கவர்ச்சியான கண்களுக்கு... |
கண்ணை
காப்பதில் நாம் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் வெப்பத்தைக்
குறைத்தாலே, பெரும்பாலான கண் குறைபாடுகளை குறைக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம்...? கால் கிலோ நல்லெண்ணையை நன்கு நுரை வரும் அளவிற்கு சூடாக்கி கொள்ள வேண்டும். பின்னர் அதில் 50 கிராம் கருஞ்சீரகம், 50 கிராம் வெந்தயத்தை சேர்த்து மூடி வைக்க வேண்டும். சுமார், குறைந்தது ஒரு நாள் முழுவதுமாவது ஊற வேண்டும். பிறகு, மேலாக தெளிந்து நிற்கும் எண்ணெய்யைத் தொட்டு கண்களை சுற்றிப் பூசுங்கள். பத்து நிமிடங்கள் ஊறியதும் குளிர்ந்த நீரில் அலசுங்கள். இதையே தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால், இமைமுடி அடர்ந்து கருமையானதாக வளரும். கண் சிவந்து போதல் மற்றம் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இனி ஜென்மத்துக்கும் உங்களை அண்டாது. மேலும், இதன் மூலம் கண்கள் குளுமை பெற்று பிரகாசிக்கும். பிறறை சுண்டி இழுக்கும் வசீகர கண்களாக உங்கள் கண்கள் மாறும். |