கும்பம் |
தியாக மனோபாவத்துடன் செயல் படும் கும்ப ராசி அன்பர்களே! உங்க
ராசிக்கு ஏழாம் இடமான சிம்மராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாறாருங்க. தனது
3, 7, 10 ஆகிய பார்வையால் ராசிக்கு 9, ராசி, 4 ஆகிய இடங்களை
பார்க்கிறாருங்க. இப்போதைய நிலையை "கண்டச் சனின்னு'
சொல்வாங்க. இதனால் சிரமமான சூழ்நிலைகள் ஏற்படுமுங்க. ஆனாலும் கூட,
மனதிடமும், பிறருக்கு உதவும் தன்மையும் இருக்கிறதாலே உங்களுக்கு சிரமங்களை
அவர் குறைச்சு தருவார். அத்தோடு சனிக்கு சொந்தவீடு கும்பங்கிற முறையிலும்
சலுகை காட்டுவார். பணவரவு குறைச்சலாத்தான் இருக்குமுங்க. சமூக பணிகள்
தொடர்பாக கண்டனங் களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். வீடு, மனையில் இப்போ
இருக்கிற வசதிக்கு மேலே புதுசா ஏதும் செஞ்சுக்க வாய்ப்பில்லீங்க. வாகன
பராமரிப்பு செலவு கூடுமுங்க. அத்தோட அதை பாதுகாக்கிறதில கவனம் குறைஞ்சா,
யாராவது எடுத்துட்டு போயிடற நிலை தெரியுதுங்க. கவனமா இருங்க. தாய்வழி
உறவுக்காரங்களோட மனஸ்தாபம் நீங்குறது சிரமம்தாங்க. புத்திரர்கள் நீங்க
சொன்னதைக் கேட்டு, பெத்தவங்களுக்கு பெருமை தேடித் தருவாங்க. பூர்வ சொத்து
வருமானம் நல்லா இருக்குமுங்க. இதை வச்சு இப்போ வர்ற பணத்தட்டுப்பாட்டை
ஈடுகட்ட வழி பிறக்குமுங்க. உடல் நலம் நல்லா இருக்குமுங்க. எதிரிகள்
ஒதுங்கிப் போயிடுவாங்க. கணவன்
மனைவி ஒற்றுமையிலே பாதிப்பு ஏற்படுமுங்க. விட்டுக் கொடுத்து போயிட்டா
பிரச்னை வராதுங்க. மனைவியோட உடல் நலத்திலே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
தெரியுதுங்க. இதனாலே மருத்துவ செலவு கூடுமுங்க. நண்பர்கள் ஒதுங்கிப்
போவாங்க. கருத்துவேறுபாடு ஏற்படுற வாய்ப்பிருக்கிறதாலே பேச்சிலே கவனம்
வேணுமுங்க. தந்தைவழி
உறவுக்காரங்க உங்ககிட்ட பணம் கேட்டு வருவாங்க. தொழில், உத்தியோகம்,
வியாபாரம் சுமாரா நடக்குமுங்க. திருட்டு, கையாடல் மாதிரி நிலைமைகள்
தெரியுறதாலே, பணப்பொறுப்பு உங்க கையிலேயே இருக்கட்டும். யாரை நம்பியும்
ஒப்படைக்காதீங்க. மூத்த சகோதரர் உங்க நல்வாழ்வுக்கு உதவி செய்வாருங்க.
பயணம் போனா பாதுகாப்பான இடத்திலே உட்காருங்க. திருமண முயற்சி
செய்றவங்களுக்கு சாதகமான நிலை தெரியுதுங்க. தொழிலதிபர்கள்:
அடுக்குமாடி கட்டி விற்பவர்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல், தங்கும்
விடுதிகள், உணவு பண்டம் உற்பத்தி, ஆஸ்பத்திரி, ஒப்பந்தக்காரர்கள், ஸ்டீல்
பொருள், காப்பி, தேயிலை, மருத்துவ கல்லூரி, இறைச்சி ஏற்றுமதி உள்ளிட்ட
தொழில் செய்றவங்களுக்கு வேலை கடுமையாக இருந்தாலும் ஓரளவுக்கு லாபம்
கிடைக்குமுங்க. சமூக அந்தஸ்துள்ள புதிய பதவியும் கிடைக்குமுங்க. புதிய
கிளை துவங்குறதா இருந்தா ரொம்ப சிந்தனை பண்ணி, சாதிக்க முடியுங்கிற
நம்பிக்கை இருந்தா ஆரம்பியுங்க, போதும். பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்களுக்கு போதாத நேரமுங்க. சூழ்நிலையை
புரிஞ்சு ஆபீசிலே நடந்துக்கணுமுங்க. சக பணியாளர்களோட வீண் விவாதமெல்லாம்
கூடாதுங்க. காவல், மருத்துவம், விவசாயம், ராணுவம், ரத்தவங்கி சார்பான
பணிசெய்றவங்க ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணுமுங்க. பணவரவு பெருசா
எதிர்பார்க்க வேண்டாங்க. வேகமா வண்டி ஓட்டாதீங்க. சேமிப்பு பணம்
கரையுமுங்க. ஆனாலும், அதை விரயமாக்கிடாம, புதுச்சொத்து, பொருள் வாங்க
பயன்படுத்திகிட்டா நல்லதுங்க. வியாபாரிகள்:
விவசாய பொருள், உணவு பண்டம், எண்ணெய், மருந்து, மருத்துவ உபகரணம், ரப்பர்,
மலைத்தோட்ட பயிர்வகை, சணல் பொருள், தென்னை, பனை சார்ந்த பொருள், பேக்கரி,
கட்டுமானப் பொருள், இறைச்சி, பழம், மின்சார உபகரணம், மண்பாண்டம், கைவினைப்
பொருள் வியாபாரம் செய்றவங்களுக்கு கண்டச்சனி அதிக கஷ்டம் தராதுங்க.
