பித்த வெடிப்புக்கு என்ன செய்யலாம்? |
பித்த
வெடிப்பு இல்லாமல் இருந்தால்தான் பாதங்கள் அழகாகத் தெரியும். அப்படி பித்த
வெடிப்பு வந்து விட்டால் அதனை ஆரம்பத்திலேயே கவனித்து சரிசெய்ய வேண்டும். எப்படி சரி செய்யலாம்? மெழுகுடன் சம அளவு கடுகு எண்ணைய் சேர்த்து கலந்து நன்கு குழைத்துக் கொள்ளவும். அதனை குதிகால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடிவி அதன் மீது லேசான துணி போட்டு பாதுகாக்க வேண்டும். இவ்வாறாக ஒரு வார காலத்திற்கு செய்து வந்தால், பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். கைபிடியளவு படிகாரத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு நன்றாகப் பொறித்துக் கொள்ள வேண்டும். அது பாப்கார்ன் போல் நன்றாக பொறிந்து விடும். அதனை எடுத்து அதனுடன் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணைய் தடவி பித்த வெடிப்பு உள்ள பாதத்தில் தடவி வர பித்த வெடிப்பு விரைவில் குணமாகும். |