கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2025-07-02
9:17 AM

Welcome Guest | RSS Main | தமிழின தலைவிதி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழின தலைவிதி

அழியா இன்பங்களும் சின்னதாய்
இன்னல்களும் மானிடத்தின்
மரணத்திடை நிஜங்களாய்
எமக்கோ தொட்டில் தொட்டு
கிரியை வரை கிழிக்கப்பட்ட
சரிதையாய் கல்லும் முள்ளுமாய்
ஐ.பி.கே தொட்டு கிறீன்பரட் வரை
உலகும் எமை உதைத்து தள்ளியது

முலைப்பாலிற்கு பதில் துப்பாக்கி
முனையை திணித்து இனவெறியில்
பிறந்த பிஞ்சுகளாய் தாய்மடி தேடிய
எமக்கு தரிசு நிலபங்கர்கள்தான்
விடையாகின குப்பி விளக்குடன்

குடிசை வாழ்வாய் குடும்பங்களின்
வாழ்வு கழிய வாழ்வாதரமாய் வயல்
செய்தோரின் விளைச்சலெல்லாம் குண்டு
துண்டுகளாய் காணிகளெல்லாம்
காப்பரணும் கவச வாகனச் சுவடுகளும்
சுடுகலன் தாங்கி உலாவுகிறது இனவெறி

ஆட்டம் பள்ளிகள் எல்லாம் படிப்பின்றி
அடர் பற்றைகளாவும் அடாவடியின்
அங்குரார்ப்பணம் அரங்கேறுகிறது
பார்வையாளர் இன்றி இரவும் பகலுமாய்
இத்தீவின் இனவெறிக்கு இலக்கானவர் நம்மினமா!

பல்குழலால் பலபேர் இறக்க
இரக்கமின்றி இடையிடையே ஆட்லெறியும்
ஆட்பலி எடுக்க எரிகுண்டால்
எரிந்த எத்தனை உறவுகள்
உரித்தின்றி தம்முடல் கருகிப்போயினர்
சுதந்திரபுரம் முதல் உடையார்கட்டு வரை
வாழ்விழந்தவர் எத்தனை…………..

பிஞ்சுகளெல்லாம் பஞ்சுகளாய்
தீக்கிரையாக பீஜிங்கோ பீரங்கி
கொடுக்து பின்னால் நிற்க
பதிலுக்கு பாரதமும் இஸ்லாமாபாத்தும்
இருட்டடிப்புகளாய் இராணுவ உதவி
நல்க நம்மவர் மண்ணுடன் செந்நிறமாய்
இரண்டற கலக்க எம்குருதியன் ஈரப்பதன்
பார்க்குது அரசு-உழுதுண்டு
வாழ்ந்த எம்மண்ணில் உலங்குவானூர்தியால்

உல்லாசமாய் உரமிடுகிறான் தமிழனை
பிணமாக்கி பணத்துக்காய் பிணம் குவித்து
பாரெங்கும் அலையும் கோத்தபாயவும்
இலங்கைக்கோர் இடியமினாம் ராஜபக்ஷவின்
இராஜ தந்திரிகளும் குடும்பத்துடன்

கூட்டுசதியாய் தமிழின தலைவிதி
எழுதும் இனவெறியின் ராஜபரம்பரைக்கு
பரணி புகழாரம் சூட்ட பிரிட்டன்
முதல் பின்லாந்து வரை அலைகிறான்
தன்னாட்டு பிரஜை அழித்து ஆதிக்கம்
செலுத்த-இனஅழிப்பிற்கு இணைத்தலைமை

நாடுகள் இலவச இணைப்பாய் இயங்க
மிலேச்சத்தனம் மீதமின்றி உருவெடுக்க
வயிற்று பசிக்கு நஞ்சுகொடி வறுத்துண்ண
வடஇலங்கை மற்றுமோர் உகண்டாவாய்
உருவெடுப்பது உலகறியாதோ!
வந்த வெள்ளையெல்லாம் வெறும்

அறிக்கையுடன் அடங்க செக்கன்
ஒவ்வொன்றும் செத்து கணக்கிண்றி போக
விழுப்புண்பட்டது விடையின்றி
மூகோணமலையிலும் முட்கம்பிவேலியினுள்ளும்
முடக்கப்பட மும்மரமாய் இனவெறி
தலைவிரித்தாட இலங்கைதீவு ஈழத்தமிழன்
இரத்தத்தால் தோய்கிறது கேட்பாரற்று……



கலியுகன்.
கிளிநொச்சி.
Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz