2008, டிசம்பர் 6ம் தேதி முதல் 2009, டிசம்பர் 8 வரை
(50/100), + நிலம் வாங்கலாம், - வேலைக்கு இடைஞ்சல்
அசுவினி, பரணி, கார்த்திகை
உங்கள்
ராசிக்கு பத்தாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார்.
இதனால் சுமாரான பலன்களைப் பெறுவதற்கே வாய்ப்புண்டு. தற்போது குருபகவான்
ராசிக்கு பத்தாம் இடத்தில் அமர்வதால், மனதில் குழப்பமும், பணச்செலவும்
அதிகரிக்கும். இருப்பினும் மகரத்தில் உள்ள குரு உங்கள் ராசிக்கு 2, 4, 6
ஆகிய இடங்களை முறையே தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் பார்ப்பதால், குருவின்
பார்வை பெறுகிற இடங்கள் உங்களுக்கு சில நற்பலன்களையும் வழங்கும்.
தன,
குடும்ப, வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பணவரவை அதிகம் பெற
வாய்ப்புகள் உருவாகும். அதே சமயம் வரவுக்கு மீறிய செலவினங்களால் சேமிக்க
இயலாமல் போகும். குருபார்வையால் வீடு, வாகன வகையில் வெகுநாள் திட்டமிட்ட
வளர்ச்சி மாற்றங்களை செய்வீர்கள். சிலருக்கு வீடு, கட்டட மாற்றம் செய்ய
வேண்டி வரும். தாய்வழி உறவினர்கள் உங்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வர்.
புதிய நிலம், வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். நிலம் தொடர்பான
வழக்குகளில் அனுகூல வெற்றி கிடைக்கும். புத்திரர்கள் பெற்றோருக்குத்
தெரியாமல் சில செயல்பாடுகளில் ஈடுபடலாம். அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி
திருத்துங்கள். உடல்நலம் பலம்பெறும். கடனை ஓரளவே சரி செய்ய இயலும். கணவன்
மனைவி ஒற்றுமை சீராக இருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டிய
நிர்ப்பந்தம் வரும். முக்கிய வீட்டு சாதனங்கள் வாங்க அனுகூல சந்தர்ப்பம்
உருவாகி நிறைவேறும். நல்லவர்கள் சிலர் நண்பராக அமையும் கிரகநல்லருள்
உள்ளது. தடைபட்ட திருமணம் இனிதாக நிறைவேறும். பயணங் களால் பணச்செலவு
அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள்:
தொழில் சார்ந்த வகையில் ஒவ்வொரு செயலையும் மிக கவனத்துடன் மேற்கொள்ள
வேண்டும். இருப்பதைப் பாதுகாக்கவே திண்டாட வேண்டியிருக்கும். ஆட்டோமொபைல்
உதிரிபாகங்கள், டெக்ஸ்டைல்ஸ், பாத்திரம், வீட்டு உபயோக சாதனங்கள்,
மருந்து, கட்டுமான பொருட்கள், உணவு பண்டங்கள், பர்னிச்சர், காகிதம்,
எழுதுபொருட்கள், விவசாய இடுபொருட்கள் உற்பத்தியாளர்களும், லாட்ஜ்,
ஆஸ்பத்திரி நடத்துவோரும் அதிக லாபத்தை எதிர்பார்க்க இயலாது. கூடுதல்
கவனத்துடன் செயல்பட வேண்டும். மற்ற தொழில் செய்பவர்களுக்கு சுமாரான லாபம்
இருக்கும். திறமை மிகுந்த பணியாளர்கள் உங்கள் நிறுவனத்தை விட்டு விலக
நேரலாம்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், விளையாட்டு
சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், பர்னிச்சர், காய்கறி, உணவு பண்டங்கள்,
ஸ்டேஷனரி, இறைச்சி, மளிகை பொருட்கள், குளிர்பானவகை, விவசாய இடுபொருட்கள்,
உழவு சாதனம், பெயின்ட் வியாபாரம் செய்பவர்கள் திண்டாடிப் போகும் சூழல்
உண்டாகலாம். பிற வியாபாரிகள் ஓரளவு லாபமடைவர். சிலர் புதிய கட்டடங்களுக்கு
கடைகளை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிரமங்களை எதிர்நோக்கும்
காலம் இது. "பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சொல்'. ஆகவே தொழில்
வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும். பணியில் ஆர்வக்குறைவு மிகுந்து
நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் கிரகநிலை உள்ளது. கவனம்.
இயந்திரங்களைக் கையாளுபவர்கள், தொழில்நுட்ப பணி சார்ந்தவர்கள் முழு
கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே இயந்திரத்தில் பழுது வராத தன்மை
பெறுவீர்கள். இல்லையென்றால் இதற்கு பொறுப்பேற்று சம்பளத்தில் பிடித்தம்
செய்யும் சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.
பெண்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் மிகுந்த பொறுமையுடன்
பணிபுரிவதால் மட்டுமே அவப்பெயர் வராத தன்மையைப் பெறமுடியும். பணிச்சுமை,
தேவையற்ற இடமாற்றம் போன்ற அனுகூலக்குறைவு ஏற்படும். குடும்பப் பெண்கள்
செலவுக்கு திண்டாடும் சூழல் ஏற்படும். கணவரின் சம்மதமின்றி எவரிடமும் கடன்
பெறக்கூடாது. இதனால் குடும்பத்தில் சச்சரவும், நிம்மதி குறைவும் ஏற்படும்.
சுயதொழில் புரியும் பெண்கள் செய்யும் தொழிலில் ஆர்வம் குறைந்து இக்கரைக்கு
அக்கரை பச்சை என்கிற எண்ணம் வளர்ந்து மாற்றுத்தொழிலை நாட வேண்டி வரலாம்.
மிகவும் கவனமாக இருக்கவும்.
மாணவர்கள்:
தொழில் நுட்பம், இலக்கியம், மாடலிங், பிரின்டிங், ஓட்டல் மேனேஜ் மென்ட்,
சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், வாகன தொழில்நுட்பம், விவசாயம்,
ஏரோநாட்டிக்கல், கேட்டரிங், கம்ப்யூட்டர், மருத்துவம், நிதி நிர்வாகம்
சார்ந்த படிப்பில் உள்ள மாணவர்கள் குரு பகவானின் அருளால் சிறந்த
தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறை மாணவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்பை
நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க
வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள்:
சமூகப்பணியில் கவனமுடன் செயல்படுங்கள். ஆரவாரத்துடன் செயல்பட்டால்
தேவையற்ற அவப்பெயர் வந்துசேரும். அரசு அதிகாரிகளிடம் கடுமை காட்டும்
சூழ்நிலை அமைந்து வழக்கு விவகாரத்தில் சிக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகலாம்.
அரசியலுடன் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடன்பட நேரலாம்.
விவசாயிகள்: மகசூல் குறைவாக இருக்கும். விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காது. கால்நடைகளாலும் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.
நீங்கள்
செய்ய வேண்டியது: விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரை
வழிபடுவதால் சிக்கல் தீர்ந்து நற்பலன் ஏற்படும். நரசிம்ம மூல மந்திரத்தை
11 முறை தினமும் பாராயணம் செய்யவும்.
உக்ரம் வீரம் மகாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்