கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
3:50 PM

Welcome Guest | RSS Main | மிதுனம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்


மிதுனம்

50/100 (கவனம்)


மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3


அறிவையும் செயல்திறனையும் கண்ணெனப் போற்றும் மிதுனராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு, ராகுவும், இரண்டில் கேது, மூன்றில் சனி என்கிற வகையில் கிரகநிலை உள்ளது. சனி மட்டுமே மிக பிரமாதமாக நல்ல பலன்களை அள்ளித்தருகிறார். குருவும் ராகுவும் மனதில் சில தடுமாற்றங்களை உருவாக்குவர். ஆன்மிக பெரியவர்களின் அருள் நிறைந்த வாக்குகளை உணர்ந்து நடந்து கொண்டால் பிரச்னைகள் இருக்காது. எல்லா செயல்களிலும் பிரச்னைகள் குறையும். தாயின் தேவையை நிறைவேற்றி குடும்பத்தில் ஒற்றுமை வளரச் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களின் நன்மதிப்பை பெறுவதில் சிறு தடை வந்து விலகும். அறிமுகம் இல்லாத எவருக்கும் வீடு, வாகனத்தில் இடம் தரக்கூடாது. புத்திரர்களின் செயல்பாட்டை அறிந்து வழிநடத்துவதால் அவர்களின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்கலாம். பூர்வ சொத்தில் வருமானம் குறைந்த அளவில் கிடைக்கும். எதிரிகளை வென்று புதிய சகாப்தம் படைக்க மனம் விரும்பும். எனவே, தவறான நடத்தை உடையவர்களின் சேர்க்கை சகவாசத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஏற்படும். இதனால், பின் விளைவுகள் மோசமாகலாம். இறைவனின் பொறுப்பில் அவர்களை ஒப்படைத்து விடுங்கள். இதனால் நல்லதே நடக்கும்.


உடல்நலத்தில் சீரான கவனம் வேண்டும். நடுத்தர வயது உடையவர்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீர் தொடர்புடைய நோய் வந்து விலகும். கணவன், மனைவி குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சியை நினைத்து தேவையற்ற மனக்கோட்டை கட்டுவர். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ பழகிக் கொண்டால் பொருள் இழப்பைத் தடுக்கலாம். நண்பர்களிடம் பண பரிவர்த்தனை, விவகாரங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் எச்சரிக் கையுடன் நடந்துகொள்ளவும். உடல்திறனுக்கு மீறிய எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. வாகன பயணத்திலும் ஆபத்து நிறைந்த இடங்களிலும் உரிய பாதுகாப்பு முறையை பின்பற்றுவது நல்லது. பணத்தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், சில அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் சூழ்நிலை ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் தற்போது இருக்கும் நிலையை தக்கவைக்கவே பெரும்பாடு படுவீர்கள். அதிக உழைப்பு நல்ல வளர்ச்சியை பெற்றுத்தரும். வெளியூர் பயணம் கூடுதல் பணச்செலவையும் சில அனுபவ பாடத்தையும் கற்றுத்தரும். இந்த வருட ராகு கேது, சனி பெயர்ச்சி நவம்பர், டிசம்பர் மாதங்களில் சிரம பலன்களை தந்தாலும் குருவின் பெயர்ச்சி அதில் இருந்து தாக்குப் பிடிக்க வைக்கும்.


தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம் நடத்துபவர்கள், காகிதப்பெருட்கள், நோட்டு புத்தகம், காப்பி, ஏலக்காய், மலைத்தோட்டப் பயிர்கள், வாசனை திரவியங்கள், உணவு பண்டங்கள், பர்னிச்சர் உற்பத்தி செய்பவர்கள் தொழில்வளம் சிறந்து கூடுதல் பணவரவைப் பெறுவர். உற்பத்தி அதிகரிப்பும் புதிய வாடிக்கையாளர் தொடர்பும் ஏற்படும். பங்கு சந்தை வர்த்தகம், வீடு, வாகனக்கடன் வழங்கும் நிறுவனம் நடத்துபவர்கள், கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை மேற்கொள்ள விரும்புவர். தொழில் போக்கின் நிலவரம் அறிந்து அதிக மூலதனம் செய்வது நல்லது.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஸ்டேஷனரி, அழகு சாதனப் பொருட்கள், பொம்மை, பாத்திரம், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், கருவிகள், மளிகை, பர்னிச்சர் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இனிய சேவை புரிவதின் பயனாக மட்டுமே வியாபாரத்தில் வளர்ச்சித்தன்மையை காணலாம். தொழில் அபிவிருத்தி என்கிற வகையில் எவ்வித பணக்கடனும் பெறக்கூடாது. சரக்கு வாகனங்களின் மூலமாக கூடுதல் பணவரவு கிடைக்கும். பண வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அறிமுகம் இல்லாதவர்களுடன் கூட்டுசேர முயற்சிக்க வேண்டாம்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே பணியில் குறை வராத தன்மையைப் பெற முடியும். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. தொழில்நுட்பத் துறை சார்ந்த பணியாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் இயந்திரங்களின் பழுதுகளை சரிசெய்ய இயலும். கவனக்குறைவால் தொழில்நுட்ப கோளாறு அதிகரிக்கும். இதனால் நிர்வாகத்தின் அதிருப்திக்கு உள்ளாகும் நிலை வரும். ஆடம்பர பணச்செலவு கூடாது. மின்சாரம், நெருப்பு, கனரக இயந்திரங்கள் துறைகளில் பணிபுரிபவர்கள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளை வரை முறைப்படுத்தி விரைந்து செயல்படுவதால் மட்டுமே இலக்கை சீராக நிறைவேற்ற இயலும். பணி தொடர்புடைய சந்தேகங்களை உரிய வகையில் தெளிவு செய்வதால் குறைகள் அதிகம் வராத நன்னிலை ஏற்படும். நிர்வாகத்திடம் பெற விரும்பிய சலுகைகள் தாமதமாகவே கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு பணவசதி சீராக கிடைத்தாலும் செலவு கட்டுக்கு மீறி செல்லும். உடல்நலத்திற்கு தகுந்த ஓய்வு அவசியம். சுயதொழில் நடத்தும் பெண்கள் அளவான உற்பத்தி, கொள்முதல் என்ற வகையில் செயல்படுவதால் தேவையற்ற பண இழப்புவராமல் தவிர்க்கலாம்.


மாணவர்கள்: சட்டம், நீதித்துறை, அரசு நிர்வாகம், கேட்டரிங், இதழியல், நிதி மேலாண்மை, மரைன், தகவல் தொழில்நுட்பம், ஏரோநாட்டிக்கல், ஆடிட்டிங், கம்ப்யூட்டர், இசை, வேத சாஸ்திரம், தொல்பொருள் ஆராய்ச்சி, தத்துவம், சிவில் துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் உரிய கவனத்துடன் பயின்று நல்ல தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புகழை தக்கவைக்க கூடுதல் செலவாகும். வெகுநாள் தாமதமான விவகாரத்தின் முடிவுகள் அனுகூல செய்தியை கொண்டுவந்து தரும். அரசியல் பணிக்கு புத்திரரை அளவுடன் பயன்படுத்துவது நலம் தரும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் சுமாரான அளவில் பணவரவைப் பெறுவர். அபிவிருத்தி பணி எதுவும் தற்போது வேண்டாம்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பிற்கு அதிக பணச்செலவு ஏற்படும். மகசூலும் சுமாராகவே இருக்கும். அதே சமயம் கால்நடைகள் அபிவிருத்தியும் அதனால் தாராள பணவரவும் கிடைக்கும்.


கலைஞர்கள்: தொழில் வாய்ப்பில் சுமாரான நிலையைப் பெறுவர். சிலருக்கு உபதொழில் மூலமாக கூடுதல் வருமானம் கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: மாங்காடு காமாட்சி அம்மன்.


பரிகாரப் பாடல்:


மக்களின் குறைதீர்க்கும் மங்கல நாயகியே

மாங்காடு பதிவாழும் மாதர் திலகமே


மங்கலம் உண்டாக மனமுருகி வந்தேன்


மழலை என்னை காத்திடு தாயே!

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz