கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2024-04-24
8:48 PM

Welcome Guest | RSS Main | தனுசு........... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்


தனுசு ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)

மூலம், பூராடம், உத்திராடம் 1



தொல்லை (50/100)




உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் குருபகவான் மட்டுமே அனுகூல பலன் தரும் வகையில் உள்ளார். இதனால் உங்களுக்கு இவ்வாண்டு சிக்கல் நிறைந்த ஆண்டாகவே இருக்கும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. குடும்பச் செலவுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். வீடு, வாகன வகையில் இப்போதைய நிலை அப்படியே நீடிக்கும். புத்திரர்கள் உங்கள் கண்டிப்பைப் புறக்கணித்து தங்கள் இஷ்டத்திற்கு நடக்க ஆரம்பிப்பர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமருகிறார். இதுசமயம் வீடு, வாகனத்தில் பராமரிப்புச் செலவு ஏற்படும். பயணங்களின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.



தம்பதியர் இடையே சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. பலகாலம் சேர்த்து வைத்த நற்புகழை பேணுவதில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் கொடுக்கல், வாங்கலில் அதிருப்தி ஏற்படும் கிரகநிலை உள்ளது. குடும்பத்தை நடத்துவதற்குரிய செலவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற அனுகூலநிலை உண்டு.




தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனங்கள், டிராவல்ஸ், நட்சத்திர ஓட்டல், நிதிநிறுவனம், ஆஸ்பத்திரி, ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, மாவுமில் அதிபர்கள் தங்கள் தொழிலில் பின்தங்க நேரிடும். நிர்வாகச் செலவு உயரும். வாடிக்கையாளர்களுக்கு சலுகை திட்டங்களை அறிவிக்க வேண்டியிருக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், காகிதம், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் அளவான உற்பத்தியும், சுமாரான லாபமும் பெறுவர்.



வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, மலைத்தோட்ட பயிர்கள், ரப்பர், தோல்பொருட்கள், உடற்பயிற்சிகருவி, மருந்து, மருத்துவ உபகரணம், இசைக்கருவிகள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப்பொருள், பாத்திரம், காகித பொருட்கள், அளவீட்டுக் கருவிகள், உணவுப் பண்டம், மின்சாரப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், காய்கறி, ஸ்டேஷனரி வியாபாரம் செய்பவர்களுக்கு நிலைமை சாதகமாக இல்லை. மற்றவர்களும் கூடுதல் ஈடுபாட்டுடன் வியாபாரத்தில் செயல்படுவதால் மட்டுமே பலன்களைப் பெறலாம். மூலதனத்தை உயர்த்தினால் அதற்கேற்ற வருமானம் இருக்காது. சரக்கு வாகனங்கள் மூலம் வருமானம் நன்றாக இருக்கும். பிறருக்காக ஜாமீன் இடுவதைத் தவிர்க்க வேண்டும்.



பணியாளர்கள்: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்களுக்கு கவனச்சிதறல், பணியில் பிடிப்பின்மை ஏற்பட்டு அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரும். பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு




வளரும். தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவு காரணமாக உற்பத்தி இழப்புக்கு காரணமாக அமைந்து அபராதம் கட்ட நேரிடலாம். பணியில் நேரம் தவறாமையையும், கவனமும் கொண்டால் மட்டுமே பிரச்னைகளைத் தடுக்கலாம்.



மாணவர்கள்: ஜர்னலிசம், ஆசிரியர்பயிற்சி, சாஸ்திரபடிப்பு, இலக்கியம், ஓவியம், மருத்துவம், வணிகவியல், வங்கியியல், தகவல் தொழில்நுட்பம், பிசினஸ் மேனேஜ்மென்ட், கேட்டரிங், சட்டம், அரசு நிர்வாகம் சார்ந்த துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் தமக்குள்ள பொறுப்பை உணர்ந்து படித்து தரத் தேர்ச்சி பெறுவர். பிறதுறை மாணவர்களுக்கு படிப்பு பரவாயில்லை என்ற நிலை இருக்கும். படிப்புக்கான பணத்துக்கு சிரமப்பட வேண்டியிருக்கும்.




பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணியை நிறைவேற்ற முடியாமல் திண்டாடி அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். சலுகைகள் சுமாராகவே கிடைக்கும். குடும்பப் பெண்கள், அன்றாடச் செலவுக்கு பணமின்றி திண்டாடுவர். சிக்கனம் தேவை. கணவர் வழி சார்ந்த உறவினர்களை விமர்சித்து சிக்கலில் மாட்ட நேரும். சுயதொழில்புரியும் பெண்கள், தொழிலை அபிவிருத்தி செய்தாலும் சுமாரான அளவு வியாபாரமே நடக்கும்.




அரசியல்வாதிகள்: ஆதரவாளர்கள் வாழ்வில் முன்னேற சொந்த பணச் செலவில் தேவைப்படும் உதவியை செய்து கொடுப்பீர்கள். சமூகத்தில் நற்பெயர் பெற அனுகூலகாரணிகள் பலம் பெறும். எதிரிகளால் தொல்லை உண்டு. அவர்களிடம் இருந்து விலகிப்போவதால் காலமும், பணமும் பெருமளவு மிச்சப்படும். புத்திரர்கள் அரசியல் பணியில் ஒத்துழைக்க மாட்டார்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் அனுபவம் நிறைந்தவர்களின் ஆலோசனையும், உதவியும் கிடைத்து உங்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், சராசரி வியாபாரமும், மிதமான லாபமும் பெறுவர்.




விவசாயிகள்: பயிர் வளர்ப்பிற்கு அதிக செலவு ஏற்படும். மகசூல் ஓரளவே கிடைக்கும். கால்நடைகள் வளர்ப்பினால் மே, ஜூன், ஜூலையில் கூடுதல் பணவரவு வரும். நிலம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு பெற தாமதம் ஏற்படும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி பெறும்.

செல்ல வேண்டிய தலம்: மருதமலை முருகன் கோயில்

பரிகாரப் பாடல்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz