கண்களின் அடியில் கருவளையம் |
'கண்களின்
அடியில் கருவளையம்' இது எல்லாவித பெண்களுக்கும் உரிய பிரச்சனை. எந்த
க்ரீம் போட்டாலும் மறைவதில்லை. முக்கியாமாக, இரவு தூக்கம் விழிப்பவர்கள்,
கொம்பியூட்டர் முன் நிறைய பார்ப்பவர்கள், தொலைக்காட்சி அதிகம்
பார்ப்பவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் இவர்களுக்கெல்லாம் மிகவும்
கருப்பாக கண்களின் அடியில் இருக்கும். ''இது எங்களது 'பரம்பரை' வியாதி என் பாட்டி, என் அப்பா, பின் எனக்கு வரும் பரம்பரை வியாது" என்று சொல்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் இது என்ன பரம்பரை சொத்தா? முதலில் இது ஏன் வருகின்றது என்று பாருங்கள். கண்கள் அடியில் சிறிய சிறிய இரத்த ஓட்டம் கொண்ட Blood vessels இருக்கின்றது. அதில் Fat Cell-ம் இருக்கின்றது. 'Drainage' - அதாவது, Lymphatic glands என்ற சின்ன சின்ன குழாய்கள் உள்ளது. நம் உடல் நலம் பாதிக்கப்படும்போதும், கண்கள் மிகவும் சோர்வாகும்போதும், இந்த இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது. அதனால்...கண்களில் அடியில் ஒக்சிஜன் போவது நின்று விடுகின்றது. அந்த Drainage Lymphatic tubes அடைத்துதுக் கொள்கின்றது. இதனால், கண்கள் அடியில் கருமை உண்டாகிறது. இதற்கு நாம் தினமும் 2 நிமிடம் கண்களை மிருதுவான மசாஜ் செய்து கொள்ள வேண்டும். நல்ல சுடுநீரில் பஞ்சு கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது கண்களுக்கு நல்ல Exercise. பின் இரு விரல்கள் கொண்டு கண்களை மெல்ல மெல்ல அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு 15 தடவை கண்களை மூடி திறக்க வேண்டும். உருளைக் கிழங்கை துருவி, அதனுடன் வெள்ளரி சாறு கலந்து, கண்களில் தடவி வந்தால், கருமை மறையும். இது ஒரு Beat treatment. அதாவது, 'டீ டிக்காஷன்' நன்கு ஆறியவுடன் அதனை ஜில் என்று வைத்து, பஞ்சு நனைத்து, கண்களின் மேல் வைத்து 10 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். மனது அமைதியாக இருக்க வேண்டும். இப்போது Aroma gel கிடைக்கும். நல்ல தரமுள்ள Under Eye Gel கொண்டு கண்களின் மேலும் அடியிலும் தடவி வர வேண்டும். தினம் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் எற்படவேண்டும். 8 மணி நேரம் தூங்க வேண்டும். பின் பாருங்கள்! உங்கள் பரம்பரைச் சொத்து போயே போச்சு!!!! சந்தனக் கல்லில் சாதிக்காயை அரைத்து கண்களின் அடியில் பூசி வந்தாலும், கருமை மறையும். நந்தியாவட்டை பூ. கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் இந்தப் பூவை பறித்து, கண்களில் ஒற்றி வர வேண்டும். கண் இமைகளில் சுற்றி ஏற்படும் கட்டியை கரைக்க துளசி இலைச் சாற்றை பூசி வர வேண்டும். ;) |