மகரம்
40/100 (சிரமம்)
உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2
உயர்வையும் தாழ்வையும் ஒன்றாக மதிக்கும் மகரராசி அன்பர்களே!
புத்தாண்டில்
உங்கள் ராசியில் குருவும், ராகுவும் இருக்கிறார்கள். எட்டில் சனி, ஏழில்
கேது என்கிற கிரகநிலை. அஷ்டமச்சனியின் பாதிப்பில் உள்ள உங்களுக்கு
ஜென்மகுரு, ஜென்மராகு, சப்தம கேது ஆகிய கிரக அமர்வு உங்களுக்கு மைனஸ்
பாயின்ட் தான். எந்தச் செயலைச் செய்தாலும் ஒன்றுக்கு பத்துமுறை
யோசியுங்கள். மனதில் இனம் புரியாத பயம் இருக்கும். சிந்தனைகள் தடுமாறும்.
பணவரவு ஓரளவுக்கு இருக்கு மென்றாலும் செலவு பிய்த்துக் கொண்டு போகும். சில
சமயங்களில் கடன் வாங்க வேண்டி வரும். வேலைப்பளு கூடும். எதையோ இழந்ததைப்
போல் மவுனமாக இருப்பீர்கள். ஒரு வகையில் இதுவும் நன்மைக்கே. பேசினால் தானே
பிரச்னையே!
வீடு, வாகன வகையில்
அத்தியாவசிய பராமரிப்பை மேற்கொண்டால் மட்டும் போதுமானது. தாயின் அன்பு
கிடைக்கும். புத்திரர்கள் படிப்பில் சிறந்து விளங்க உரிய அனுகூலம் உள்ளது.
பூர்வ சொத்தில் கிடைக்கும் வருமானம் ஓரளவு குறையும். உடல்நலத்திற்கு
ஒவ்வாத பழக்கங்களை ஒதுக்கி வையுங்கள். சிலர் சேமிப்பை பயன்படுத்துவதும்
சொத்துக்களை விற்பதுமான நிலைக்கு உட்படுவர். தம்பதியர் இடையே கருத்து
வேறுபாடு அதிகரிக்கும். பொறுமை காப்பது நல்லது. நண்பர்களுடன் வீண்
விவாதங்களில் ஈடுபடக்கூடாது. பாதுகாப்பற்ற இடங்களில் பிரவேசிப்பதை
கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தந்தைவழி உறவினர் உங்கள் நலனில்
அக்கறையுடன் செயல்படுவர். தொழில் சார்ந்த வகையில் சிரமங்களை எதிர்கொள்ள
நேரிடும். ஆதாய பணவரவை பெறுகிற முயற்சியில் காலதாமதம் ஏற்படும். வெளியூர்
பயணங்களால் பலன் இருந்தால் மட்டும் சென்றால் போதும். இதை
தவிர்க்காவிட்டால் செலவுகள் மிதமிஞ்சும். ஆண்டின் முற்பகுதி கஷ்டத்தைத்
தந்தாலும் செப்டம்பருக்கு பிறகு நடக்கும் சனி, ராகு-கேது, குரு
பெயர்ச்சிகளில் குருவும் கேதுவும் அனுகூல பலன்களைத் தர உள்ளனர். நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிரிகளால் இருந்த
தொல்லை குறையும். நிலுவைப்பணம் வசூலாகும்.
தொழிலதிபர்கள்:
கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின்சார உதிரி பாகங்கள்,
கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், கார்மென்ட்ஸ், மொபைல்,
டெக்ஸ்டைல்ஸ், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு
நிர்வாகச்செலவு அதிகரிக்கும். மற்ற தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு லாபம்
கிடைக்கும். ஆர்டர்கள் பெறுவதற்கு சுறுசுறுப்பாக செயல்படும் புதிய
பணியாளர்களை நியமிக்க வேண்டும். தொழில் நடைமுறையில் பெரிய அளவிலான மாறுதல்
எதுவும் செய்ய வேண்டாம். இருக்கும் நிலையைத் தற்காத்துக்கொள்வதே சிறப்பான
பலனைத்தரும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, அரிசி, பால்பொருட்கள், மாவு வகைகள், காகிதம்,
விளையாட்டு சாதனங்கள், அழகு சாதனப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள்,
ரப்பர், தோல் பொருட்கள், வாசனை திரவியங்கள், இறைச்சி, வாகன உதிரி
பாகங்கள், கட்டுமானப் பொருட்கள், பாத்திரங்கள், சமையலறை சாதனங்கள்
வியாபாரம் செய்பவர்கள் சந்தையில் பலத்த போட்டியை சந்திக்கும் கிரகநிலை
உள்ளது. மற்றவர்களுக்கும் சுமாரான விற்பனையே இருக்கும். குறைந்த லாப
விகிதத்தில் பொருட்களை விற்றல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில் வளர்ச்சியை
சீர்படுத்தலாம். பொருள் பாதுகாப்பில் தகுந்த கவனம் கொள்வது அவசியம்.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை
சரிவர பின்பற்றுவதால் மட்டுமே பணி இலக்கை நிறைவேற்ற இயலும். சலுகை பெற
தகுதி இருந்தாலும் கூட, நிர்வாகத்திடம் ஆண்டின் முற்பகுதியில் அதிக அளவில்
கோரிக்கை வைக்க வேண்டாம். பிற்பகுதியில் தானாகவே சலுகைகள் கிடைக்கும்.
தொழில்நுட்ப பணியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில்
குறை வராத நன்னிலை திகழும். நிர்வாகத்தின் செயல்பாடுகளை நண்பர்களிடம்
விமர்சிக்கக்கூடாது. இதனால் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
பெண்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சோம்பலால் நிர்வாகத்தின்
கண்டிப்புக்கு ஆளாவர். சக பணியாளர்களின் ஆலோசனையும் உங்கள் பணி சிறக்க
உதவும். ஆடம்பர பணச்செலவை தவிர்ப்பதால் சிரமங்கள் குறையும். குடும்ப
பெண்கள் கணவரின் வாழ்வியல் சூழ்நிலைக்கேற்ப குடும்பத்தை நிர்வகிப்பதால்
மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். கணவரின் அனுமதியின்றி குடும்ப
செலவுகளுக்காக பணக்கடன் எதுவும் பெறக்கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள்
அளவான மூலதனத்துடன் தொழிலில் இருக்கும் அனுகூலத்தை தக்க வைத்துக் கொள்வதே
போதுமானது.
மாணவர்கள்:
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜனியரிங், மரைன்,
ஏரோநாட்டிக்கல், ஜர்னலிசம், சினிமா தொழில்நுட்பம், பிரின்டிங் டெக்னாலஜி,
மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், இசைத்துறை மாணவர்கள்
படிப்பில் பின்தங்க நேரிடும். மற்றவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி படித்தால்
மட்டுமே பயிற்சியின் பலனை முழுமையாக பெற இயலும். பணவசதி குறைந்த அளவில்
கிடைக்கும். சக மாணவர்கள் நல்மனதுடன் படிப்பில் உதவுவர். பெற்றோரின்
எண்ணங்களை நிறைவேற்ற பெருமளவு முயற்சிசெய்து நற்பலன் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்:
துவங்கும் பணியில் அதிக குறுக்கீடு வரும். உங்களின் செயலை சரிவர நிறைவேற்ற
சக நண்பர்களின் உதவியை பெறுவது நல்லது. ஆதரவாளர்கள் உங்களை சந்தேக
கண்ணோட்டத்துடன் அணுகுவர். அதிக செலவு செய்து புகழை வளர்க்க முயற்சிக்க
வேண்டாம். புத்திரர்கள் அரசியல் பணியில் உதவிகரமாக செயல்படுவர்.
எதிரிகளின் சதிவலையில் சிக்காதவகையில் சாதுர்யத்துடன் செயல்படுங்கள்.
அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் அளவான மூலதனத்துடன் வந்த வரை லாபம்
என்கிற ரீதியில் செயல்படுவது நல்லது.
விவசாயிகள்:
சாகுபடி செலவு அதிகரிக்கும். விளைபொருளுக்கு குறைந்த விலையே கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பில் ஓரளவு வருமானம் அதிகரிக்கும். நிலம் தொடர்பான
விவகாரங்கள் பெரிய சிரமம் எதையும் தராது.
கலைஞர்கள்:
வேலை வாய்ப்பை பெறுவதில் போட்டியை சந்திக்க நேரிடும். தொழில் சார்ந்த பழைய
நண்பர்களின் கருணை மனதால் சில வாய்ப்புகள் கிடைத்து தேவையான பணவரவை
பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்: பைரவர்
பரிகாரப் பாடல்:
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப்பிழையும் நினையாப் பிழையும்- நின் ஐந்தெழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப்பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி கம்பனே!