஸ்டேஷனரி, காய்கறி, மீன்,
செல்லப்பிராணிகள் வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர்.
வியாபாரம் சிறப்பாக இருந்தாலும் ஓரளவே லாபம் கிடைக்கும். திருட்டு,
விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு வசதிகளை உரிய முறையில் அவசியம்
ஏற்படுத்த வேண்டும்.
பணியாளர்கள்:அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையுடன் செயல்பட்டு பணி இலக்கை
நிறைவேற்றுவார்கள். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் ஏற்படும். குறிப்பாக தகவல்
தொழில்நுட்பம் சார்ந்த பணியில் உள்ளவர்கள் தங்கள் செயல் திறமையை
வெளிப்படுத்தி அதிக சலுகைகள் பெறுவர். சக ஊழியர்களின் பொறாமை காரணமாக
ஏற்படும் சிக்கலை தீர்க்கத்தான் போராட வேண்டியிருக்கும். கவனச்சிதறல் அறவே
கூடாது.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் பணியை சரிவர நிறைவேற்றுவர்.
நிர்வாகத்தின் பாராட்டும் சலுகையும் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின்
அன்பையும் சுமாரான பணவரவையும் பெற்று சந்தோஷ வாழ்க்கை நடத்துவர். தாய்வழி
சீர்முறை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள்
கூடுதல் ஆர்டர் பெற்று தொழில் வளர்ச்சி காண்பர். புதிய கிளை துவங்கும்
திட்டம் நிறைவேறும். கூட்டுத்தொழில் புரிய வரும் அழைப்புகளை புறக்கணிப்பது
நல்லது.
மாணவர்கள்:
கம்ப்யூட்டர், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்,
சட்டம், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், விவசாயம்,
மாடலிங், சினிமா படிப்புகள், ஜர்னலிசம், பிரின்டிங் டெக்னாலஜி, லேப்
டெக்னீஷியன், நிர்வாகம், மோட்டார் மெக்கானிசம் சார்ந்த மாணவர்களின்
படிப்பு பின்தங்க வாய்ப்புண்டு. மற்றவர்களும் தகுந்த கவனத்துடன்
படிப்பதால் மட்டுமே தரதேர்ச்சியை பெற முடியும். படிப்புக்கான பணவசதி சீராக
கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:
ஒவ்வொரு செயலையும் நிதானத்துடன் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சியினர்
மட்டுமின்றி உட்கட்சி பூசலாலும் இடைஞ்சல் ஏற்படும். நியாயம் உங்கள் பக்கம்
இருக்கும் வகையில் சிரமம் தவிர்க்கலாம். ஆதரவாளர்கள் உங்கள் மீது
அதிருப்தி கொள்ளும் நிலை இருக்கிறது. புத்திரர்கள் உங்களின் அரசியல் பணி
சிறப்புபெற உறுதுணையாக செயல்படுவர்.
விவசாயிகள்:
பயிர்வளர்ப்பில் இருக்கும் நடைமுறைகளை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே
மகசூல் அதிகரிக்கும். கால்நடை அபிவிருத்தியும், அதன் மூலமாக கூடுதல்
பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னை வந்து விலகும்.
நீங்கள் செய்ய வேண்டியது:
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜரை வழிபடுவதன் மூலம்
இக்கட்டான நிலை வரும் போது தப்பி விடலாம். கீழ்க்கண்ட பாடலை 11 முறை
பாராயணம் செய்யவும்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!