மகரம் |
எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்து நிற்கும் மகர ராசி அன்பர்களே! உங்க
ராசிக்கு ஏழாம் இடத்தில் கடந்த இரண்டரை வருஷமா கண்டச்சனிகிட்டே
சிக்கியிருந்தீங்க. இப்போ அஷ்டம சனிகிட்டே மாட்டியிருக்கீங்க. தனது 3, 7,
10ங்கிற பார்வையாலே ராசிக்கு 10, 2, 5ங்கிற இடங்களை பார்க்கிறாரு.
அகப்பட்டவனுக்கு அட்டமத்துலே சனின்னு சொல்றதை கேள்விப்பட்டிருப்பீங்க!
சரி.. இதனாலே என்னாகும்... பலனைக் கேளுங்க. வேலையிலே
ரொம்ப ரொம்ப கண்ணும் கருத்துமா இருங்க! தகுதிக்கு மீறி கடன் வாங்குறது,
வீடு கட்டுறது, ஆடம்பரப் பொருள் வாங்குறது... இதையெல்லாம் செஞ்சா
அட்டமத்துகாரர் கிட்டே மாட்டிகிட்டு அவஸ்தைப் பட வேண்டியிருக்கும். பேசும்
போது நிதானம் வேணுமுங்க. பணவரவு இடிக்குமுங்க. தம்பிங்க சாதனை செய்வாங்க. புத்திரர்கள்
கொஞ்சம் இடக்கு பண்ணத்தான் செய்வாங்க. பொறுமையா புத்திமதி சொன்னா புரிஞ்சு
நடந்துக்குவாங்க. பூர்வசொத்து தொடர்பான வில்லங்கம் வருமுங்க. எதிரிங்க
உங்க வேலையை தாங்களே செஞ்சதா சொல்லி ஆதாயம் அடைஞ்சிட்டு போயிடுவாங்க.
அவங்க சகவாசமே வேண்டாங்க. கடனை அடைக்க கஷ்டப்படுவீங்க. வழக்கு விவகாரம்
இழுத்தடிக்கும். சில நல்ல பலன்களையும் இவர் தருவாருங்க. ஆரோக்கியம்
சீராக இருக்குமுங்க. வீடு, மனை, வாகன வகையில் எதிர்பாராத அபிவிருத்தி பணி
செய்வீங்க. தாயின் அன்பும் ஆசியும் நிறைய கிடைக்குமுங்க. தாயைக்
கவனிக்கிறவங்களை சனீஸ்வரன் காப்பாத்துவாருங்க. கணவன், மனைவி ஒற்றுமையோட
செயல்படுவாங்க. சில
கெடுபலன்களையும் சனீஸ் வரன் தருவாருங்க. பல காரியங்களை கடன் வாங்கித்தான்
செயல்படுத்த வேண்டி வருமுங்க. தொழில், உத்தியோகம், வியாபாரத்திலே
இருக்கிறவங்க அதை தக்க வச்சுகிட்டா போதுமுங்க! கடினமான பணி செய்றவங்க
பாதுகாப்பு விஷயத்திலே ரொம்ப கவனமா இருக்கணுமுங்க. வெளிநாட்டிலே வேலை செய்றவங்களுக்கு கெட்ட பழக்கங்கள் வர வாய்ப்பிருக்கு. கவனமா இருங்க! தொழிலதிபர்கள்:
ரெடிமேட், நகை, கேமரா, வீடியோ, கம்ப் யூட்டர், மொபைல், இசைக்கருவி, வாசனை
திரவியங்கள், செயற்கை வைரம், பட்டு, பால்பொருள், கல்யாண மண்டபம், சுற்றுலா
நிறுவனம், பஸ் அதிபர்கள் உள்ளிட்டோருக்கு தொழில் நிலைமை அவ்வளவு
சரியிருக்காதுங்க. இதம்பதமா செயல்பட்டா இருக்கிறதை தக்க வைச்சுகிடலாமுங்க.
மத்த துறையிலே இருக்கிறவங்க ஓரளவு லாபத்தோட இந்த கால கட்டத்தை
கடந்துடலாமுங்க. தகுதி, திறமை வாய்ந்த நிர்வாகிகளை பணிக்கு அமர்த்தினா
நல்லதுங்க. வாகன அபிவிருத்தி உண்டுங்க. பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்க ரொம்ப ரொம்ப கவனமா வேலை
செய்யணுங்க. குறுக்கீடுகள் நிறைய வருமுங்க. பொறுமையா இருக்க
கத்துக்கிடுங்க. சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவாங்க. பணயிடத்துலே
தகுதிக்கு மீறி பணம் கொடுக்கல், வாங்கல் வச்சுகிடாதீங்க. தொழில்நுட்பம்,
கைவினைப் பொருள் தயாரிப்பு, இயந்திரம் சார்ந்த பணியில் இருக்கிறவங்க
குளறுபடிக்கு இடம் கொடுக்காம, வேலையிலே ரொம்ப கரெக்டா இருக்கணுமுங்க.
ஆபீஸ் பண விஷயத்தை கவனிக்கிறவங்க பாதுகாப்பு விஷயத்திலே கவனமா இருக்கணும்.
