கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:39 AM

Welcome Guest | RSS Main | வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி? | Registration | Login
Site menu

Statistics

Total online: 2
Guests: 2
Users: 0

வைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி?

ஆண்டி வைரஸ் புரோகிராம் பதிந்து வைத்திருக்கும் பலர் திடீரென என் ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் மீறி சில வைரஸ்கள் வந்து என் பொழைப்பையே கெடுத்துருச்சே! என்று அங்கலாய்ப்பார்கள். இந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்களே இப்படித்தான். வைரஸ்களை எதிர்த்து திடீரென வேலை செய்யாது என்று புலம்புவார்கள். நப்பாசையில் ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்தி ஸ்கேன் ஓடவிட்டுப் பார்ப்பார்கள்.

எந்த வைரஸும் இல்லை என்று செய்தி வந்தவுடன் நம் தலைவிதி அவ்வளவுதான் என்று கூறி டெக்னீஷியன் மூலம் வைரஸ்களைக் காலி செய்வார்கள் அல்லது இந்த புரோகிராம் சரியில்லை என்று வேறு ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமிற்குத் தாவுவார்கள். இது எதனால் ஏற்படுகிறது? என்று சற்றுப் பார்ப்போம். நீங்கள் என்ன செய்கிறீர்கள். நீங்களே அல்லது யார் மூலமாவது ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கிறீர்கள். அதுவும் அவ்வப்போது நீங்கள் இன்டர்நெட்டில் உலா வருகையில், இமெயில் இறக்குகையில், பிளாஷ் டிரைவ் பயன்படுத்துகையில் சிகப்பு கட்டத்தைக் காட்டி இதில் வைரஸ் இருந்தது. நான் கிளீன் செய்துவிட்டேன் என்று காட்டுகிறது. உங்களுக்கு சந்தோஷமோ சந்தோஷம்.

ஆனால் சிறிது நாட்கள் கழித்து கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது என்று தெரிகிறது. அப்போது தான் முதல் பத்தியில் சொல்லப்பட்ட நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள். இங்கு நீங்கள் செய்யத் தவறிய சில செயல்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்ப்போம்.

1. ஆண்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் அதை மறந்துவிடக் கூடாது. அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை அப்டேட் செய்திட வேண்டும். அப்போதுதான் அண்மைக் காலத்தில் வந்த வைரஸ்களைக் கண்டறிவ தற்கான புரோகிராம்கள் டவுண்லோட் செய்யப்பட்டு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மேம்படுத்தப்படும். எனவே நீங்கள் ஸ்கேன் செய்வதாக இருந்தால் முதலில் இன்டர்நெட் இணைப்பு பெற்று உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று அப்டேட் செய்திடவும். அதன்பின் ஸ்கேன் செய்திடவும்.

2. முதலில் உங்கள் ஆண்டிவைரஸ் புரோகிராமினை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாம். வழக்கமாக டாஸ்க் பாரில் வலது ஓரத்தில் இதன் ஐகான் இருக்கும். இதனை டபுள் கிளிக் செய்தால் இந்த புரோகிராம் திறக்கப்படும். ஐகான் இல்லையா? ஸ்டார்ட் கிளிக் செய்து புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் பட்டியலில் ஆண்டி வைரஸ் புரோகிராமைக் காணலாம். அங்கு கிளிக் செய்திடலாம்.

3. இது திறந்தவுடன் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் மெயின் பக்கத்தில் நீங்கள் இருப்பதைக் காணலாம். இதில் இந்த புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஏதுவான பிரிவுகள் இருக்கும். அனைத்தையும் பார்த்து ஸ்கேன் செய்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

4. ஸ்கேன் டேபைக் கிளிக் செய்தவுடன் குறிப்பிட்ட டிரைவ் அல்லது அனைத்து டிரைவ்களையுமா எனத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கும். அனைத்து டிரைவ்களையும் அல்லது முழு கம்ப்யூட்டரையும் ஸ்கேன் செய்திடும் வசதியினைத் தேர்ந்தெடுக்கவும். உடனே ரிபோர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும். ஸ்கேன் முடிந்தவுடன் ஸ்கேன் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு கண்டறியப்பட்ட வைரஸ்கள், அவை இருந்த பைல்கள், வைரஸ் அழிக்கப்பட்டுவிட்டதா, காப்பு இடத்தில் (குவாரண்டைன்) வைக்கப்பட்டுள்ளதா என்று காட்டப்படும்.

இவற்றை அழிப்பதற்கான ஆப்ஷன் உங்களிடமே விடப்படும். அதே மெயின் விண்டோவிலேயே தொடர்ந்து தானாகக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாக ஸ்கேன் செய்திடும் பணியை செட் செய்திடவும் வாய்ப்பு தரப்படும். உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் செய்யப்படும் போதெல்லாம் ஸ்கேன் செய்திடும் வகையிலோ அல்லது வாரம் ஒரு முறை மாதம் ஒரு முறையோ ஸ்கேன் செய்திட செட் செய்திடலாம்.

5. ஆட்டோமேடிக் ஸ்கேன் செய்திட எப்படி செட் செய்வது எனப் பார்ப்போம். முதலில் உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின் டூல்ஸ் (Tools) மெனு செல்லுங்கள். Scheduler என்பதைத் தேர்ந்தேடுங்கள். அதன்பின் Schedule Scan என்ற பிரிவிற்குச் செல்லுங்கள். (இந்த சொற்கள் சில ஆண்டி வைரஸ் புரோகிராமில் வேறு மாதிரியாக இருக்கலாம்) ஷெட்யூல் ஸ்கேன் தேர்ந்தெடுத்தவுடன் நியூ என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது சில கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் வகையில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். அவை Event Type, When To Do, How Often, Start Time எனப் பலவகைப்படும். இவற்றின் தன்மைக்கேற்ப உங்கள் முடிவுப்படி செட் செய்திடுங்கள். அனைத்தும் முடித்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறுங்கள். இதன்பின் நீங்கள் செட் செய்த படி ஸ்கேன் தானாக நடைபெறும். கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் இல்லாமல் இயங்கிட எப்போதும் மேம்படுத்தப்பட்ட உயிர்த்துடிப்புள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம்களை வைத்திருக்கவும். நீங்கள் மறந்தாலும் அது தானாக இயங்கும்படி செட் செய்திடவும்.
Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz