தன்னுடைய
உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும்.
மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு
எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். சாதாரணமாக மேக்கப்
இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென
இருக்கும். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்,
பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள்வார்கள். வெயில் மற்றும்
மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து
வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.
உதடுகளை பராமரிக்கும் முறை!
நமது
உடலின் எல்லா இடங்களிலும் உள்ள தோலானது இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை
உதிர்ந்து மறுபடிஉருவாகின்றன. ஆனால் உதட்டின் சருமம்மட்டும் தாமதமாகவே
உதிர்ந்து, உருவாகிறது. எனவே அதற்கு அதிகபட்சபராமரிப்பு அவசியம். சரியாகக் கவனிக்கப்படாத பட்சத்தில் உதட்டின் சருமம் சீக்கிரமே வறண்டும், சுருக்கங்கள் விழுந்தும் காணப்படும்.