மேஷம்
50/100 (சுமார்)
அசுவினி, பரணி, கார்த்திகை 1
வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே!
கேது பெயர்ச்சியில் கேதுவின் அருள் உங்களுக்கு கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழில் சிறந்து ஆதாய பண வரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் வெற்றி உண்டு. இஷ்ட தெய்வ அருள் பரிபூரணமாக பெறுவீர்கள்.
தொழிலதிபர்கள்:
பொறியியல் கல்லூரி, மோட்டார் வாகன உற்பத்தி, இயந்திர தொழிற்சாலை,
மார்பிள், டைல்ஸ் உற்பத்தி, பாய்லர் தொழிற்சாலை, விசைத்தறி, பர்னிச்சர்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி,
ஜவுளி, ரப்பர், தோல் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், வாசனை திரவியம்,
உணவு பண்டங்கள், பெயிண்ட் வகைகள், இறைச்சி, மீன் வகைகள் ஏற்றுமதி,
இறக்குமதி சார்ந்த தொழிலதிபர்கள் கூடுதல் கவனத்துடன் தொழில் ஒப்பந்தங்களை
பெற முயற்சிக்க வேண்டும். அபிவிருத்தி பணிகளை தாமதமாக செயல்படுத்தலாம்.
மற்ற தொழில் செய்வோரும் மிகப்பெரிய லாபம் எதிர்பார்க்க இயலாது.
கூட்டுத்தொழில் செய்பவர்களுக்குள் கருத்து வேற்றுமை, பாகப்பிரிவினை போன்ற
நிலை ஏற்படலாம். உற்பத்தி, நிர்வாக பணச்செலவு அதிகரிக்கும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியின் முக்கியத்துவம் கருதி
கவனமுடன் செயல்பட வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதானம் அவசியம்.
தொழில்நுட்பம் சார்ந்த இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் பாதுகாப்பு
விதிமுறைகளை அவசியம் பின்பற்றி செயல்பட வேண்டும். மேலும் கட்டுமானப்பணி,
பர்னிச்சர் வடிவமைப்பு, கலைப்பொருட்கள் தயாரிப்பு துறையில்
பணிபுரிபவர்களும் கவனமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு பணியிட மாற்றம்
ஏற்படும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு வளரும். பணவரவு ஓரளவுக்கு
இருக்கும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், உடற்பயிற்சி கருவி, மருத்துவ உபகரணம்,
சமையலறை சாதனங்கள், பர்னிச்சர், மளிகை, விவசாய இடுபொருள், உணவு பண்டங்கள்,
பேக்கரி, பழம், காய்கறி, குளிர்பானம், ஸ்டீல் பொருட்கள், பொம்மை,
பிளாஸ்டிக் பொருட்கள், காகித பொருட்கள், மினரல் வாட்டர், இறைச்சி, அழகு
சாதனப் பொருட்கள், சமையல் எண்ணெய், மருந்து வியாபாரம் செய்பவர்கள் நல்ல
முன்னேற்றம் காண்பர். மற்றவர்களுக்கு லாபம் ஓரளவு வருமெனினும், சரக்கு
வாகனம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். புதிய
வாடிக்கையாளர்களைப் பெற இனிய பேச்சு உதவும். போட்டியாளர்களுடன் வீணான
சச்சரவு கூடாது.
பெண்கள்:
அரசு மற்றும் தனியார் து�யில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவு காரணமாக
பிரச்னைகளைச் சந்திக்கலாம். பணம் கொடுக்கல், வாங்கலில் நிதான நடைமுறை
நல்லது. குடும்பப் பெண்கள், குடும்பச்செலவுக்கு சற்று திண்டாடுவர்.
சிக்கனம் தேவை. கணவருடன் குடும்ப விஷயம் தொடர்பான விவாதங்களில் சிக்கலாம்.
தொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் அளவான மூலதனமிட்டால் போதும்.
வேலைப்பளு கூடும். சிலருக்கு புதிய சந்தை வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக தேடி
வரும். லாபமும் செலவும் சம அளவில் இருக்கும்.
மாணவர்கள்:
தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம்,
மருத்துவம், ஓவியம், ரசாயனம், ஆசிரியர் பயிற்சி, இசை, சினிமா
தொழில்நுட்பம், கேட்டரிங், மரைன், சட்டம், ஏரோநாட்டிக்கல், வங்கியியல்,
இதழியல், சிவில் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் கவனமாகப்
படிப்பதால் மட்டுமே சீரான தேர்ச்சி பெற இயலும். மற்ற துறையில் உள்ளவர்கள்
சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும்.
அரசியல்வாதிகள்:
ஆதரவாளர்களின் நம்பிக்கையை பெற அதிகம் செலவாகும். எதிரிகளிடம்
விலகிப்போவதால் சிரமம் குறையும். அரசு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை சாதிக்க
செய்யும் முயற்சி ஓரளவு பலன் தரும். அரசியல் பணிக்கு புத்திரர்களை அளவுடன்
பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொது விவகாரங்களில் ஈடுபடுவதால் அவப்பெயர்
ஏற்படும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமைமிகு பணியாளர்களை
உதவிக்கு வைத்துக் கொண்டால் மட்டுமே தொழில்வளம் சீராகும்.
விவசாயிகள்: மகசூல் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பணச்செலவு அதிகரிக்கும். நில விவகாரங்களில் தீர்வு பெற தாமதமாகும்.
கலைஞர்கள்: ஓரளவே சான்ஸ் கிடைக்கும். பணவரவு சுமாராக இருக்கும்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு சீராகும்.
வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை சுந்தரேஸ்வரர்
பரிகாரப்பாடல்:
மந்திரம் நான்மறை ஆகி, வானவர்
சிந்தையுள் நின்று, அவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே.