விருச்சிகம்
70/100 (நலம்)
விசாகம் 4, அனுஷம், கேட்டை
நட்புக்கு முக்கியத்துவம் தரும் விருச்சிக ராசி அன்பர்களே!
புத்தாண்டில்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு, ராகுவும், ஒன்பதில் கேது,
பத்தில் சனி என்கிற வகையிலும் கிரகநிலை உள்ளது. இவர்களில் ராகு மட்டுமே
உங்களுக்கு அளப்பரிய நற்பலன்களை வழங்குவார். குருவின் பார்வை பெறுகிற
ஸ்தானங்களும், ஓரளவு அனுசரணையான பலனைத் தரும். மனதில் இருந்த
சந்தேகங்களுக்கு சரியான விடை கிடைக்கும். பேசும் வார்த்தை தத்துவம் போல
சிறந்து விளங்கி மற்றவர்களின் பாராட்டைப் பெறும். செயல்களில் வெற்றியும்
அதனால் புகழும் வந்து சேரும்.
வீடு,
வாகன வகையில் தற்போதைய நிலையைப் பாதுகாத்தாலே போதும். தாய்வழி
உறவினர்களிடம் நற்பெயர் பெற அதிக ஆர்வமுடன் செயல்படுவீர்கள். பூர்வ
சொத்துக்களை பராமரிப்பதில் நம்பகம் நிறைந்தவர்களை பணியமர்த்துவது அவசியம்.
புத்திரர்கள் ஆடம்பர பணச்செலவை மேற்கொள்ள விரும்புவர். முக்கியஸ்தர்கள்
சிலர் உங்களின் அன்பை பெற விரும்புவர். அவர்களைக் கொண்டு சில காரியங்களைச்
சாதித்துக் கொள்ளலாம். குரு, ராகுவின் அருளால் கணவன், மனைவி ஒற்றுமை
சிறந்து விளங்கும். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு சரியாகும்.
உடல்திறனுக்கு
மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆன்மிக நம்பிக்கையில் புதிய வளர்ச்சி
பரிமாணம் ஏற்படும். அதிக பணவருமானம் கிடைக்கும் தொழில் என்று சிலர்
நம்பிக்கை தரும் வார்த்தைகளுடன் உங்களை அணுகுவர். கவனமுடன் செயல்படுவது
நல்லது. தொழில், வியாபாரம் சார்ந்த வகையில் நெருக்கடி உருவாகும். ஆனாலும்,
எதிர்பாராத வகையில் ஆதாய பணவரவு வந்து சேரும். வெளியூர் பயணம் கூடுதல்
செலவை ஏற்படுத்தினாலும் இனிய அனுபவத்தையும் புகழையும் பெற்றுத்தரும்.
இளமைக்கால நண்பர்களை மதித்து அவர்களுக்கு தேவையான உதவியை வழங்குவீர்கள்.
மூத்த சகோதரர்களின் அன்பு நிறைந்த வழிகாட்டுதல் மனதில் உற்சாகத்தை
உருவாக்கும். இந்த வருடம் நடக்கிற ராகு-கேது, குரு, சனி பெயர்ச்சிகளில்
சனி மட்டுமே அளப்பரிய அனுகூல பலன்களைத் தர உள்ளார். அக்டோபர், நவம்பர்,
டிசம்பர் மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். புதிய வீடு, சொத்து, நிலம்
போன்றவை வாங்குவீர்கள். சமூக அந்தஸ்து உயரும். குறிப்பாக பெண்களிடம்
நன்மதிப்பு பெறுவீர்கள்.
தொழிலதிபர்கள்:
வாகனம், காகிதம், அரிசி, மாவுபண்டங்கள், பட்டாசு, அடுப்பு, மெழுகுவர்த்தி,
ஜெனரேட்டர், மின் சாதனங்கள், டெக்ஸ்டைல்ஸ், தோல் சார்ந்த தொழிலதிபர்கள்
தொழிலில் இடைஞ்சல்களைச் சந்தித்தாலும் ஆண்டின் பிற்பகுதியில் இடர்
விலகப்பெறுவர். பொருள் உற்பத்தி பெருகி தாராள பணவரவு கிடைக்கும். அச்சகம்,
மர அறுவை மில், கல்குவாரி நடத்துவோருக்கு சுமாரான நிலையே இருக்கும்.
