கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
3:53 PM

Welcome Guest | RSS Main | அண்ணா அண்ணாவென்ற குரல் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

அண்ணா அண்ணாவென்ற குரல்

ஆண் - வன்னியில் இருந்தொரு
தொலைபேசி அழைப்பு.
அண்ணா அண்ணாவென்ற - குரலில்
தங்கையின் பாசத்துடிப்பு!

பெண் - சாவுடனே நாங்கள் - தினம்
வாழுகின்றோம் அண்ணா.
தப்பேதும் செய்யாமலே - சிங்களத்தின்
குண்டில் மாழுகின்றோம் அண்ணா!


வன்னியில்
கொடும்பசி வாட்டியெம்மை
புரட்டி வதைக்கின்றது.
சிங்களவன் ஏவும் செல்களும் - எம்மை
நாளும் துரத்திக் கொல்கின்றது!

அந்நியச்சேனை வந்து - கிந்தியில்
பேசியெம்மைக் கொல்கின்றது.
யாரிடம் சொல்வோம் அண்ணா
எம்துயரத் துன்பியல் நாளேட்டை!

வன்னியில்
இன்றுநான் உன்னோடு
பேசுகின்றேன் அண்ணா.
நாளைபேச நான் - உயிருடன்
இருக்கமாட்டேன் அண்ணா!

அண்ணா இதுதான் உங்களோடு - நான்
பேசும் கடைசிவார்த்தை.
செல்வந்து விழுகின்றது - நான்
அம்மாவுக்கு அருகில் போகின்றேன் அண்ணா!!!
கோவையூர் செ.சர்வன்
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz