விருச்சிகம் |
நேர்மையான செயல்பாடுடைய விருச்சிக ராசி அன்பர்களே! உங்க
ராசிக்கு பத்தாம் இடமான சிம்மராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிற சனீஸ்வரன்,
தன்னோட 3, 7, 10ங்கிற பார்வையாலே, ராசிக்கு 12, 4, 7ங்கிற இடங்களை
பார்க்கிறாருங்க. கடந்த காலங்களில் வாழ்க்கை வசதி திருப்திகரமாக
இருந்தாலும் கூட அதைப் பயன்படுத் துறதுக்கு ஆர்வக்குறைவு இருந்திருக்கும்.
இப்போ, அதையெல்லாம் அனுபவிக்கனுங்கிற ஆசை பிறக்கும். பேச்சிலே இருந்த
கடுமை குறைந்து, அமைதி பிறக்கும். இது எதிர்கால திட்டங்களுக்கு
மத்தவங்களோட ஒத்துழைப்பை வாங்கித்தரும். பணம் வருவதும் போவதும் தெரியாமல்
இருந்தீங்க. இனி அதை சேமிக்கணுங்கிற எண்ணம் வளரும். தம்பிகள் கவனக் குறைவா
நடந்து சில நஷ்டங்களை உருவாக்கலாம். அவர் களுக்கு இதமா புத்திமதி சொல்லி
திருத்துங்க. சமூகப் பணியை அளவோடு செய்வீங்க. வீடு,
மனையில் இப்போ கை வைக்க வேண்டாம். இருப்பதே போதுமுங்க. திட்டமிடாம அதிலே
கை வைச்சா, தேவையில்லாம செலவழியும். தாய்வழி உறவினர்கள் கிட்டே கருத்து
வேறுபாடு ஏற்படற சான்ஸ் இருக்கு. பயணங்களில் பாதுகாப்பா இருக்கணும். புத்திரர்கள்
திறமையா செயல் பட்டு நல்லபேரு வாங்கித் தருவாங்க. அவங்க தங்கள் துறையிலே
சாதனை நிகழ்த்துறதுக்கும் வாய்ப்பிருக்கு. பூர்வ சொத்து தொடர்பா இருந்த
இடைஞ்சல்கள் தானா விலகிடுங்க. உடல்நலம் தெம்பாயிருக்கும். எதிரி,
உங்களுடன் உறவாட வந்தாலும், சாதகமா பாதகமான்னு பார்த்து அவங்களை
ஏத்துக்கிட்டா போதும். கணவன்
மனைவி ஒற்றுமையில் நெருடல் இருக்கத்தான் செய்யும். அனுசரிச்சு போறது
இரண்டு பேருக்குமே நல்லதுங்க. உங்க விஷயத்தை நீங்களே பேசி
தீர்த்துக்கணும். இதிலே சொந்தக்காரங்களை நுழையவிட்டா, அது தொந்தரவைத்தான்
தருமுங்க. நண்பர்களோட பேசலாம்; ஆனா, விளையாட்டுத்தனமா பேசினா அது வினையா
முடியுமுங்க. கவனம்.. கவனம். தந்தைவழி
உறவினர்கள் கிட்டே உங்களைப் பற்றிய நல்ல அபிப்ராயம் வளருமுங்க. தொழில்,
வியாபாரம், உத்தியோகம் சார்ந்த வகையில் ஓரளவுக்கு லாபம் எதிர்பார்க்கலாம்.
