பருக்களைப் போக்க சில வழிகள்... |
அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அந்த முகத்தின் அழகை, பருக்கள் தோன்றி கெடுத்துவிடுகின்றன. பருக்கள் மறைய சில குறிப்புகள்... * உணவில் அதிகம் கீரை மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். * முகத்தில் தோன்றும் பருக்களை ஒருபோதும் கிள்ளாதீர்கள். * பருக்களின் மீது கண்டதை பூசாதீர்கள். மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்து வாங்கி, அதனை மட்டும் பயன்படுத்துங்கள். * அடிக்கடி முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள். * முகப் பவுடர், அழகு சாதனக் களிம்புகள் பயன்படுத்த வேண்டாம். * கொழுப்பு, அசைவம், பால் பொருட்கள் போன்றவற்றை ஒதுக்கித் தள்ளுங்கள். மேற்கண்டவற்றை செய்து வருவதால் முகத்தில் பருக்கள் வருவதை ஓரளவு கட்டுப்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது. |