கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:55 AM

Welcome Guest | RSS Main | ரிஷபம். | Registration | Login
Site menu

Statistics

Total online: 5
Guests: 5
Users: 0

குருபெயர்ச்சி பலன்கள்

பிறரை வசீகரிக்கும் வகையில் பேசும் திறனுள்ள ரிஷபராசி அன்பர்களே!


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.




(80/100) + பணவரவு ஜோர், - தம்பட்ட எண்ணம்


கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2




உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். குருபகவானின் 5, 7, 9 ஆகிய பார்வை முறையே ராசி மற்றும் ராசிக்கு 3, 5ம் இடங்களில் பதிகிறது. குருவின் பார்வை பெறுகிற இடங்கள் அபரிமிதமான நற்பலன்களை வழங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். உங்கள் ராசியை குரு பார்ப்பதால் மனதில் தெளிந்த சிந்தனையும் புத்துணர்வும் பெறுவீர்கள். துவங்கும் பணிகள் வெற்றி பெற்றுவிடும். இந்த வெற்றியால், என்னை விட இந்த உலகில் யார் வல்லவர் என்ற எண்ணம் தோன்றக்கூடும். இப்படி தம்பட்டம் அடிப்பதை விட்டுவிடுங்கள். பணவரவு தாராளமாக இருக்கும். வீடு, வாகனம் சார்ந்த வகையில் திருப்திகரமான நிலை உண்டு. உங்கள் இல்லம் தேடி வரும் உறவினர், விருந்தினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக, தாய்வழி உறவுகளுடன் கருத்து வேற்றுமை கூடுதலாகும். ஆனால், தந்தைவழி உறவினர்கள் உங்களின் செயலை உற்றுகவனித்து வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனை வழங்குவர். ராசிக்கு ஐந்தாமிடம் குரு பார்வையைப் பெறுவதால், புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து பெற்றோரை மகிழ்விப்பர். உடல்நலத்தை கவனமுடன் பாதுகாத்து வளம்தரும் வாழ்க்கையைப் பெறுவீர்கள். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு வரும். கடன்கள் தீர்ந்து விடும். இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும்.


கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து மகிழ்ச்சியுடன் இருப்பர். சமூக அந்தஸ்து உயர நெருங்கிய நண்பர்கள் உதவி செய்வர். கடந்த காலத்தில் இருந்த தேவையற்ற செலவு குறைந்து சேமிக்கும் நிலை ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாமிடத்தில் குரு என்பர். இதனால் பணியிலோ, தொழிலிலோ, குடும்ப விவகாரங்களி லோ சில குறைபாடுகளே இருந்தாலும் கூட அதில் இருந்து தப்பி விடும் சூழ்நிலை ஏற்படும். மே, ஜூன், ஜூலையில் உடல்நிலை பாதிப்பு, மனநிம்மதி இழத்தல் ஆகிய பலன்கள் ஏற்படலாம்.


தொழிலதிபர்கள்: தொழில் சார்ந்த வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்தி நற்பெயரும் தாராள பணவரவும் பெறுவீர்கள். வெளியூர் பயணம் கூடுதல் அனுபவத்தையும், மகிழ்ச்சியையும் தரும். இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், தோல், பிளாஸ்டிக், ரசாயனப்பொருட்கள், உணவு பண்டங்கள், வாசனை திரவியம், வீட்டு அலங்கார சாதனம், செல்போன், கம்ப்யூட்டர், மின்சார உபகரணங்கள், மார்பிள், ரப்பர் பெருட்கள்,, அச்சகம் நடத்துபவர், பிளக்ஸ், பெயின்ட், காகிதத் தொழில் அதிபர்கள் அதிக பொருள் உற்பத்தியும் புதிய ஒப்பந்தமும் கிடைக்கப் பெறுவர். இதனால் பணவரவு தாராளமாகும். அபிவிருத்தி பணிகளை இக்காலத்தில் சிறப்பாகச் செய்வர். பிற தொழில் அதிபர்களும் தொழில் சிறந்து ஆதாய பணவரவு பெறுவர். உபதொழில் துவங்கவும் குருவருள் பலமாக உள்ளது.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், பாத்திரம், பர்னிச்சர், மின்சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள், பழச்சாறு, குளிர்பானம், காய்கறி, உணவுபண்டங்கள், அழகு சாதன பொருட்கள், விளையாட்டு பொருட்கள், பால் பொருட்கள், காகிதம், அலங்கார பொருட்கள், வண்ண மீன்கள், இறைச்சி, பேக்கரி சார்ந்த வியாபாரிகள் கூடுதல் வாடிக்கையாளர் பெற்று வளர்ச்சியும், ஆதாய பணவரவும் பெறுவர். பிற பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் கூடுதல் விற்பனை அமைந்து சேமிக்கும் வகையில் லாபம் பெறுவர்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாகத்துடன் செயல்புரிவர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம், அபிவிருத்தி கடன் போன்றவை எளிதாக பெறலாம். இயந்திரங்களை இயக்குதல், தொழில்நுட்ப பராமரிப்பு, மார்க்கெட்டிங், மேற்பார்வை பணி, வாகன உதிரிபாகம் உற்பத்தி, காகிதம் சார்ந்த பணிகளில் உள்ளவர்கள் மிக அதிகமான வருமானத்தைப் பெற வாய்ப்புண்டு. நிர்வாகத்திடம் நற்பெயரும் உரிய சலுகையும் கிடைக்கும். சக பணியாளர்களுடன் சீரான நட்புறவு வளரும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகமாகச் செயல்பட்டு பணியை சிறப்பாக நிறைவேற்றுவர். பணியில் உயர்வு, விரும்பிய இடமாற்றம், சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல் அன்பும், கூடுதல் பணவசதியும் பெற்று மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்துவர். புத்திரப்பேறு, ஆபரணச் சேர்க்கை வகையில் அனுகூல பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர் கிடைத்து தொழிலில் வளர்ச்சித்தன்மை காண்பர். ஆதாய பணவரவை தொழிலின் அபிவிருத்திக்கு மூலதனமாக பயன்படுத்துவர்.


மாணவர்கள்: கம்ப்யூட்டர், சட்டம், கேட்டரிங், லேப் டெக்னீசியன், சிவில் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல், ஆடிட்டிங், விவசாயம், மருத்துவம், தொல்பொருள் ஆராய்ச்சி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஓவியம், இலக்கியம், ஜர்னலிசம், சாப்ட்வேர் இன்ஜினியரிங், பிரின்டிங் டெக்னாலஜி பயிற்சி பெறும் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி தரத்தேர்ச்சியும் நற்பெயரும் பெறுவர். பயிற்சியை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்கள் தகுதியான வேலை வாய்ப்பை பெறுவர். பிற மாணவர்களும் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.


அரசியல்வாதிகள்: சமூகத்தில் இருக்கும் நற்பெயரை வளர்க்க கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். ஆதரவாளர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பர். அரசு அதிகாரிகளிடம் இதமுடன் நடந்து மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய பதவி ஒன்று எளிதாக கிடைக்கும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பிலும் கால்நடை பராமரிப்பிலும் உரிய கவனத்துடன் செயல்பட்டு தாராள மகசூலும் பணவரவும் பெறுவீர்கள். புதிய சொத்து வாங்கும் எண்ணம் குருவருளால் நிறைவேறும்.


நீங்கள் செய்ய வேண்டியது: ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபட்டு வருவதன் மூலம் சகல சவுபாக்கியமும் பெறலாம். கீழ்க்கண்ட பாடலை தினமும் 11 முறை பாராயணம் செய்யவும்.


பச்சைமா மலைபோல் மேனி


பவளவாய் கமலச்செங்கண்


அச்சுதா! அமரர் ஏறே!


ஆயர் தம் கொழுந்தே என்னும்


இச்சுவை தவிர யான்போய்


இந்திரலோகம் ஆளும்


அச்சுவை பெறினும் வேண்டேன்


அரங்கமா நகருளானே!

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz