மேஷம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)
அசுவினி, பரணி, கார்த்திகை 1
பணவரவு (55/100)
உங்களுக்கு
குரு, சனி, கேது அனுகூலக் குறைவான இடத்தில் உள்ளனர். ஆனால், கேதுவும்,
சனியும் செப்டம்பரில் பெயர்ச்சியான பிறகு எண்ணற்ற பலன்களை வழங்குவர்.
திட்டமிட்டு செயல்படாத பட்சத்தில், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பணவரவு
தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு இருக்கும். கடன்கள் அடைபடும்.
குருபகவான் அதிகாரவக்ரகதியாக மே, ஜூன், ஜூலை மாதங்களில் கும்பராசியில்
அமருகிறார். அந்த சமயத்தில், ஆதாய பணவரவு தாரளமாக கிடைக்கும். நன்னடத்தை
குறைவானவர்களின் சேர்க்கையால் சிரமங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆண்டின்
பிற்பகுதியில் நிலைமை சீராகும்.
வீடு, வாகன வகையில் பராமரிப்பு
செலவு அதிகரிக்கும். சிலர் பழைய வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனம்
வாங்குவர். புத்திரர்களின் செயலில் இருந்த மந்தநிலை மாறும். திறமையை
வளர்ப்பதிலும் புதிய விஷயங்களை அறிவதிலும் கவனம் கொள்வர். வழக்கு
விவகாரத்தில் அனுகூல நிலை ஏற்படும். தம்பதியர் ஒற்றுமை சிறப்பாக
இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு சரியாகும். இது சமயம்
திருமணமுயற்சி செய்கிறவர்களுக்கு அனுகூல நிலை கை கூடும். தந்தை வழி
உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். உடல்நலம் சுமாராக
இருக்கும்.வெளிநாடு வேலை வாய்ப்பை விரும்புபவர்களுக்கு மே, ஜூன், ஜூலை
மாதங்களில் வெற்றி கிடைக்கும்.
தொழிலதிபர்கள்:
தொழில் சார்ந்த வகையில் சுமாரான நிலையே தென்படுகிறது. இரும்பு,
டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்,
மருத்துவ உபகரணங்கள், வீட்டு சாதனப் பொருட்கள், கட்டுமானப் பொருள்
உற்பத்தி செய்பவர்கள் சீரான உற்பத்தியும், ஓரளவு லாபமும் கிடைக்கந்
பெறுவர். இதர தொழிலதிபர்களுக்கு இவர்களை விட சற்று மேம்பட்ட நிலை
இருக்கும். தொழிலை நடத்த கடன் வாங்கும் போது தகுதிக்கு மீறி செயல்பட்டால்,
சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உற்பத்தி செலவு அதிகரிக்கும்,
வியாபாரிகள்:
கம்ப்யூட்டர், மொபைல், விளையாட்டு சாதனங்கள் பாத்திரங்கள், கட்டுமானப்
பொருட்கள், காலணி, கம்பளி, தோல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
பொருட்கள், பர்னிச்சர், அச்சக உபகரணம், டிபார்ட்மென்டல் ஸ்டோர்
நடத்துபவர்கள் கடும் முயற்சியின் பேரிலேயே தொழிலை நடத்த முடியும்.
விற்பனையும், லாபமும் ஓரளவுக்கு இருக்கும். நகை, ஜவுளி, வாசனைப் பொருட்கள்
விற்பனை செய்பவர்கள் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவர். பிற
வியாபாரிகளுக்கும் சுமாரான லாபமே இருக்கும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு கவனச்சிதறல் காரணமாக
அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். நிர்வாக நடவடிக்கையும்
இடமாற்றமும் ஏற்படும். அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும் அளவுக்கு பணவரவு
இருக்கும்.
மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம்,
விவசாயம், சிவில் இன்ஜினியரிங், மருத்துவம், வங்கியியல், ஆசிரியர்
பயிற்சி, நிதிநிர்வாகம், கேட்டரிங், சட்டம், விலங்கியல், இலக்கியம், பேஷன்
டிசைனர் ஆகிய துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு சுமாராகவே
இருக்கும். கவனத்துடன் படிப்பதால் தரத்தேர்ச்சி பெறுவர். வேலைவாய்ப்பு
கிடைப்பதில் தடங்கல் ஏற்படும். படிப்புக்கான பணவசதியும் சுமாராகவே
இருக்கும்.
பெண்கள்: அரசு மற்றும் தனியார்
துறையில் பணிபுரியும் பெண்களுக்கு கவனக்குறைவு காரணமாக பிரச்னைகள்
ஏற்படும். சலுகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. குடும்பப் பெண்கள்,
கணவரின் அன்பைப் பெற்று மகிழ்ச்சியாக இருப்பர். மே, ஜூன், ஜூலை மாதங்களில்
ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் நடத்தும் பெண்கள் மூலதனத்தை அதிகரித்தால்
பணச்சிக்கலை சந்திப்பர். உற்பத்தி, லாபம் சுமாராகவே இருக்கும். சரக்கு
பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் நன்மை உண்டு.
அரசியல்வாதிகள்:
கடந்த காலங்களில் செய்த நற்பணிகளுக்கு குறைந்த அளவிலான அங்கீகாரமும்
பாராட்டுமே கிடைத்தன. வரும் மே, ஜூன், ஜூலை மாங்களில் புதிய திட்டங்களை
செயல்படுத்தி அபரிமிதமான வளர்ச்சி பெறுவீர்கள். எதிரியாக
செயல்பட்டவர்களும் உங்களைத் தேடி வந்து நட்பு கொள்ள முயற்சிப்பர்.
ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள்.
விவசாயம்:
வருடத்தின் முற்பகுதியில் பயிர் மற்றும் கால்நடை வளர்ப்பில் செலவு
அதிகரிக்கும். பலன் குறைந்த அளவிலேயே இருக்கும். வருட பிற்பகுதியில்
மகசூல் அதிகரிக்கும். கால்நடைகள் மூலம் தாராள வருமானம் கிடைக்கப்
பெறுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்தும் அனுகூலம் உள்ளது.
பரிகாரம்: நடராஜரை வழிபடுவதால் சிரமங்களின் தன்மை குறையும்.
வணங்க வேண்டிய தலம்: சிதம்பரம் நடராஜர் கோயில்
பரிகாரப் பாடல்:
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியும் பால் வெண்ணீறும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.