சாவியை பத்திரமா வச்சுகிடணும். தந்தைவழி உறவுக் காரர் ஒருத்தர் வேலை
விஷயத்திலே உதவுவாருங்க. சம்பள உயர்வு, சலுகையெல்லாம் உங்க கடமை உணர்வை
பொறுத்து, சனீஸ்வரன் மனசு வச்சாதான் கிடைக்குமுங்க. வியாபாரிகள்:
பால் பொருள், எலக்ட்ரானிக்ஸ், இசைக்கருவி, அலங்காரப் பொருள், பர்னிச்சர்,
கம்பளி, தோல், காலணி, சூட்கேஸ், குடை, வெள்ளி பாத்திரங்கள், நகை,
பீங்கான், கண்ணாடி பொருட்கள், ரெடிமேட் ஆடை, காகிதம் கவரிங் நகைகள்
வியாபாரிகளுக்கு பாதகம் இல்லீங்க. நீங்க கவனமா இருந்தா போதும். பெரிய
நஷ்டங்கள் வர்றதுக்கு வாய்ப்பில்லீங்க. மத்தவங் களுக்கு இருப்பதைக்
காப்பத்தினா போதுமுன்னு இருக்குதுங்க. வியாபார போட்டியாலே பாதகம்
வராதுங்க. குடும்ப உறுப்பினர்கள் துணையாக இருப்பாங்க. அபிவிருத்திக்காக
தகுதிக்கு மீறி கடன் மட்டும் வாங்காதீங்க. அதனாலே பயன் கிடைக்கிறது சிரமம்
தாங்க. மாணவர்கள்:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில் நுட்பம், மாடலிங், சினிமா
தொழில் நுட்பம், சுற்றுலா, கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி, பிரிண்டிங்
டெக்னாலஜி, இன்ஜினியரிங், மார்க்கெட்டிங், ஓட்டல் மேனேஜ்மென்ட், விவசாயம்,
இசை, நாட்டியம் உள்ளிட்ட துறைகளில் படிக்கிறவங்களுக்கு சனீஸ்வரன் இவ்வளவு
சிரமமான காலகட்டத்திலும் நல்லதே தருவாருங்க. மாணவர்கள் விஷயத்துலே அவர்
கடமையைத் தான் பார்ப்பாருங்க. நல்லா படிக்கிற வாய்ப்பு நிறையவே
தெரியுதுங்க. மத்த துறையிலே இருக்கிறவங்க கொஞ்சம் பின்தங்கினாலும் தேறிடுற
அளவுக்கு மார்க் கிடைச்சிடுங்க. ஆனா, பண விஷயத்திலே தான் தடங்கலை
ஏற்படுத்திகிட்டே இருப்பாரு. கடன் வாங்கி படிக்க வேண்டியிருக்கும்.
பெற்றோர்அன்பு, பாசம் உங்களை ஊக்கப் படுத்துமுங்க. நண்பர்கள் பணஉதவி
செய்வாங்க. கவலை வேண்டாம். பெண்கள்:
அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்க புரிஞ்சு வேலை செஞ்சா சிரமம்
இல்லீங்க. இல்லாட்டி, அதிகாரி முன்னாடி கையை கட்டிகிட்டு நிற்க
வேண்டியிருக்கும். கவனமுங்க. சக பணியாளர்கள்கிட்டே சந்தேகங்களைக் கேட்டு
தெரிஞ்சுகிட்டு வேலை செய்யுங்க. இதிலே நேரம் காலம் பார்க்காதீங்க. ஆபீசிலே
கடன் வாங்குறதை தவிர்த்திடுங்க. குடும்பத்தை கவனிக்கிறவங்க மந்தமா
இருப்பாங்க. பணத் தட்டுப்பாடு எரிச்சலை ஏற்படுத்துமுங்க. சிக்கனமா
செலவழிச்சா தேறிடலாமுங்க. கர்ப்பிணியா இருந்தா உடல்நலத்திலே கவனம்
வேணுமுங்க. கணவரோட மனசறிஞ்சு பேசுங்க. பொறுமை ரொம்ப தேவைங்க. பொன், பொருள்
பாதுகாப்பிலே ரொம்ப ரொம்ப கவனம் வேணுமுங்க. சுய, கூட்டுத்தொழில்
செய்றவங்க, அளவான மூலதனம் போட்டா போதுமுங்க. வேலை கூடுதலா இருந்தாலும்
லாபம் குறையாதுங்க. அரசியல்வாதிகள்:
ஆதரவாளர்கள் கூடவே இருப்பாங்க. புத்திரர்கள் உதவி செய்வாங்க. எதிரிகள்
விலகிடுவாங்க. அரசியலோட தொழில் செய்றவங்களுக்கு நஷ்டம் ஏற்பட
வாய்ப்பிருக்கு. பணியாளர்களோட சுமூகமா இருந்தா இதை தவிர்க்கலாமுங்க. கடன்
வாங்கி அரசியல் நடத்த வேண்டாங்க. அறிமுகம் இல்லாதவங்க கிட்டே உங்களைப்
பத்தி சொல்ல வேண்டாங்க. விவசாயிகள்: அனுகூல நிலை தாங்க தெரியுது. பயிர்க்கடன் எதிர்பார்த்த வகையில் கிடைக்குமுங்க. கால்நடை அபிவிருத்தியும் வருமானமும் கூடுமுங்க. அதே நேரம் மந்தமா இருப்பீங்க. இதை தவிர்த்தா போதுமுங்க. |