முகம் பள பளக்க பப்பாளி பழம் | ||||
முகம்
பள பளக்க பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரைன்
சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பாக் மாதிரி
போட்டு பதினைந்து நிமிஷம் ஊறிப் பிறகுக் கழுவிப் பாருங்க.. முகம்
தங்கம்போல ஜொலிக்கும்! உடம்பு தோல் பள பளக்கவும் பப்பாளிப்பழம் நல்லது. ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு , சிறிது சக்கரை(தேவையானால்) சேர்த்து காலை ப்ரேக், பாஸ்ட்டாக சாப்பிட்டுப் பாருங்க... முப்பதே நாளில் தோலில் மாற்றம் தெரியும். மலச்சிக்கல் தீரும் ,புத்துணர்ச்சி தரும் ரத்தம் சுத்தியாகும். பப்பாளிக் காயின் பால் பாத பித்த வெடிப்புக்கு நல்லது உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம். பழங்களினால் சாலட் செய்யும் போதும், ஜாம் செய்யும் போதும் பப்பாளிப் பழத்தை நிறைய சேர்க்கலாம். இந்தப் பழம் போலவே அத்தி பழமும் உடல் அழகுக்கு உதவும். இதயம் வலுப்பெறும். இரத்த அழுத்தம் சீராக சாத்துகுடி ரசம், பித்தம் தணிய விளாம்பழம், ஜுரம் தணிய மலச்சிக்கல் நீங்க திராட்சைப்பழம் என்று நிறைய இருக்கிறது!
|