தனுசு |
நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற தனுசு ராசி அன்பர்களே! அஞ்சு
வருஷமா கண்டச்சனி, அஷ்டமச்சனின்னு ரொம்ப கஷ்டப்பட்டு போனீங்க. ஒரு சில
நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும், அதை நிறைவேத்துறதுக்கும், அந்த நல்லவை
நடந்த பிறகும் கூட ஏற்பட்ட மனவருத்தங்களுக்கும் இனிமே முடிவு
கிடைக்குமுங்க. உங்க ராசிக்கு 9ம் இடத்திலே சிம்மராசியிலே சனி
பெயர்ச்சியாகி இருக்காரு. தனது 3, 7, 10ங்கிற பார்வையாலே, ராசிக்கு 11, 3,
6ங்கிற இடங் களை பார்க்கிறாரு. இதனால், இனிமே நடப்பதெல்லாம் சாதகமாகத்தான்
இருக்குமுங்க. உங்க பேச்சை இன்னும் சீர்திருத்தணுமுங்க. இந்த பேச்சாலே
நல்லதும் நடக்கும், கலகமும் உண்டாயிடும். கலகப் பேச்சை விட்டுடுறது
நல்லதில்லையா! தம்பிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுற வாய்ப்பு
தெரியுதுங்க! சமூகப்பணியிலே ஆர்வமுடன் செயல்படுவீங்க. வீடு, மனை, வாகன
வகையில் திருப்திகரமான நிலைமை இருக்குமுங்க. புத்திரர்கள் நீங்க சொன்னதைக்
கேட்டு நல்லபேரு வாங்கித் தருவாங்க. அவங்க யோகத்தாலே புதுசா சொத்து
வாங்கிறதுக்கு வாய்ப்பு வருதுங்க. எதிரிகளோட
கெடுதல் முயற்சி பலமிழந்து போகுமுங்க. அவங்க தலைகுனியுற வகையிலே
சந்தர்ப்பம் ஏற்படுமுங்க. உடல்நலம் ஜோரா இருக்குமுங்க. கடன், வழக்கு,
குடும்ப விவகாரங்களிலே சமாதானம் ஏற்படுமுங்க. கணவன், மனைவி ஒற்றுமையோட
சந்தோஷமா இருப்பீங்க. நண்பர்கள் நட்புக்கு இலக்கணமா திகழ்வாங்க. தந்தைவழி
உறவினர்களோட நீங்க சுமூகமா இருந்தாலும், அவங்க பிய்ச்சுகிட்டு தான்
போவாங்க! விட்டு புடிங்க, சரியாயிடும். தொழில், வியாபாரம், உத்தியோகத்திலே
கடந்த காலத்திலே இருந்த சிரமங்களெல்லாம் விலகி ஓடிப்போயிடுமுங்க. மூத்த
சகோதரர்களோட உடல்நிலை பாதிக்குமுங்க. அவங்களோட செயல்பாடு பிடிக்காம
போகும். நீங்க வழிகாட்டினாலும் ஏத்துப்பாங்களான்னு சந்தேகம் தாங்க! ஆதாய
பணவரவை சேமிச்சு வையுங்க. வீண்செலவு எதிர்காலத்துக்கு நல்லதில்லீங்க.
வெளிநாடு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா, பணச்செலவு அதிகமா
இருக்குமுங்க. திருமண முயற்சி செய்றவங்களுக்கு அனுகூல பலன் உண்டுங்க. தொழிலதிபர்கள்:
கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், ஜவுளி உற்பத்தி, தங்க நகை உற்பத்தி,
பிளாஸ்டிக் பொருள், காகிதம், பர்னிச்சர், இசைக்கருவி, பெயிண்ட், பொம்மை
உற்பத்தி செய்றவங்க, லாட்ஜ், விளம்பர நிறுவனம், அச்சகம் நடத்துறவங்களுக்கு
நல்ல அபிவிருத்தி இருக்குமுங்க. பணம் கொட்டுமுங்க. மத்தவங்களுக்கும்
ஓரளவுக்கு வருமானம் இருக்குமுங்க. நஷ்டங்கிற நிலைக்கு வழி இல்லீங்க. புதிய
வாகனம் வாங்குவீங்க. புதிய கிளை துவங்குறதுக்கு யோகம் இருக்குது. எதிரிகள்
விலகிப் போயிடுவாங்க. ஆனால், தந்தை வழி உறவுக்காரங்களோட இடைஞ்சலை சமாளிக்க
வேண்டியிருக்குமுங்க. பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்க தடைகள் விலகி சிறப்பாக
பணிசெய்வாங்க. எதிர்பார்த்த சலுகை, பணக்கடன் ஈசியா கிடைக்குமுங்க. சக
