கண்களின் அழகைப் பராமரிக்க |
![]() |
தினசரி எட்டு மணி நேரத் தூக்கம். போஷாக்கான ஆகாரம்; அதாவது கால்ஷ�யம் வைட்டமின்கள் நிறைந்த உணவு, கண்களுக்கான பயிற்சிகள். கண்களின் அழகிற்கு உணவுகள்... பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம். கண்களுக்கான மேக்கப்: இதை ரொம்பவும் கவனமாகச் செய்ய வேண்டும். முதலில் நல்ல தரமான ஃபவுண்டேஷன் தடவ வேண்டும். பிறகு விருப்பமான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில் லைட்டான ஷேடுகளிலும் மாலை மற்றும் இரவு வேலைகளில் டார்க் நிறங்களையும் உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ லைனர் தடவுவதுதான் ஃபேஷன் சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப் போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம். பிறகு மஸ்காரா, காலை வேளைகளில் ஒரு கோட்டும் மாலை வேளைகளில் இரண்டு மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன் நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம். கடைசியாக காஜல் அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். சில ஆலோசனைகள்: கண்களில் போடப்பட்ட மேக்கப்போடு இரவு தூங்கக் கூடாது. அதை அகற்றி விட்டே தூங்கச் செல்ல வேண்டும். தினசரி இரவு தூங்கும் முன்பாகக் கண்களுக்குள் ஒரு துளி சுத்தமான விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டால் காலையில் கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்மையை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் தயாரித்து உபயோகிக்கலாம். முதலில் பஞ்சில் திரி செய்து அதை கரிசலாங்கண்ணிச் சாற்றில் அரை மணி நேரம் ஊற வைத்து வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதே மாதிரி நான்கைந்து நாட்களுக்குச் செய்ய வேண்டும், பிறகு ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் விட்டு அதில் காய்ந்த திரிகளைப் போட்டு எரிய விட வேண்டும் அதை ஒரு கொட்டாங்குச்சி அல்லது சட்டியால் பாதியாக மூட வேண்டும். அந்தக் கொட்டாங்குச்சி அல்லது சட்டியினுள் சந்தனம் தடவப்பட்டிருக்க வேண்டும். திரி எரிந்து மூடியுள்ள சட்டியில் கருப்பான பவுடர் மாதிரிப் படியும். அத்துடன் கொஞ்சம் விளக்கெண்ணெய் கலந்து கண்களுக்கு மையாக உபயோகிக்கலாம். வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களையும் போக்கும். சூடு படுத்தி வடிகட்டி ஆற வைத்த தண்ழூரை இங்க்ஃபில்லரில் நிரப்பி கண்களில் ஒரு பக்கமாக கவிழ்த்தால் கண்கள் சுத்தமாகும். ரொம்பவும் சுத்தமான தேனை ஒரு துளி கண்களுக்கு விட்டுக் கொண்டால் கண்களுக்குள்ளிருந்த அழுக்குகள் எல்லாம் வெளியேறி கண்கள் பளிச்சென மாறும். |