கண்களுக்கான மேக்கப் |
![]() |
இதை
ரொம்பவும் கவனமாகச் செய்ய வேண்டும். முதலில் நல்ல தரமான பவுண்டேஷன் தடவ
வேண்டும். பிறகு விருப்மான நிறத்தில் ஐ ஷேடோ தடவ வேண்டும். காலை வேளைகளில்
லைட்டான ஷேடுகளிலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் டார்க் நிறங்களையும்
உபயோகிக்கலாம். பிறகு ஐ லைனர் தடவ வேண்டும். இப்போதெல்லாம் திக்காக ஐ
லைனர் தடவுவதுதான் பேஷன். சிறிய கண்களாக இருந்தால் ரொம்பவும் திக்காகப்
போட வேண்டாம். கீழ் பாகத்தில் முழுவதுமாக ஐ லைனர் தடவ வேண்டாம். பிறகு மஸ்காரா. காலை வேளைகளில் ஒரு கோட்டும், மாலை வேளைகளில் இரண்டு, மூன்று கோட்டுகளும் தடவலாம். மஸ்காராவிலேயே இப்போது பிரவுன், நீலம் மாதிரி நிறங்கள் கூட வந்துவிட்டன. விருப்பமுள்ளோர் அவற்றையும் தடவிப் பார்க்கலாம். கடைசியாக காஜல். அதாவது கண் மை. இது கண்களுக்குள்ளே போகக் கூடியது என்பதால் தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். |