வாடிக்கையாளர்களை அனுசரிச்சு நடந்துகிட்டா லாபத்துக்கு பங்கம் வர
வாய்ப்பில்லீங்க. மற்ற பொருட்களை விற்பனை செய்றவங்களும் நஷ்டம் வராம
தப்பிச்சுடலாம். ஆனால், அவசரப்பட்டு கடனுக்கு வியாபாரம் பண்ணினா வசூல்
தடங்கல் ஏற்பட்டு சிக்கலிலே மாட்டிகிடுற நிலைமையிருக்கு. மாணவர்கள்:
தொழில்நுட்பம், கம்ப்யூட்டர். மருத்துவம், பவுதிகம், ரசாயனம், விவசாயம்,
டெக்ஸ்டைல் டெக்னாலஜி, கேட்டரிங், அரசு நிர்வாகம், சட்டம், நீதித்துறை,
டர்னிங், வெல்டிங், சிவில் இன்ஜினியரிங் துறையிலே படிக்கிறவங்களுக்கு கடமை
உணர்ச்சி உந்தித்தள்ளி சிறப்பான தேர்ச்சி பெறுவீங்க. மற்ற துறையிலே
படிக்கிறவங்க மந்தநிலை அடையுற வாய்ப்பு தெரியறதாலே, உஷாரா படிச்சா நிறைய
மார்க் வாங்குறதுக்கு வாய்ப்பிருக்குங்க. சக மாணவர்களோட கருத்து வேறுபாடு
உண்டாகுமுங்க. பணவசதி ஓரளவுக்கு கிடைக்குமுங்க. பெற்றோர் உங்ககிட்ட ரொம்ப
எதிர்பார்ப்போட இருப்பாங்க. அது எரிச்சலை ஏற்படுத்துற மாதிரி தெரியும்.
ஆனா, அவங்களோட அறிவுரையை ஏத்துகிடறது தான் நல்லதுங்க. பெண்கள்:
அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்க மந்தமா இருப்பாங்க. வேலை தொடர்பா
நிர்வாகம் சொல்றதை கேட்டு நடந்துகிட்டா நல்லதுங்க. அலுவலகத்திலே
விண்ணப்பிச்ச கடன் தொகை கிடைக்குமுங்க. குடும்பத்தை கவனிக்கிறவங்களுக்கு
கணவரோட கருத்து வேறுபாடு ஏற்படுமுங்க. தாய்வீட்டு உதவி ஓரளவு தான்
கிடைக்குமுங்க. சேமிப்பு பணத்தை எடுத்து செலவழிக்க வேண்டியிருக்குமுங்க.
சுய, கூட்டுத்தொழில் செய்றவங்க, வியாபாரம் சார்ந்தவங்களுக்கு லாபம்
அதிகமில்லீங்க. இன்னும் வியாபாரத்துலே கத்துக்கிட வேண்டிய நுணுக்கம்
எவ்வளவோ இருக்குங்கிறதை இந்த பெயர்ச்சி காலத்திலே சனி உங்களுக்கு
காட்டுவாருங்க. உத்தரவாதம் இல்லாம கடனுக்கு பொருளை விற்றா சிக்கலில்
மாட்டிக்குவீங்க. அரசியல்வாதிகள்:
கடந்த காலத்திலே செஞ்ச பணிகளுக்குரிய பலனை இப்போ அனுபவிப்பீங்க. இனிமையா
பேசி காரியம் சாதிப் பீங்க. ஆதரவாளர் கூடுதல் நம்பிக்கை வைப்பாங்க.
பயணத்திலே பாதுகாப்பு குறைச்சலா தெரியுது. கவனம் வேணுமுங்க. புத்திரர்கள்
சாதகமா செயல்படுவாங்க. அரசியலோட தொழில் நடத்துறவங்க வேறு யார்
பொறுப்பிலாவது அதை கொடுத்தா வீணா போகுமுங்க. விவசாயிகள்: உழைப்புக்கேத்த பலன் இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. பணவரவு ஓரளவுக்கு தான் இருக்குங்கிறதாலே மகசூல் செலவுக்கு சிரமப்பட வேண்டியிருக்குமுங்க. இப்போது சந்தையில் எது டிமாண்டோ அதை பயிர் வச்சா தப் பிச்சுகிடலாமுங்க. கால்நடைகளும் பராமரிப்பு செலவை கூட்டுமுங்க. |