துலாம் |
தர்மம் தவறாமல் நடக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே! உங்க
ராசிக்கு 11ம் இடமான சிம்மராசிக்கு சனி பெயர்ச்சியாகி இருக்காரு. தனது 3,
7, 10ங்கிற பார்வையாலே ராசி 5, 8 ஆகிய இடங்களை பார்க்கிறாரு. இந்த நிலைமை
ரொம்ப நல்லதுங்க. கடந்த
காலங்களிலே தொழில் வகையிலே பட்ட சிரமமெல்லாம் தீர்ந்து போகுமுங்க. நியாய
தர்மத்தை பின்பற்றி நல்லமனநிலையை உருவாக்குவீங்க. கண்டிப்பா பேசினாலும்
கடமை உணர்வு அதில் இருக்குங்கிறதாலே சனிபகவானுக்கு உங்களை ரொம்பவும்
புடிச்சு போகுமுங்க. பணவரவு நல்லா இருக்குமுங்க. தம்பிஎல்லா
விஷயத்துலேயும் உதவியா இருப்பாங்க. சமூகத்திலே மதிக்கப்படாம இருந்த நிலை
மாறி உயரிய அந்தஸ்து பெறுவீங்க. வீடு,
மனையிலே மாற்றம் செய்ய நெனச்சா திட்டமிட்டபடி முடிச்சுடணும். அதிக
ஆசைப்பட்டா பணம் வேகமா கரைந்து கடன் தலைக்கு மேலே எகிறிடும். கவனமா
இருங்க! புத்திரர்கள் படிப்பு, வேலை விஷயத்துலே
ஆர்வக்குறைவா இருக்கிற வாய்ப்பு தெரியுதுங்க. காரணம் சேர்க்கை சகவாசம்
தான்! நல்ல புள்ளைங்க கூட பழகுறாங்களான்னு கண்காணிச்சு அன்போட எடுத்துச்
சொன்னா திருந்திடுவாங்க. எதிரிகள் உங்களை பலவீனப்படுத்த பல வகையிலும்
முயற்சி செய்வாங்க. ஜாக்கிரதையா இருங்க. உடல்நலம் படிப்படியா முன்னேறிடுமுங்க. கணவன், மனைவி சந்தோஷமா இருப்பீங்க. மனைவிவழி உறவுக்காரங்க ஆதரவா இருப்பாங்க. புதிய நண்பர்களோட அறிமுகம் கிடைக்குமுங்க. யாரிடமாவது வாகனம் கடன் வாங்கிக் கொண்டு பயணம் போகிற எண்ணமிருந்தா அது வேண்டாமுங்க. வாழ்க்கை வசதி திருப்திகரமாக இருக்குமுங்க. தொழில்,
உத்தியோகம், வியாபாரம் இதிலே எல்லாம் இனிமே வளர்ச்சிதாங்க! இந்த வகையிலே
கணிசமா பணம் சேருமுங்க. நிலுவைப்பணம், ஆதாய பணவரவு இது கிடைக்கிறதுக்கு
தாமதமானாலும், பொறுமையா சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசினா கிடைச்சிடுமுங்க.
