ரிஷபம்
80/100 (சூப்பர்)
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1, 2
புதிய விஷயங்களை அறிவதில் அதிக ஆர்வமுள்ள ரிஷபராசி அன்பர்களே!
துவங்கும்
புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குருவும் ராகுவும்,
மூன்றில் கேது, நான்கில் சனி என்கிற வகையில் கிரகநிலை உள்ளது. இந்த வருடம்
குருவும், கேதுவும் உங்களுக்கு அபரிமிதமான நற்பலனை அள்ளி வழங்குவர்.
யாரிடமும் கவர்ச்சியாகப் பேசி சூழ்நிலைகளை அனுசரணையாக
மாற்றிக்கொள்வீர்கள். ஆன்மிக செய்திகளை அறிவதில் ஆர்வம் ஏற்படும். தெய்வ
திருப்பணியில் ஈடுபாட்டுடன் செயல்புரிவீர்கள். நல்லவர்களின் நட்பும்
உதவியும் எளிதாக கிடைக்கும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் நல்லது.
வீடு,
வாகன வகையில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடம்
கருத்து வேறுபாடு உருவாகி, பின்னர் சரியாகும் கிரகநிலை உள்ளது. பூர்வ
புண்ணிய பலமும் இஷ்டதெய்வ அருளும் பூரணமாக துணைநிற்கும். புத்திரர்களின்
படிப்பு சிறப்பான முன்னேற்றம் பெறும். புதிய சொத்து, வீடு வாங்கும்
முயற்சி எளிதாக நிறைவேறி மனதை மகிழ்விக்கும். குலதெய்வ வழிபாடு சிறப்பாக
நடத்துவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த எதிரிகள் அதிகமாகச்
சிரமப்படுவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதியர் ஒருவர்
நலனில் ஒருவர் அக்கறையுடன் செயல்படுவர். குடும்பத்தில் மகிழ்ச்சியும்
குதூகலமும் நிறைந்திருக்கும். நற்குணம் உள்ள புதிய நண்பர் அறிமுகம்
ஏற்படும். சிலருக்கு பணியிட மாற்றம், வீடு மாற்றம் போன்றவை வரும். அதிக
பயன் தராத ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும்.
தொழில்,
உத்தியோகம், வியாபாரம் சார்ந்த வகையில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்பு
அதிகரிக்கும். உரிய வகையில் பயன்படுத்தி நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள்.
பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் அபிவிருத்தியில் ஏற்படும்
குறுக்கீடுகளை சரிசெய்வீர்கள். வெளியூர் பயணம் சில நன்மையை பெற்றுத்தரும்.
மூத்த சகோதரர்கள் சொல்லும் ஆலோசனையை கேட்டு நடப்பதால் சில நன்மை
உருவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். இந்த வருட ராகு
கேது பெயர்ச்சியால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொருள் இழப்பு,
உறவினரிடம் கருத்து வேறுபாடு, இடமாற்றம் போன்றவை ஏற்படும்.
தொழிலதிபர்கள்:
மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,
கம்ப்யூட்டர், செல்போன், விளையாட்டு சாதனங்கள், ஸ்டீல் பொருட்கள், வாசனை
திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், உணவு பண்டங்கள்
உற்பத்தி செய்பவர்கள், கூடுதல் ஆர்டர் பெற்று தொழில்வளம் சிறக்கப்பெறுவர்.
மற்றவர்களுக்கும் பணவரவு அதிகரிக்கும். தொழில் அபிவிருத்தி பணிகளை
செம்மையாக நிறைவேற்றுவர். திறமைமிகு பணியாளர் கிடைத்து உற்பத்தி பெருகும்.
தங்கும் விடுதிகள், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, கடற்கரை, மலைவாசஸ்தல
ரிசார்ட்ஸ் நடத்துபவர்கள் தங்கள் தொழிலுக்கு உதவும் வகையில் இணை
தொழில்களும் துவங்கும் புதிய வாய்ப்பு உருவாகி நிறைவேறும்.