மற்றவர்களுக்கு வரவும் செலவும் சரியென்ற நிலை இருக்கும். சமூகத்தில்
அந்தஸ்து தரும் பதவி, பொறுப்பு கிடைக்கும்.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனுகூல சூழ்நிலை
அமையப்பெறுவர். நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயரும்,
சலுகைகளும் பெறுவீர்கள். தொழில்நுட்ப பணியாளர்கள் சுறுசுறுப்பான பணியால்
பொருட்களின் உற்பத்தி, நிர்வாகச் செலவை பெருமளவில் சிக்கனப்படுத்துவர்.
இதனால் நிர்வாகத்தின் பரிசும் பாராட்டும் கிடைக்கும். சக பணியாளர்களிடம்
இருந்த மனக்கசப்பு விலகும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்,
பாத்திரங்கள், விவசாய இடுபொருட்கள், இரும்பு சார்ந்த பொருட்கள், மருத்துவ
உபகரணம், மருந்து, உணவு பண்டங்கள், தானியங்கள், மளிகை, மின்சார
உபகரணங்கள், அடுப்பு, பர்னிச்சர் வியாபாரம் செய்பவர்கள் புதிய
வாடிக்கையாளர்கள் கிடைத்து நல்ல லாபம் அடைவர். வளர்ச்சி திட்டங்களை
குறைந்த அளவில் செயல்படுத்துவது நல்லது.
பெண்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தான் உண்டு, தனது வேலை
உண்டு என்ற வகையில் செயல்படுவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். உடன்
பணிபுரிபவர்கள் மனம் உவந்து உங்கள் பணி சிறக்க உதவுவர். நிர்வாகத்திடம்
எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள், கணவரின் நல்அன்பும்,
தாராள பணவசதியும் பெற்று இனிய வாழ்வு நடத்துவர். புத்திரர்களின் செயல்களை
ஒழுங்கு படுத்துவதிலும் ஈடுபடுவீர்கள். தங்க நகைகளை இரவல் கொடுக்கவோ,
வாங்கவோ கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் புதிய ஆர்டர்கள் கிடைத்து
தொழில் முன்னேற்றம் பெறுவர். கணவர் மற்றும் தோழியரின் ஆதரவான செயலால்
கூடுதல் பணவரவு கிடைக்கும்.
மாணவர்கள்:
ஐ.ஏ.எஸ்., மருத்துவம், கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம், மரைன்,
ஏரோநாட்டிக்கல், உயிரியல், சிவில் இன்ஜினியரிங், மார்க்கெட்டிங், நிதி
மேலாண்மை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் உற்சாகமாகப் படித்து சாதனை
நிகழ்த்துவர். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். பெற்றோரிடம் எந்த
வகையிலும் வாக்குவாதம் கூடாது. ஆடம்பர பொருட்களை வாங்கும் ஆர்வத்தை
குறைத்துக் கொள்வது நல்லது.
அரசியல்வாதிகள்:
மனதில் அதிக துணிச்சலுடன் செயல்படுவீர்கள். செயல்களில் வெற்றி கிடைக்கும்.
விலகிச் சென்ற ஆதரவாளர்களும் விருப்பத்துடன் நாடி வருவர். எதிரிகளும்
வியக்கும் வகையில் சமூக அந்தஸ்து உயரும். வெகுநாள் எதிர்பார்த்த
பதவிப்பொறுப்பு கிடைக்கும். அரசியல் பணிக்கு புத்திரர்களை அளவுடன்
பயன்படுத்துவது நன்மையை தரும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் தொழில்
சிறந்து அதிக பணவரவைப் பெறுவர்.
விவசாயிகள்:
மகசூல் சுமாராகவே இருக்கும். சாகுபடி செலவு அதிகரிக்கும். கால்நடை
வளர்ப்பில் அபிவிருத்தியும் கூடுதல் பணவரவும் பெறுவீர்கள். நிலம் தொடர்பான
விவகாரத்தில் அனுகூல தீர்வு பெறும்.
கலைஞர்கள்:
தகுதி, திறமையை முழுமனதுடன் செயல்புரிந்து பரிமளிக்கச் செய்வீர்கள். புதிய
ஒப்பந்தம் கிடைத்து அதிக பணவரவும் தகுந்த புகழும் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்: நந்தீஸ்வரர்.
பரிகாரப் பாடல்:
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!