பணியாளர்கள் ஒத்துழைப் பாங்க. கைவினைப்பொருள் தயாரிப்பு, சினிமாத்துறை,
நிதி நிறுவனம், கல்விப்பணி, வருமானவரி, வணிகவரித்துறையிலே
இருக்கிறவங்களுக்கு ரொம்ப சிறப்பா இருக்குமுங்க. சலுகை, சம்பள உயர்வு,
பாராட்டுன்னு சந்தோஷமா இருப்பாங்க. மொத்தத்திலே எல்லாருக்கும் பணவரவு
நல்லாயிருக்கும். உடல்நலம் நல்லாயிருக்கிறதாலே வேலையிலே கவனம்
செல்லுமுங்க. பணம் வருதுங்கிறதுனாலே, அதிக பயன் தராத பொருட்களை வாங்கி
அவஸ்தைப்படாம, புதிய மனை வாங்குறதுக்கு முயற்சி பண்ணுங்க. இது லாபகரமா
அமையுமுங்க. வியாபாரிகள்:
ரெடிமேட் ஆடை, மருந்து, ஸ்டேஷனரி, பொம்மை, வாழ்த்து அட்டைகள், வீடியோ கேம்
சாதனங்கள், காலணி, அளவீடு கருவி, மளிகை, பெயிண்ட், சமையல் எண்ணெய், அழகு
சாதன பொருட்கள், பாத்திரங்கள் விற்பனை செய்றவங்களுக்கு அமோக லாபம்
கிடைக்குமுங்க. புதுசா வாடிக்கையாளர் சேருவாங்க. அதிக பணவரவாலே சந்தோஷமா
இருப்பாங்க. மத்தவங்களுக்கு ஓரளவுக்கு லாபம் உண்டுங்க. புதிய கிளை
துவங்குறதுக்கு நல்ல சூழ்நிலை இருக்குங்க. போட்டி விலகிடுங்க. மாணவர்கள்:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆன்மிகம், ஜோதிடம், இலக்கியம், சட்டம்,
நிதி மேலாண்மை, கம்ப்யூட்டர், பிரிண்டிங் டெக்னாலஜி, போட்டோ,
வீடியோகிராபி, ஆர்ட், கடல்சார் உயிரினம், வங்கியியல் படிக்கிறவங்க,
திறமையை நல்லா பயன்படுத்தி தர தேர்ச்சி பெறுவாங்க. மற்ற துறையிலே
இருக்கிறவங்களுக்கும் நிலைமை சாதகமாத்தான் இருக்குது. படிப்புக்கான பணவசதி
திருப்தியா கிடைக்குமுங்க. சக மாணவர்கள் நட்போட இருப் பாங்க. தந்தையோட
கருத்து வேறுபாடு ஏற்படுற வாய்ப் பிருக்குது. சுற்றுலா சென்றால், ரொம்ப
பாதுகாப்பு வேணுமுங்க. பெண்கள்:
அரசு, தனியார் துறையிலே பணி செய்றவங்க, வேலையிலே இருக்கிற நுணுக்கங்களை
நல்லா புரிஞ்சுகிட்டு சீக்கிரமே வேலையை முடிச்சு அதிகாரிகளோட நல்ல
அபிப்ராயத்தை சம்பாதிப் பீங்க. சலுகை, கடன் வசதி தாராளமா கிடைக்கும். சக
பணியாளர்கள் நட்புறவோட இருப்பாங்க. குடும்பத்தை கவனிக்கிறவங்க கணவரை
அனுசரிச்சு நடந்து, சந்தோஷமா இருப்பாங்க. பணவசதியும் நல்லாயிருக்கும்.
ஆடை, ஆபரணம் வாங்குவீங்க. சுய, கூட்டுத்தொழில் செய்றவங்க புதுப்புது
ஆர்டர் தொடர்ச்சியா கிடைச்சு பணத்தைக் குவிப்பாங்க. புதிய கிளை துவங்கி
தொழிலை விருத்தி செய்வாங்க. அரசியல்வாதிகள்:
உங்களுக்கு சுமாரான பலன் தெரியுது. இருக்கிற நல்லபேரை காப்பாத்திகிடுறது
நல்லது. ஆதரவாளர்களை தக்க வைக்கிறதுக்கு நெறைய செலவாகும். அதே நேரம்,
எதிரிகளோட தொல்லை குறைஞ்சிடும். நண்பர்கள், புத்திரர்கள் உதவி செய்வாங்க.
புது வீடு, வாகனம் வாங்குற யோகமிருக்கு. அரசியலோட தொழில்
நடத்துறவங்களுக்கு நல்ல பணியாளர்கள் இருந்தா மட்டுமே, அதிக லாபம்
கிடைக்கிற வாய்ப்பிருக்கு. விவசாயிகள்: கடன்வசதி தாராளமா கிடைக்கும். மகசூலை அதிகரிப்பீங்க. கால்நடை அபிவிருத்தி நல்லாயிருக்கும். பணவரவு கணிசமா இருக்கும். பாகப்பிரிவினை, வாய்க் கால், வரப்பு பிரச்னையிலே சுமூக தீர்வு கிடைச்சு நிம்மதியா இருப்பீங்க. |