கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
5:26 AM

Welcome Guest | RSS Main | தனுசு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்

தனுசு

60/100 (மோசமில்லை)


மூலம், பூராடம், உத்திராடம் 1


எண்ணத்தால் வாழ்வில் உயர்ந்து நிற்கும் தனுசுராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, ராகுவும், எட்டில் கேது, ஒன்பதில் சனி என்கிற வகையில் கிரகநிலை உள்ளது. இந்த வருடம் குரு பகவான் உங்களுக்கு அனுகூல பலன்களைத் தரும் வகையில் உள்ளார். பேச்சில் அறிவு வளர்ச்சியின் பரிமளிப்பும், நையாண்டித்தனமும் கலந்திருக்கும். இது பலருக்கு பிடிக்காது என்பதால், அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். பயன் அறிந்து பேசி பாராட்டு பெறுங்கள். அதிக பணவரவைப் பெற புதிய வாய்ப்புகள் பலவிதத்திலும் ஏற்படும். அதே நேரம் சில முக்கிய தேவைகளுக்காக கடன் வாங்கவும் நேரும். சகோதரர்களின் உதவி கிடைக்காது.


வீடு, வாகனம் சார்ந்த வகையில் பராமரிப்பு செலவு கூடும். தாயின் நல்வார்த்தை கேட்டு நடப்பதால் சிரமங்களை பெரிதும் தவிர்க்கலாம். புத்திரர்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். பூர்வ சொத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். புதிய எதிரிகள் உருவாவர். தம்பதியர் ஒற்றுமை சீராக இருக்கும். வீண் விவாதம் செய்வதைக் குறைக்க வேண்டும். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய பண பரிவர்த்தனை கூடாது. உடல்நலம் சீர்பெற உரிய மருத்துவம் மற்றும் தியான முறைகள் உறுதுணை புரியும். தந்தைவழி உறவினர்கள் எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வர். இயன்ற வகையில் உதவுவதால் நற்பெயரும் இணக்கமான சூழ்நிலையும் உருவாகும். தொழில் சார்ந்த வகையில் இருக்கும் அனுகூலத்தை தொடர்ந்து பாதுகாப்பதில் உரிய கவனம் செலுத்துவது நல்லது. சிலர் இருப்பிடத்தை வெளியூருக்கு மாற்றிக் கொள்வர். கடன் பணத்தை வசூலிப்பதிலும், ஆதாய பண வரவை பெறும் நோக்கத்திலும் சிலரிடம் கடினமாக நடக்க நேரிடும். திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். வெளியூர் பயணம் அதிக அளவில் ஏற்படும். பயணத்தின்போது பொருட்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது.


வரப்போகும் சனி, ராகு-கேது, குரு பெயர்ச்சிகளில் எந்த கிரகமும் நன்மை தரும் இடங்களில் அமர்வு பெறவில்லை. இதனால் ஆண்டின் முற்பகுதி குருவின் அருளால் ஓரளவு அனுகூலமாகக் கழிந்தாலும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிரமத்தைத் தர துவங்கும். எந்த செயலிலும் முன்யோசனையுடன் ஈடுபட வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். உடல்நல பாதிப்பும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும்.


தொழிலதிபர்கள்: நிதி நிறுவனம், கல்வி நிறுவனங்கள், அச்சகம், புத்தக வெளியீட்டாளர், ரியல் எஸ்டேட், நட்சத்திர ஒட்டல், டிராவல் ஏஜென்சி நடத்துவோர், எஸ்டேட் அதிபர்கள் தொழில்வளம் சிறந்து கூடுதல் லாபம் பெறுவர். அபிவிருத்தி பணிகள் இனிதாக நிறைவேறும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், காகிதம், மின்னணு சாதனங்கள், பர்னிச்சர், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் வளர்ச்சியும் தாராள பணவரவும் பெறுவர். மற்ற தொழில் செய்வோருக்கு சுமாரான லாபம் கிடைக்கும். சக தொழில் சார்ந்தவர்கள் கூடுதல் நட்பு பாராட்டுவர். பணப்பரிவர்த்தனைகளில் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, கட்டுமானப் பொருட்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள், பெயின்ட், சமையலறை சாதனங்கள், ஸ்டேஷனரி, அழகு சாதனம், காய்கறி, பழம், பூ, தோல் பெருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், அளவீடு கருவிகள், பர்னிச்சர், விவசாய இடுபொருட்கள், சணல் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனை சிறந்து அதிக லாபம் பெறுவர். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். தொழிலில் கூட்டுசேர சிலர் ஆர்வமுடன் வருவர். தகுதி அறிந்து சேர்த்துக் கொள்ளலாம். போட்டி பெருமளவு குறையும்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மிகச்சிறப்பாக செயல்புரிந்து பணி இலக்கை நிறைவேற்றுவர். பணியிடங்களில் அனுகூல சூழ்நிலை நிறைந்திருக்கும். கடன்தொகை கேட்டவர்களுக்கு பணம் எளிதாக வந்து சேரும். நிதி நிறுவனம், மார்க்கெட்டிங் போன்ற துறையில் பணிபுரிபவர்கள், பொதுவாக நிறுவனங்களை நிர்வகிப் போர் பண விஷயங்களில் தமக்கு வேண்டியவர் என்று எவருக்கும் சலுகை காட்டக்கூடாது. இதனால் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு உட்படும் நிலைக்கு ஆளாகலாம். கவனம்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சக பணி சார்ந்த அனுபவசாலிகளின் ஆலோசனையால் தமது பணியை செவ்வனே நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் எதிர்பார்த்த கடன், பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்றவை எளிதாக பெறுவீர்கள். குடும்பப் பெண்கள் கணவரிடம் தேவையற்ற விவாதம் செய்யக் கூடாது. குடும்பத்தை திறம்பட நடத்த பணவசதி திருப்திகரமாக இருக்கும். ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழில் அபிவிருத்தியை மேற்கொள்வர். தொழில் சிறந்து எதிர்பார்த்த பணவரவை பெற்றுத்தரும்.


மாணவர்கள்: மருத்துவம், தொழில்நுட்ப பயிற்சிகள், சட்டம், நிதி மேலாண்மை, ஆன்மிகம், இலக்கியம், கம்ப்யூட்டர், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மரைன், ஆசிரியர் பயிற்சி சார்ந்த துறை மாணவர்கள் சிறப்பாகப் படிப்பர். மற்றவர்கள் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணம் திருப்திகரமாக கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர்த்த பிற விஷயங்களில் விவாதம் கூடாது. ஆண்டின் பிற்பகுதியில் படிப்பில் மிகுந்த கவனம் வேண்டும்.


அரசியல்வாதிகள்: நியாய தர்மங்களை அதிகம் பின்பற்றும் மனப்பான்மை கொள்வீர்கள்.  அரசியல் பணியில் குறுக்கீடுகள் வந்து விலகும். ஆதரவாளர்கள் உங்களிடம் அதிக பணம் எதிர்பார்ப்பர். அரசு அதிகாரிகளிடம் நீங்கள் தரும் கோரிக்கைகள் பரிவுடன் நிறைவேற்றப்படும். எதிரிகளை சமயோசிதமாக செயல்பட்டு வெல்வீர்கள். புத்திரர்களை அரசியல் பணியில் அதிக ஈடுபாடு கொள்ளச்சொல்லி வற்புறுத்த வேண்டாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் பல இடர்களை எதிர்கொண்டு புதிய சந்தை வாய்ப்புகளை பெறுவர். தொழில் சிறந்து பணவரவு திருப்திகரமாகும்.


விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதியும் அனுகூல சூழ்நிலையும் நிறைவாக கிடைக்கும். மகசூல் சிறந்து அதிக பணவரவை பெற்றுத்தரும். கால்நடைகளை உரிய முறையில் பராமரிப்பதால் வளர்ச்சியும் சீரான பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகளில் சிரமம் குறையும்.


கலைஞர்கள்: கூடுதல் முயற்சியால் தொழில்வாய்ப்பு பெருகும். பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பாராட்டு விருது பெறுவதற்கு அனுகூல காரணிகள் துணை நிற்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி.


பரிகாரப் பாடல்:


மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி


நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாக்கி


நிறைதனம் சிவிகை மன்றல் நீடுபோகத்தை நல்கும்


இறையவன் குரு வியாழன் இணையடி போற்றி போற்றி.

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz