உண் நட்பு
நட்புக்கு விளக்கம் தேடி
எங்கெங்கோ அலைந்தேன்
முடிவில் உன்னிடம் வந்து சேர்ந்தேன்
நீ தான் நட்பின்
எல்லையென்று புரிந்தேன்
தோழன் என்று சொல்லி
தோளில் சாயாமல்
என்றென்றும் உண் நட்பு
நான் என்று சொன்னாய்
உந்தன் எழுத்தில் பிழை கண்டு
'உண்' அல்ல 'உன்' என்று சொன்னேன்
'உன்' மீதான என் நட்பின் ஆழம் சொல்ல
'உண்' தான் சரி என்று சொன்னாய்
கண்டதும் காதல் சொல்பவர்கள் மத்தியில்
'உனை காதலிக்கிறேன்' என்று சொன்ன
உன் தோழியிடம்
நட்போடு மட்டும் இருப்போம்
என்று நட்புக்கு புது விளக்கம் தந்தாய்
உன் நட்பை புகழ இலக்கியங்களுக்கு
நேரமிருக்குமோ இருக்காதோ
ஆதலால்
இந்த கவிதையென்னும் கிறுக்கல்களை
உன் நட்பிற்கு சமர்பிக்கிறேன்