பப்பாளியின் மேஜிக்
- உங்கள் முகம் மற்றும் உடல் பொலிவாகும் மேஜிக் பப்பாளி பழத்துக்கு இருக்கு। குறைந்த செலவில் அதிக பயன் பப்பாளியில் இருக்கு।
பலர் செய்த ஆராய்ச்சியில் பப்பாளி பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சத்து குறைவதாக சொல்கிறார்கள்
வெயில் பட்டு கலர் இழந்த உடல் மீண்டும் புத்துயிர் பெற பப்பாளி பழத்தினை பாலுடன் கலந்து உடல் முழுவதும் தேய்துவிட்டு அலசவும்। இதை போல் தொடர்ந்து செய்தால் மீண்டும் இழந்த கலர் கிடைக்கும்।
சிலருக்கு முகத்தில் கருமை திட்டு திட்டாக இருக்கும் அவங்க பப்பாளி பழத்துடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின்பு அலசவும்।
- சிலருக்கு
முகங்கள் மிகவும் வரண்டு போயிருக்கும்। அவர்கள் பப்பாளி பழத்தோலை
முகத்தில் நன்றாக மசாஜ் செய்து காய்ந்த பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில்
அலசவும்। உடலில் உள்ள இழந்த செல்களை அகற்றி புதுபிக்கும் மேஜிக் பப்பாளி
பழத்துக்கு உண்டு।
இளைமையாக இருக்க விரும்புபவர்கள் கட்டாயம் பப்பாளி பழத்தினை முகத்துக்கு தேய்க்கவும்। இதன் மூலம் முகசுருக்கம் சீக்கரமாக வருது தடுக்கும்।