உனக்காக நானிருப்பேன்! | |
உன் உறவு வேண்டும் எனக்காய் எப்பொழுதும் உன் உறவு வேண்டும்!இது என் வேண்டுதலும் கூட! ஆனாலும் பாரேன்… மூக்கு முட்ட முற்கோபம் கொண்டு முகத்தைத் திருப்பி முகம் சுழித்துச் செல்கின்றாய்! ஓ…! பாசம் வைப்பதுவும் பின்னர் பாதியில் பிரிவதுவும் பாதி உயிர் போகும் வலிதான்! ம்…! தாங்கித்தான் ஆகவேண்டும் ஆகையால் தாங்கிக் கொள்கின்றேன்! என்றோ ஒரு நாள் ஏன் பிரிந்தேன் என்று நீயும் எப்படியும் நொந்து கொள்வாய்! அப்போதும் நானிருப்பேன் உனக்காய் அன்பென்னும் பொக்கிசத்தை என் ஆத்மாவுக்குள் நிரப்பியபடி… இப்போது போலவே அப்போதும் நானிருப்பேன்! |