அவ்வப்போது குறுக்கீடுகள் வரத்தான் செய்யும். இதையெல்லாம் ஜெயிச்சிட்டா,
அப்புறம் லாபம் தான். மூத்த
சகோதரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறுவாங்க. ஆதாய பணவரவு, நிலுவை
பணம் வசூலாவதில் இடைஞ்சல் இருக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பு கிடைச்சாலும்,
வருமான வாய்ப்பு குறைச்சலாத் தான் இருக் கும். நல்லவேலைன்னு தெரிஞ்சா
போகலாம். ஏற்கனவே, வெளிநாட்டிலே வேலை செய்றவங்களுக்கு பணியிடத்திலே
அவப்பெயர் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனம். தொழிலதிபர்கள்:
சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், இன்ஜினியரிங் கல்லூரி, ஆஸ்பத்திரி,
பாய்லர் தொழிற்சாலை, தீப்பெட்டி, பட்டாசு, கம்பளி, தோல் ஆடை, ஜெனரேட்டர்,
மின்சார உபகரணங்கள் செய்றவங்க, காண்டிராக்டர்களுக்கெல்லாம் பெரிசா ஒண்ணும்
சாதிக்க முடியாதுங்க. வரவும் செலவும் சரிங்கிற நிலைமை தான் இருக்குமுங்க.
மற்ற தொழில் செய்றவங்களுக்கு ஓரளவு சாதகமான நிலை இருக்குமுங்க. தொழில்
விஷயத்துலே பிள்ளைகளோட ஆதரவு, தொழிலாளர்களோட ஆதரவு இருக்கிறதாலே
கவலைப்படும் படியா ஏதுமில்லீங்க! பெயர்ச்சி முடியும் காலத்தில், நீங்க
கஷ்டத்திலும் கடந்து வந்த பாதையை நினைச்சு உங்க எதிரிகளே
ஆச்சரியப்படுவாங்க. செலவு அதிகமா இருக்குமுங்க. பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையிலே இருக்கிறவங்களுக்கு வேலையில் கவனம் குறையுமுங்க.
உங்க திறமையைப் பொறுத்து தான் வருமானத்தை எதிர்பார்க்க முடியுமுங்க.
சிலருக்கு தேவையில்லாம டிரான்ஸ்பர் வருமுங்க. சக பணியாளர்கள் மோதுவாங்க.
நீங்க தான் பொறுமையா போகணும். குறிப்பா டிரைவர், உணவுபொருள் சார்ந்த
பணியிலே இருக்கிறவங்க, பாய்லர் இயக்குறவங்க, தீப்பெட்டி, பட்டாசு ஆலை,
வெல்டிங் பட்டறையிலே வேலை செய்றவங்களுக்கு அபராதம் விதிக்க
வாய்ப்பிருக்கு. கவனமில்லாட்டி உழைச்ச காசும் வராம போயிடுமுங்க. உடல்நலம்
ஒத்துழைக்குங்கிறதாலே சோம்பல் படாம எதையும் செய்தா முன்னேற்றமுண் டுங்க.
தகுதிக்கு மீறி கடன் வாங்குறது, செலவழிக்கிற எண்ணமெல்லாம் வரத்தான்
செய்யும். சனீஸ்வரன் வைக்கிற இந்த டெஸ்டிலே பாஸாகிறது உங்க கையிலே தான்
இருக்கு. வியாபாரிகள்:
தேயிலை, காப்பி, ஏலக்காய், மிளகு, மெழுகுவர்த்தி, மின்சார உபகரணம்,
அடுப்பு, தீப்பெட்டி, பட்டாசு, எரிபொருள் வகை, வாட்டர் ஹீட்டர், ஜவுளி,
தானியம், மருத்துவ உபகரணங்கள், உடற்பயிற்சி கருவி, பலசரக்கு, உரம், விவசாய
இடுபொருள், பிளாஸ்டிக், பித்தளை பாத்திர வியாபாரிகள் வாடிக்கையாளர்களோட
அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமுங்க. இதனாலே வியாபாரம் டல்லாகிறதை
தடுக்கிறதும் உங்க கையிலே தான் இருக்கு. வந்தவங்ககிட்டே கடை பணியாளர்களை
இனிமையா பேசச்சொல்லுங்க. மத்தவங்களோட போட்டியாலே வியாபாரம் குறைச்சலாகும்.
அளவான மூலதனம் போட்டா நல்லதுங்க. இந்த கஷ்டமெல்லாம் வர்றதும்
நல்லதுக்குதாங்க. ஏன்னா.. சேமிக்கிற ஆர்வம் வளருமுங்க. இளம்
வியாபாரிகளுக்கு திருமண முயற்சி கைகூடுமுங்க. மாணவர்கள்:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கண் மருத்துவம், கனரக இயந்திரம், வாகனம்,
லேத், வெல்டிங் பணி பயிற்சி, சினிமா ஒளிப்பதிவு, தொழில்நுட்ப பயிற்சி,
சமையல்கலை, கெமிக்கல், ஏரோநாட்டிக்ஸ், விவசாயம், தொழிற்சாலை பாதுகாப்பு,
ஐ.ஏ.எஸ் போன்ற நிர்வாகப் படிப்பு படிக்கிறவங்களுக்கு படிப்பு மண்டையிலே ஏற
மறுக்குமுங்க. ரொம்ப கவனமா படிச்சா தான் மார்க்கை பார்க்க முடியுமுங்க.
அதேநேரம், படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்குமுங்க. வாகனத்தில்
போனா ஸ்பீடைக் குறையுங்க. நண்பர்களோட சேர்ந்து சுத்துறது, பணத்தை
வீணாக்குற எண்ணமெல்லாம் எழுமுங்க. அதையெல்லாம் கட்டுப்ப டுத்தினா
சனிபகவான் பர்ஸ்ட் கிளாஸ் சர்டிபிகேட்டை தந்திடுவாருங்க. பெண்கள்:
அரசு, தனியார் துறையிலே இருக்கிறவங்க சுற்றுச் சூழ்நிலை அறிந்து
பேசணுமுங்க. வேலைப்பளு கூடுமுங்க. கூடினாலும் செய்து தானே ஆகணும். நேரம்
காலம் பார்க்காம வேலை செய்ய வேண்டியிருக்குமுங்க. அலுவலகத்தில்
விண்ணப்பித்த கடன் கிடைக்குமுங்க. சக பணியாளர்களோட கருத்து வேறுபாடு
ஏற்படுமுங்க. குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கு பணவரவு சுமாரா
இருக்குமுங்க. கணவரோட கருத்து வேறுபாடு, உறவுக்காரங்களோட தலையீடுன்னு
சிரமமான காலகட் டம் தாங்க. கொஞ்சம் பொறுமையா போங்க. சுய, கூட்டுத்தொழில்
செய்றவங்களுக்கு பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாதுங்க. அளவான மூலதனம்
போதுமுங்க. சக தொழிலதிபர்களோட உங்களை உயர்வா ஒப்பிட்டு பேசுற வேலையெல்லாம்
வேண்டாமுங்க. உங்க சரக்கோட பெருமையை மட்டும் பேசுங்க. அரசியல்வாதிகள்:
உங்களுக்கு ஓரளவுக்கு நல்ல நேரம் தாங்க. கடந்த காலத்திலே செய்த பணிக்குரிய
பலன்களை இப்போ பெறுவீங்க. ஆதரவாளர் எண்ணிக்கை கூடுமுங்க. அதிகாரிகளிடம்
கோரிக்கையை இதம் பதமாக எடுத்துச் சொல்லுங்க. சண்டை போட்டா வில்லங்கம்
தான். புத்திரரை அரசியல் பணிக்கு துணையா பயன்படுத்தலாங்க. எதிரிகள் தொல்லை
குறையுமுங்க. நண்பர்களுடன் தேவையில்லாத வார்த்தைகளை பேசக்கூடாதுங்க.
அரசியலுடன் தொழில் நடத்துறவங்களுக்கு அதிகமா லாபமிராது. வாகனத்தில்
மிதவேகம் நல்லதுங்க. விவசாயிகள்: பணவசதி திருப்தியா இருக்குமுங்க. வழக்கத்தை விட கடுமையான உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். கால்நடைகள் தொல்லை தரும். பராமரிப்பு செலவு கூடும். வாய்க்கால், வரப்பு பிரச்னை இருக்காது. |