மூத்த சகோதரர்கள் உங்க கிட்டே உதவி எதிர்பார்ப்பாங்க. முடிஞ்ச வரைக்கும்
கொடுத்து உதவுங்க. வெளிநாடு
வேலைவாய்ப்பு தாராளமா கிடைக்குமுங்க. குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி
நடக்குமுங்க. அந்த சந்தோஷத்திலே அதிகமா செலவழிச்சு கடன்படவும்
வாய்ப்பிருக்குங்க. நிதானமா இருங்க. தொழிலதிபர்கள்: குளிர்பானம், மினரல் வாட்டர், அரிசி, மாவு, ஏர்கண்டிஷன், ஏர்கூலர், மின்விசிறி, வாசனை திரவியம், அழகுசாதனப் பொருள், வாஷிங் மெஷின், கிரானைட்,
மார்பிள், ஓடு உற்பத்தி, தோல் பொருள், கடல்சார் பொருள் உற்பத்தி, இறைச்சி
ஏற்றுமதி, தண்ணீர் மோட்டார் தயாரிப்பு சார்ந்த தொழிலில் உள்ளவர்களுக்கு
நிறைய ஆர்டர் கிடைச்சு லாபத்தை குவிச்சுடுவீங்க. மற்றவர்கள் இவர்களை விட
நல்ல லாபம் பெறுவாங்க. புதிய பதவி,
பொறுப்புன்னு வந்து சந்தோஷ கடலில் திளைப்பீங்க. பூர்வ சொத்து விஷயத்திலே
நம்பகமானவங்க மட்டும் கிடைச்சிட்டா அதுலேயும் வருமானம் கொட்டுமுங்க.
தொழில் சார்ந்த பகை விலகுமுங்க. பாக்கி வசூலிப்பதில் நிதானமா இருக்கிறது
நன்மை தருமுங்க. பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையிலே இருக்கிறவங்க திறமையா செயல்படுவீங்க. நிர்வாகத்தோட
பாராட்டு மட்டுமில்லே! ஊக்கத் தொகையும் கிடைக்கிற வாய்ப்பிருக்குங்க.
சலுகைகள் தாராளமா கிடைக்கும். தண்ணீர் சார்ந்த தொழிலில்
இருக்கிறவங்களுக்கு ரொம்பவே சலுகை கிடைக்கிற யோகம் வந்திருக்குது. சக
பணியாளர்கள் ஒத்துழைப்பு நிறையவே இருக்குதுங்க. ஆபீசில் உரிய கவுரவம்
கிடைக்குமுங்க. சுபமங்கல செலவு தான் அதிகம் வருமுங்க. வியாபாரிகள்:
பால் பொருள், பழம், நகை, தண்ணீர் சார்ந்த பொருட்கள், உப்பு, ஜவுளி,
பிரிட்ஜ், குடை, கண்ணாடி, வெண்ணெய், நெய், சமையல் எண்ணெய், வாசனை
திரவியம், காளான், பாசி, கடல்சார் பொருள் வியாபாரம் பண்றவங்களுக்கு சரியான
லாப காலமுங்க. மத்தவங்க நஷ்டத்திலே இருந்து மீண்டு லாபப்பாதைக்கு
போயிடுவாங்க. கொஞ்சம் தாமதமா இது நடக்குமுங்க. சமூக அந்தஸ்து
நல்லாயிருக்கும். குடும்பம் ஒற்றுமையா இருக்கிறதாலே வியாபாரத்திலே கவனம்
அதிகமா இருக்கும். வசதியான வாழ்வுக்குரிய பொருட்களை வாங்கிடுவீங்க.
அறப்பணிக்கு நிறையவே செலவிடுவீங்க. மாணவர்கள்:
ஏ.சி. மெக்கானிசம், கப்பல் சார்ந்த துறை, மீன்வளர்ப்பு, பாய்லர்
இயக்குதல், பிளம்பிங், வாகன வடிவமைப்பு, பழுதுநீக்குதல், நில அளவை, ஓட்டல்
மேனேஜ்மென்ட், ஆசிரியர் பயிற்சி, சுற்றுலா வழிகாட்டி, கேட்டரிங் உட்பட
பல்வேறு துறை சார்ந்த படிப்பில் பயிற்சி பெறும் மாணவர்கள் மட்டும் கூடுதல்
கவனமா இருக்கணுமுங்க. மத்தவங்க ரொம்ப நல்லா படிச்சு பேரு வாங்குவாங்க.
