முகத்தில் கரும்புள்ளிகளா? |
சிலருக்கு முகத்தில் நிறைய கரும் புள்ளிகள் இருப்பதைப் பார்க்கலாம். இதைப் போக்க எளிய நாட்டு வைத்தியக் குறிப்பை செய்து பார்க்கலாம். ஒரு தேக்கரண்டி உருளைக் கிழங்கு துருவல் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை டீஸ்பூன் தக்காளி விழுது சேர்த்து இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். இந்த கலவையை தினசரி காலை, மாலை இரு வேளையும் முகம் முழுவதும் நன்கு தடவவும். தொடர்ந்து ஒரு மாதம் இவ்வாறு செய்து வந்தால், சில வாரங்களிலேயே முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி வித்தியாசத்தை உணர முடியும். |