அழகான, கருகரு என்ற நீண்ட கூந்தலுக்கு சில டிப்ஸ்கள் |
*கூந்தலில் எக்காரணம் கொண்டும் சிக்கு பிடிக்கக்கூடாது. * தூங்கும்போது முடியை நன்கு சீவி பின்னல் போட்டுக்கொள்ள வேண்டும். விரித்து போட்டுக்கொண்டு படுக்கக்கூடாது. * காலையில் தூங்கி எழுந்ததும், முதல் வேலையாக கூந்தலில் சிக்கு இருந்தால் அதை எடுத்து, பின்னல் போட் டுக்கொள்ள வேண்டும் அல்லது, கட்டிக்கொள்ள வேண்டும். * பின்னல் போட்டு ஹேர்பின் போடு வதைவிட ரிபன் கொண்டு கூந்தலை கட்டு வது தான் கூந்தலுக்கு பாதுகாப்பானது. * கூந்தலை அடிக்கடி விரித்துப் போட்டுக் கொண்டால் கூந்தலின் வளர்ச்சி குறைவாக இருக்கும். * அடிக்கடி எண்ணெயை மாற்றித் தேய்த் தால் முடி உதிர ஆரம்பித்துவிடும். ஒரே எண் ணெய் தான் தேய்த்துவர வேண்டும். அதுவும் சுத்தமான எண்ணெயாக இருக்க வேண்டும். இதில் முதல் சொய்ஸ் தேங்காய் எண்ணெய்க் குத் தான். * கூந்தலுக்கான அற்புத எண்ணெயை வீட்டிலேயே நாம் தயாரித்துக்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய்க்குள் தேவையான அளவு சோற்றுக்கற்றாழையின் உள்ளீட்டினை சிறுசிறு துண்டுகளாக வெட்டிப் போடுங்கள். வாணலியில் அது நன்கு கொதித்து வந்ததும் இறக்கிவிடவும். அதை போத்தல்களில் சேகரித்து வைத்து கூந்தலுக்கு உபயோ கியுங்கள். எண்ணெய் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளித்துவிடுங்கள். இந்த டிப்ஸ் எல்லாவற்றையும் பின்பற் றினால் அழகான, நீண்ட, கருகரு கூந்தல் உங்களுக்கு கிடைக்கும் என்கிறார்கள் அழகு சிகிச்சை நிபுணர்கள் |