| லிப்ஸ்டிக் பற்றி சில முக்கிய குறிப்புகள் |
![]() |
| 1.
உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் உள்ள லிப்ஸ்டிக்கைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். கறுப்பாக இருப்பவர்கள் வெளீர் நிறங்கள்
தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 2. நீங்கள் விரும்பியதைவிட வெளீர் நிறத்தில் உங்கள் லிப்ஸ்டிக் அமைந்துவிட்டால், சற்று கருமையான நிறத்தில் உள்ள லிப் பென்ஸிலால் உதடுகளில் நிறத்தைப் பூசி விட்டு அதன் பிறகு லிப்ஸ்டிக் தடவலாம். உதாரணத்திற்கு சிகப்பு நிற லிப்ஸ்டிக்குடன் பிரவுன் நிற லிப் பென்ஸில் பயன்படுத்தலாம். 3. தடவ முடியாத அளவுக்கு லிப்ஸ்டிக் குறைந்துவிட்டால் அதை எரியாமல் மீதமுள்ள லிப்ஸ்டிக்கை எடுத்து ஒரு சிறிய டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம். ஒன்றுக்கு அதிகமான லிப்ஸ்டிக்கை இப்படி சேர்த்துவைத்தால் அவற்றை கலந்து புதிய நிறத்தை உருவாக்கலாம். 4. நீங்கள் எப்போது லிப்ஸ்டிக் பயன்படுத்தினாலும் உதட்டைவிட்டு அது வெளியே வருகிறது என்றால் கிளாஸ் மற்றும் க்ரீம் லிப்ஸ்டிக்களைப் பயன்படுத்த வேண்டாம். 5. லிப்ஸ்டிக் மற்றும் பர்ப்யூமை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். 6. கடைகளில் உள்ள டெஸ்ட்டர் லிப்ஸ்டிக்குகளை உதட்டில் பயன்படுத்தாதீர்கள். அது சுகாதாரமானதல்ல. விரல் நுனிகளில் தடவி சரி பாருங்கள், இது உதட்டில் பயன்படுத்துவதற்கு ஈடானது. 7. தேவைப்பட்டால் கன்னங்களுக்கு ப்ளஷாக லிப்ஸ்டிகை பயன்படுத்தலாம். |