வியாபாரிகள்:
ஜவுளி, நகை, வாகன உதிரிபாகங்கள், கட்டட கட்டுமானப் பொருட்கள்,
கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், பால் பொருட்கள், குளிர்பானம்,
சோப்பு, வாசனை திரவியங்கள், சமையலறை சாதனங்கள், பொம்மை, விளையாட்டு
சாதனங்கள், ஜெனரேட்டர், எரிவாயு அடுப்பு, பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள்,
அணிகலன்கள், அழகு சாதன பொருட்கள், ரெடிமேட் ஆடை, கலை பொருட்கள், காகித
பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் தாராள பணவரவும் கூடுதல்
வாடிக்கையாளர்களும் கிடைக்கப்பெறுவர். மற்றவர்களுக்கு லாபம் அதிகம்
என்றாலும், சரக்கு வாகனம் அல்லது பிறவகைகளில் பராமரிப்பு செலவு
அதிகரிக்கும். சக வியாபாரிகளும் ஒத்துழைப்பர். போட்டி குறையும்.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமது தகுதி, திறமையை
வெளிப்படுத்தி சிறப்புற பணிபுரிவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். பணி
உயர்வு, விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.
தொழில்நுட்பம் சார்ந்த வகையில் பணிபுரிபவர்கள் குறைந்த காலத்தில்
உற்பத்தியைப் பெருக்கி கூடுதல் பணவரவைப் பெறுவர். கைவினைப் பொருட்கள்,
பர்னிச்சர், ஆடை வடிவமைப்பு, டெக்கரேஷன் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
கூடுதல் வேலைவாய்ப்பும் நிர்வாகத்திடம் அதிக சலுகையும் கிடைக்கப்பெறுவர்.
சக பணியாளர்களுடன் நட்புறவு வளரும். சிலருக்கு உடன் பணிபுரிபவர்களை
நிர்வகிக்கும் உயர் பொறுப்பு கிடைக்கும்.
பெண்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணியில் ஆர்வமுடன்
ஈடுபடுவர். பணி இலக்கு எளிதாக நிறைவேறும். சக பணியாளர்கள் பணியில்
உறுதுணையாக செயல்படுவர். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற சலுகைகள்
எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் நல் அன்பும்
சீரான பணவசதியும் பெற்று மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். உறவினர்கள் உரிய
மரியாதையுடன் நடந்துகொள்வர். ஆடை, ஆபரணச் சேர்க்கை தகுதிக்கேற்ப
கிடைக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி
பணியை மேற்கொள்வர். தொழில் சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும்.
மாணவர்கள்:
சிவில் இன்ஜினியரிங், கேட்டரிங், மின்சாதனங்கள் பராமரிப்பு, அழகுக் கலை,
பொது மருத்துவம், ஆடை வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பம், சினிமாத்துறை,
விளம்பர மாடலிங், பவுதிகம், ரசாயனம், இதழியல், தொல்பெருள், கனிமவள
ஆராய்ச்சி, மோட்டார் மெக்கானிசம், ஆசிரியர் பயிற்சி, ஆடிட்டிங்,
பிரிண்டிங் டெக்னாலஜி போன்ற துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் சிறந்த
தரத்தேர்ச்சியும் பாராட்டும் பெறுவர். பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு
வரவேற்புடன் கூடிய உயர்ந்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிலருக்கு சுயதொழில் துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். பெற்றோரின்
கனவை நிறைவேற்றுவதில் முழு மனதுடன் செயல்புரிந்து வெற்றி பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்:
அரசியல்வாதிகள் ஆர்வமுடன் செயல்பட்டு சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து
பெறுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் மக்கள் நலனுக்காக வைக்கும் கோரிக்கை
எளிதாக நிறைவேறும். ஆதரவாளர்கள் உங்களிடம் கூடுதல் நம்பிக்கை கொள்வர்.
புத்திரர்களும் அரசியல் பணிக்கு உதவி, தாமும் பயிற்சி எடுத்துக்கொள்வர்.
அரசியலுடன் தொழில் நடத்தும் வாய்ப்பு பெற்றவர்கள் தொழில் சிறந்து ஆதாய
பணவரவு காண்பர். வெகுநாள் எதிர்பார்த்த பதவி பொறுப்பு எளிதாக வந்து சேரும்.
விவசாயிகள்:
பயிர் வளர்க்க தேவையான அனைத்து வசதிகளும் ஒருங்கே அமையப்பெறுவர். மகசூல்
சிறந்து அதிக பணவரவை பெற்றுத்தரும். கால்நடை வளர்ப்பில் குறைந்த அளவு பணம்
கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்களில் அனுகூல வெற்றி உண்டு.
கலைஞர்கள்:
தொழிலில் இருந்த தடை விலகி புதிய வாய்ப்பு கிடைக்கும். கலைத்திறமையை
முழுமையாக பயன்படுத்தி பாராட்டும் கூடுதல் பணவரவும் பெறுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்: ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பிரான்
பரிகாரப் பாடல்:
ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழியேறிக்கண்டீர்
கூடி வானவரேத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடுபுட்கொடியாதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.