ரிஷபம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
நன்மை (60/100)
உங்கள்
ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களில் குரு, கேது மிகுந்த அனுகூலத்
தன்மையுடன் உள்ளனர். ராகுவும், சனியும் சில தொந்தரவுகளைத் தருவர்.
பேச்சைக் குறைத்தால், இந்த தொந்தரவுக்கும் இடமில்லை. பணவரவை உயர்த்திக்
கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.
வீடு,
வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதிதாக அபிவிருத்தி
பணிகளைச் செய்தால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வாகனங்களை வேகமாக
இயக்குவதைத் தவிர்க்கவும். புத்தாண்டின் ஆறுமாதத்திற்கு பின்
பெயர்ச்சியாகிற சனி பகவான், கண்டச்சனி என்ற நிலையில் இருந்து விலகுவார்.
அப்போது இந்த நிலைமை சீராகும். ஆனால், புத்திரர்கள் வகையில் சில தொல்லைகளை
சந்திக்க நேரிடும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார
வக்ரகதியாக
கும்ப ராசியில் அமருகிறார். இந்த மூன்று மாதங்களில் கடன் வாங்கினால்
அடைப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும், இக்காலத்தில் தேவையற்ற
வம்பு வழக்குகளிலும் மாட்ட நேரும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு
ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமை தேவை. வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள்
குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த அனுகூலம் உள்ளது.
வெளிநாடு வேலைவாய்ப்பை விரும்புபவர்களுக்கு தடைகளின் பேரிலேயே விருப்பம்
நிறைவேறும்.
தொழிலதிபர்கள்:
ஜவுளி, பால், சாயப்பொருட்கள், காகிதம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், அலங்காரப் பொருள், பெயின்ட் தொழிற்சாலை அதிபர்களுக்கு இந்தச்
சிக்கல் அதிகமாக இருக்காது. இவர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று தாராள
லாபம் பெறுவர். தடைபட்ட அபிவிருத்தி பணிகளை இனிதாக நிறைவேற்றலாம்.
ஆஸ்பத்திரி, ஓட்டல், லாட்ஜ், டிராவல் ஏஜன்சி நடத்துபவர்கள்
வாடிக்கையாளர்களுக்கு சலுகை புரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை எட்டுவர்.
மற்ற தொழிலதிபர்கள் சிரமங்களின் பேரிலேயே லாபம் ஈட்ட முடியும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், மாவு பொருள், உணவு
பண்டங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அலங்கார பொருட்கள், விளையாட்டு
சாதனங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், ஆட்டோமொபைல் உதிரிபாகம்
விற்பனை செய்பவர்கள் திறமையாக நடந்து வளர்ச்சியும் கூடுதல் லாபமும்
காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட சற்று குறைவான லாபம்
கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், தங்கள் பணியை சிறப்பான முறையில்
நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் சலுகையும், பாராட்டும் கிடைக்கும். பணி
இடங்களில் அதிக வாக்குவாதம், பகைமை எண்ணம் உருவாக வாய்ப்பிருக்கிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் வருடமுற்பகுதியில் பணியில் சிறப்பு
பெறுவர்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம்,
சட்டம், இன்ஜினியரிங், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, இலக்கியம், ஜர்னலிசம்,
ஆராய்ச்சி படிப்பு, ஓவியம், போட்டோ, வீடியோகிராபி, விளம்பரமாடலிங்,
பிரின்டிங் டெக்னாலஜி, கேட்டரிங் பயிற்சி பெறும் மாணவர்கள் பொறுப்புடன்
படித்து தரத்தேர்ச்சி அடைவர். வேலைவாய்ப்பு எதிர்பார்த்த வகையில்
கிடைக்கும். படிப்புக்கான செலவு அதிகரிக்கும்.
பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள், பணியிடங்களில் இருந்த சிரம
சூழ்நிலை விலகப்பெறுவர். தேங்கி நின்ற வேலைகள் எளிதில் முடிந்து விடும்.
பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும்
முயற்சியின் பேரில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குடும்பப் பெண்கள்
வீட்டுச்செலவுக்கு சிரமப்பட வேண்டியிருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள்
அதிக விற்பனையும் நிறைவான பணவரவும் பெறுவர்.
அரசியல்வாதிகள்:
உங்களின் சேவையால் பலன் பெற்றவர்கள் விசுவாசத்துடன் நடந்து கொள்வர்.
இருப்பினும் அரசியல்பணியில் ஆர்வக்குறைவான மனநிலையைப் பெறுவீர்கள்.
பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கிடைப்பது சிரமமே.
புத்திரர்களின் செயல்பாடுகள் உங்களின் வளர்ச்சிக்கு இடையூறு தருவதாக
அமையும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு லாபம் நன்றாக இருக்கும்.
விவசாயிகள்:
பயிர் வளர்க்க தேவையான அனைத்து உதவிகளும் தடங்கலின்றி கிடைக்கும். தாராள
மகசூல் உண்டாகும். கால்நடைகளுக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். நிலம்
தொடர்பான விவகாரங்களில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர கால தாமதமாகும்.
சுபநிகழ்ச்சிகளை எளிய முறையில் நடத்துவதால் நற்பலன் பெறலாம்.
பரிகாரம்: ராமபிரானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி சீரான முன்னேற்றம் தரும்.
செல்ல வேண்டிய தலம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில்
பரிகாரப் பாடல்:
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
விடியல் வழியதாக்கும் வேரிஅம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலை ராமன் தோள்வலி கூறுவார்க்கே.