மத்தபடி, படிப்புக்கான பணவசதி எல்லாருக்குமே தட்டுப்பாடில்லாம
கிடைக்குமுங்க. வாகனத்திலே போகிற மாணவங்க ரொம்ப கவனமா இருக்கணும். வேகம்
கூடாது. தாய் கண்டிக்கத்தான் செய்வாங்க. நீங்க எதிர்த்து பேசாம அதை ஏத்து
நடந்துகிட்டா நல்லது. அதே நேரம், தந்தை சாந்தமா பேசி உங்களுக்கு ஆறுதல்
சொல்வாரு. கூட படிக்கிற பசங்க, உங்ககிட்டே சண்டைக்கு வந்தா ஒதுங்கிப்
போயிடுங்க. அதுதான் நல்லது. பெண்கள்:
அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்களுக்கு யோகமான நேரமுங்க. வேலைப்பளு
குறையறதாலே, பணி இலக்கை முடிச்சு நல்லபேரு வாங்குவீங்க. நிர்வாகத்திடம்
எதிர்பார்த்த சலுகையெல்லாம் கிடைச்சிடுமுங்க. சக பணியாளர்கள் கிட்டேயும்
பாசமா பழகி, அவங்களோட ஒத்துழைப்பையும் பெறுவீங்க. குடும்பத்தை
கவனிக்கிறவங்க கையிலே சில்லரை ஓட்டம் நல்லாயிருக்கும். அது மட்டுமா!
வீட்டுக்காரர் உங்க பாசவலையிலே விழுந்து கிடப்பாரு. கர்ப்பிணி பெண்கள்
தான் ரொம்ப கவனமா இருக்கணும். அடிக்கடி டாக்டர்கிட்டே செக்அப்
செஞ்சுகிட்டா பின்னாடி வரப்போற பாதிப்பை தடுக்கலாமுங்க. சுய,
கூட்டுத்தொழில் செய்றவங்க, தொழில் வளர்ச்சியாலே ஏராளமா பணத்தைக்
குவிப்பாங்க. கடனை அடைச்சிட்டு நிம்மதியா இருப்பாங்க. அரசியல்வாதிகள்:
சமூகப்பணியிலே ஆர்வம் கூடி மக்களிடம் நல்லபேரு வாங்குவீங்க. ஆதரவாளர்கள்
உங்க மேலே ரொம்பவே நம்பிக்கை வைப்பாங்க. புத்திரர்களை உங்க லைனில்
வரவிட்டா அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்கும். அவங்களை கண்ட்ரோல்
பண்ணிடுங்க. எதிரிகள் காணாம போயிடுவாங்க. விரும்பிய பதவிபொறுப்பு கிடைச்சு
சந்தோஷமா இருப்பீங்க. அரசியலோட தொழில் செய்றவங்களுக்கு லாபம்
நல்லாயிருக்கும். நீண்டநாளாக முடங்கிக் கிடந்த காரியங்களை
நிறைவேத்திகிடுவீங்க. பெரிய கடன் ஒன்றை அடைச்சுட்டு நிம்மதியடைவீங்க.
ஆதரவாளர்களோட பயணம் செய்யும்போது, கெட்ட இடங்களுக்கு அழைப்பாங்க. அதை
தவிர்த்திடுங்க, இல்லாட்டி பேரு கெட்டுப்போகுமுங்க. கவனம். விவசாயிகள்: ஏற்கனவே செஞ்சுகிட்டிருக்கிற பயிர்களையே தொடர்ந்து பயிர் வையுங்க. புதுப்பயிர் போட்டா நஷ்டம் வர வாய்ப்பிருக்கு. அதே நேரம் மண்ணுக்கடியில் விளையும் கிழங்கு போன்றவைகளை பயிரிட்டா லாபம் கிடைக்குமுங்க. கால்நடைகள் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் கவனம் வேணுமுங்க. மத்தபடி வருமானத்துக்கு குறையிருக்காதுங்க. நிலப்பிரச்னை தொடர்பான வில்லங்க சண்டைகள் குறைஞ்சிடுமுங்க. மங்கல நிகழ்ச்சிகள் நடந்து சந்தோஷமா இருப்பீங்க. |