வியர்வை
நாற்றத்தைத் தவிர்க்க "சென்ட்' போட்டால் சமாளிக்கலாம் தான். குறைந்தது
நுõறு ரூபாயாவது செலவழித்தால் தான் நல்ல "சென்ட்' கிடைக்கும். இல்லையேல்,
கதை கந்தல் தான். "சென்ட்' போடுவதற்கு பதில், மாற்று வழிகள் நிறைய
உள்ளன.கடலை மாவுடன், சிறிது அரிசி மாவும் சேர்த்து நன்கு தேய்த்துக்
குளித்ததும், எலுமிச்சையின் ஒரு மூடிச் சாற்றை ஒரு பக்கெட் தண்ணீரில்
பிழிந்து, மூடியை கையின் அடிப் பகுதியில் தேய்த்து, தண்ணீர் ஊற்றிக்
கழுவினால், கெட்ட வாடை உங்களை அண்டாது.