கோடை காலாத்தில் கூந்தல் அழகிற்கு
வெயில் காலம் ஆரம்பம் ஆனாலே வியர்வை.. வியர்வைதான்இதனால் உங்கள் தலைமுடி மிகவும் பாதிக்கபடுகிறது..
ஸ்கூலுக்கு, வேலைக்கும் போகும் பெண்கள் முடியினை இருக்கி பின்னாமல் கொஞ்சம் லூஸாக பின்னி போடவும்.
வீட்டுக்கு வந்த பின்பு நன்றாக தலையினை விரித்துவிட்டு கொஞ்ச நேரம் காயவிடுங்க.
பிறகு மரச்சீப்புகளை வைத்து மெதுவாக வாரிவிடவும்.
கடுமையான வெயில் காலங்களில் வெளியில் போகும் பொழுது வெயிலின் கதிர்வீச்சுகள் தலைமுடியினை கூந்தலை பலவீனமடைய செய்யும். ஆகையல் வெளியில் போகும் பொழுது குடைப்பிடித்து செல்லவும். பைக்கில் செல்பவர்கள் தொப்பி அல்லது ஹெல்மட் போட்டு போகவும்.
அதிகம் ரசாயனம் கொண்ட ஹேர்கலரிங் செய்யும் பொழுது மிகுந்த கவணத்துடன் செய்யுங்கள். அல்லது கூந்தல் கோவிந்த தான்..
தலை குளிக்கும் முன்பு தலைக்கு சிறிது தேங்காய் எண்ணெய் வைத்து நன்றாக உங்கள் கைகளை வைத்து மென்மையாக மசாஜ் செய்த பின்பு குளிக்கவும். இதன் மூலம் பொடுகு வராமல் தடுக்கலாம்.
வாரத்திற்கு 2 முறை நல்ல எண்ணெய் தேய்த்து ஆயீல் மசாஜ் உடல் முழுவதும் செய்து 3 மணிநேரம் ஊறிய பின்பு குளிக்கவும். இதன் மூலம் உடல் குளிர்ச்சி பெற்று உடல் சீரான ரத்த ஓட்டத்தை ஏறபடுத்தி உடல் வறட்சியினை தடுக்கிறது
நல்ல ஹேர் கண்டிசனரை பயன்படுத்தவும். ஹேர் பேக் குறை மிகவும் கூந்தலுக்கு நல்லது.
இயற்க்கையான வீட்டில் கிடைக்கும் பொருட்கள் முட்டை, தயிரில் ஊறிய வெந்தயம்,மருதாணி, செம்பருத்தி பூ இவைகளை கன்சிசனர்க பயமில்லாமல் பயன்படுத்தலாம்.
உங்கள் கூந்தலுக்கு எந்த ஷாம்பு ஏற்றதோ அதை மட்டும் பயனபடுத்தவும்.
ஆண்டுக்கு சரசரியா முடி 6 அங்குலம் நீளம் வளருமாம். இதனை நாம் முறையாக பராமறிக்கவிட்டால் முடி உதிர்ந்துவிடும்.
வெயிலில் காலங்களில் சும்மாவே டென்ஷன் தலை உச்சிக்கு ஏறும். அப்படி ஏறினால் கூட முடிக்கு பாதிப்புகள் ஏற்பட்டு பொடுகு வருமாம.
ஆகையால் டென்ஷனில்லாம் இருங்க.. உடலையும் பார்த்துக்கவும், தலைமுடியினையும் பராமறிக்கவும்.