கருவளையம் குறைய |
![]() |
கருவளையம்
மற்றும் கண் வீக்கத்தைக் குறைக்க, உருளைக்கிழங்கை அரைத்து ஒரு துணியில்
கட்டி, அந்த துணியை கண்களின் மேல் 15 நிமிடங்களுக்கு வைத்திருக்கவும். கண்களை கழுவும் நீரில், துளி உப்பு சேர்த்து கழுவினால் கண்கள் பிரகாசம் அடையும். தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு எடுத்து கண்களை சுற்றி போடவும். 30 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரிலும், பின் வெந்நீரிலும் கழுவி வர கண் சோர்வு மற்றும் கருவளையம் குறையும். கரு வளையங்களில் இருந்து விடுபட, கண்களைச் சுற்றி சில துளிகள் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்யவும். கருவளையங்கள் குறைய கண்களின் மீது குளிர்ந்த பாலில் நனைத்த பஞ்சை வைக்கலாம். |