கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:45 AM

Welcome Guest | RSS Main | மிதுனம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 2
Guests: 2
Users: 0

குருபெயர்ச்சி பலன்கள்

மிதுனம்

(50/100) + சகோதர உதவி, - பணவரவில் தடங்கல்


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3


நற்செயல்கள் புரிந்து மனமகிழ்ச்சி பெறுகின்ற மிதுனராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் உங்கள் ஒவ்வொரு செயலையும் நிதானமுடன் மேற்கொள்ள வேண்டும். மகரத்தில் இடம்பெற்றுள்ள குருபகவான் ராசிக்கு 12, 2, 4 ஆகிய இடங்களை முறையே தனது 5, 7, 9 பார்வையால் பார்க்கிறார். எட்டாம் இட குரு மனதில் பலவித குழப்ப சிந்தனைகளை உருவாக்குவார். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதால் நற்பலன்கள் உருவாகும். பணவரவில் தடங்கல் உண்டாகும். வேலை, தொழிலை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டி வரும். நீங்கள் பொறுமையுடனும், பண்புடனும் பேசினாலும் கூட அது பிறருக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக அமையும்.


வீடு, வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் கடைபிடிப்பது உரிய பாதுகாப்பைத்தரும். தாய்வழி உறவினர் உங்கள் நல்வாழ்வில் அக்கறை கொள்வர். நண்பர்கள் ஒரு உதவி செய்தால், உங்களிடம் பத்து உதவியை எதிர்பார்ப்பார்கள். புத்திரர்கள் திறமையுடன் செயல்பட்டு பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். உடல்நலம் சுமாராக இருக்கும். சமரச முயற்சிகளில் ஈடுபட்டால், சட்டசிக்கலில் மாட்ட வேண்டி வரும். சில செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பாதுகாப்பு குறைவான இடங்களில் பிரவேசிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். மூத்தசகோதரர்களால் உதவி, ஆலோசனை கிடைக்கும்.


தொழிலதிபர்கள்: தொழில்சார்ந்த வகையில் இருப்பதைப் பாதுகாப்பதே சிரமமாக இருக்கும். வளர்ச்சி திட்டங்களை இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு செயல்படுத்தலாம். டெக்ஸ் டைல்ஸ், பர்னிச்சர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழிலதிபர்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் மந்த நிலைக்கு உள்ளாவர். அளவான மூலதனத்துடன் தொழில் நடத்துவது நல்லது. உணவு பண்டங்கள், தேன், சாக்லெட், நிதி நிறுவனம், பள்ளி, கல்லூரி நடத்துபவர், வீட்டு உபயோக சாதனங்கள் தயாரிப்பு, ஸ்டேஷனரி சார்ந்த தொழில் செய்பவர்கள் சுமாரான வளர்ச்சி பெறுவர். சில சமயங்களில் கடன் வாங்கி தொழிலை நடத்த வேண்டிய நிலை வரலாம். தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஸ்டேஷனரி, மளிகை சாமான்கள், விளையாட்டு பொருட்கள், சமையலறை சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், மருந்து, லாலா கடை நடத்துபவர்கள் லாபம் ஈட்ட கடும் சிரமம், போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுடன் கறாராக பேசினால், இருப்பதையும் இழக்க நேரிடும். கவனம். தேவைக்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்வதால் பொருள் சேதாரம் வராமல் தவிர்க்கலாம். வியாபாரத்திற்கு பயன்படும் வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். கடன் கொடுத்தால் வசூல் செய்வதில் தாமதம் ஏற்படும். எல்லா வியாபாரிகளுக்குமே போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிரமமான சூழ்நிலைகளை அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமக்கென வழங்கப்பட்ட பணியை முழுமுயற்சியுடன் நிறைவேற்ற வேண்டும். கவனக்குறைவாக செயல்பட்டால் நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும். குறிப்பாக அக்கவுண்ட்ஸ், ஸ்டோர்கீப்பர், நிறுவன மேற்பார்வை, உணவுப்பொருள் தயாரிப்பு, கட்டுமானம், அழகுப் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். பணியில் குறைபாடு ஏற்பட்டு பண இழப்புகளை சந்திக்கும் சூழ்நிலையும் உள்ளது. கவனம்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் அன்றாட பணிகளை முடிக்கவே ஏதாவது ஒரு வகையில் சிரமத்தை எதிர்கொள்வார்கள். பணியில் உற்சாகமின்மை, உடல் சோர்வால் மனநிலை என்னவோ போல் இருக்கும். இதனால் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். குடும்ப பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கே திண்டாட வேண்டி வரும். ஆனால், புத்திரர்களின் ஒத்துழைப்புடன் அவர்களது வளர்ச்சியில் கவனம் செலுத்தி முன்னேற்றச் செய்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான லாபமே பெறுவர். வளர்ச்சிப்பணிகள் மந்தகதியிலேயே நடக்கும். மிதமான அளவிலேயே ஆர்டர்கள் கிடைக்கும்.


மாணவர்கள்: வங்கியியல், ஆசிரியர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், கம்ப் யூட்டர், சட்டம், இன்ஜினியரிங், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், விவசாயம், ஆடிட்டிங், இலக்கியம், தொல்பொருள் ஆராய்ச்சி, சாஸ்திரம், ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் உற்சாகமாகப் படித்து சிறந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கும் ஓரளவு நல்ல நிலையே. பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். படிப்புக்கான பணவசதி சீராக இருக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.


அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் சில செயல்பாடுகள் அமையும். ஆதரவாளர்களுக்காக செலவழித்து பண இருப்பு குறைந்து போகும். அரசியல் பணிகளுக்கு புத்திரர்களின் உதவி உறுதுணையாக இருக்கும். அதிகாரிகளிடம் வைத்த கோரிக்கைகள் அவ்வளவு எளிதில் நிறைவேறாது. கடுமையாக அவர்களுடன் போராட வேண்டி வரும். இதனால் பிரச்னைகளும் ஏற்படும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் உற்பத்தி செலவு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பில் மனநிறைவும், அதனால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் தலைதூக்கும். அவை உங்களுக்கு சாதகமற்ற போக்கை உருவாக்கும். மென்மையான போக்கை கடைபிடியுங்கள்.


நீங்கள் செய்ய வேண்டியது: திருக்கடையூர் அபிராமியை வழிபடுவதால் சோதனைகள் குறையும். கீழ்க்கண்ட பாடலை 11 முறை தினமும் பாராயணம் செய்யவும்.


நாயகி நான்முகி நாராயணி


கை நளின பஞ்ச


சாயகி சாம்பவி சங்கரி


சாமளை சாதி நச்சு


வாயகி மாலினி வாராகி


சூலினி மாதங்கி என்று


ஆயகி ஆதி உடையாள்


சரணம் அரண் நமக்கே!

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz