முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறை |
எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது. * முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. * முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். * மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாதவாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். * இரவு நேரங்களில் அதிகளவு கண்விழித்து கணிணியோ, தொலைக்காட்சியோ பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். * ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். * தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. * அதிக வேலைப்பளு, அதிக பட்டினி ஆகாது. * எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. * உணவருந்தும்போது புத்தகம் படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கக்கூடாது. * தியானம், யோகா, செய்வது நல்லது. * மாதவிலக்குக் காலங்களில் முகத்தில் அதிக பருக்கள் தோன்றும். அந்த காலங்களில் மென்மையான உணவுகளை உண்பது நல்லது. 5 கிராம் வெந்தயம் எடுத்து அதில் நன்னாரி 5 கிராம் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி அந்த நீருடன் ரோஜா இதழ்,சந்தனத்தூள்,காய்ந்த எலுமிச்சை தோல்,செஞ்சந்தனம் இவற்றைச் சேர்த்து அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு பிறகு சிறுபயறு மாவு கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு, உஷ்ணத்தால் வரும் சீழ் கட்டிகள், கருவளையம், முக வறட்சி போன்றவை நீங்கி முகம் பொலிவு பெறும். சிலருக்குக் கழுத்தில் செயின் போட்ட பகுதிகளில் கருத்து காணப்படும். மேலும் சிலருக்கு இறுக்கமான ஆடை அணிவதால் உடம்பில் சில பகுதிகளில் தோல் கறுத்து காணப்படும். அப்படி கறுத்த பகுதிகளில் இதனைப் பூசி வந்தால் கருமை நிறம் மாறும். செம்பருத்திப் பூ இதழ்களை நன்கு மை போல் அரைத்து அதனுடன் பயத்த மாவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் வளரும் தேவையற்ற பூனைமுடிகள் உதிரும். |