கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2025-07-12
1:47 PM

Welcome Guest | RSS Main | எழு எழு தமிழா விரைந்து எழு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

எழு எழு தமிழா விரைந்து எழு

 
எழு எழு தமிழா விரைந்து நீ எழு
அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா
அழிவதா தமிழினம் அதுஎன்ன விதியா
இழிவு உனக்கில்லையா இன்னும் நீ அகதியாய்

வாழ்வு இங்கு வழம் என்று வாழா நீ இருந்தால்
வாழவைத்த நிலம் அங்கு வதைமுகாம் ஆகிவிடும்
ஆழும் அந்த அரக்கனால் அன்னை நிலம் அழிந்துவிடும்
நாளை உனக்கெனறோர் நடின்றிப் போய் விடும்

வந்தாரை வரவேற்று வருவிருந்தோம்பி வாழ்ந்த
எம்தாயர் தந்தையரை எம் உறவு சுற்றமதை
அற்றாரைப் போலக்கி அழிக்கின்றான் அரக்கன்
உற்றாரை அழிக்க அங்கு ஊதுகுழல் ஊதுகிறான்

தொழுதுண்டு வாழும் துரொகியர் தம்மால்
உழுதுண்டு வாழ்ந்த உறவுகள் அங்கே
உணவின்றித்தவிக்கிறார் உயிரினைத் தறக்கிறார்
உணர்வேதுமின்றி நீ உயிர் காவித் திரிகிறாய்

குண்டு மழை பொழிய குருதி பாய்ந்தோட
துண்டு துண்டாய் தொங்கும் உடலங்கள் ஐயகோ
கண்டது காணோளிக் காட்ச்சி என்று விட்டு
உண்டு கழித்து நீ உயிர்காவித் திரிகின்றாய்

போர் நிறுத்தம் என்று பொய்யாய் பரப்புரைத்து
பேர் அழிவை உண்டுபண்ண பெரும்படை நகர்த்த
வரவேற்பதாய் இங்கு வல்லரசார் வய்பிழந்து
வரச்சொல்லி அழைக்கின்றர் வதைமுகாம் வாவென்று

இணைத்தலைமையுhரும் இணைந்தறிக்கை விடுகிறார்
இடைத்தங்கல் முகாமாம் இழுக்கட்டாம் மக்களை
ஐ நா வும் ஆதரித்து அறிக்கை விடுகின்றதாம்
ஆயுதத்தைப் போட்டுவிட்டு அடைக்கலம் புகுஎன

சாசனத்தை மறந்து பாவம் சாத்திரம் சொல்கிறார்
சாவது கொஞ்சமாம் சமரில் அது சகசமாம்
வேதனை அழிக்கிறதாம் விடட்டாம் மக்களை
வாழ்ந்த இடத்தை விட்டு வரட்டாம் வெளியே

பாழான இவ்வுலகின் பாரா முகம் ஏன்
கேள் உனை நீயே ஏன் எனக் கேள்
தன்னலம் அற்ற தலைவன் தன்னை
கண்முன் நிறத்திக் கேளுனை நீ கேள்
தனதினம் காக்க தனி அரசமைத்து
தரைப்படை கடல்ப்படை வான்படை சமைத்து
தரணியில் எவனிலும் தங்காத் தலைவன்
தமிழினம் தாங்கிடும் தானைத் தலைவன்
எவனிலும் இல்லா ஏதோ ஒன்று
இவனில் இருப்பதாய் ஏங்குது உலகு
அவனியை வென்றிடும் ஆற்றல் கொண்ட
அடங்காத் தமிழன் இவன் என அஞ்சி
ஆயுதம் கொடுத்து ஆழி எனச் சொல்லி
அரங்கின் பின் நிற்பது அனத்துலகமுமே
உணர்வாய் தமிழா உண்மை இதுவே
உலகும் சேர்ந்தே ஓதுது வேதம்
விழ விழ எழுவான் விரத்தமிழன்
வாழ்வான் சாவிலும் வணங்கத்தமிழன்
மாழான் தமிழன் மறுபடி எழுவான்
ஆழ்வான் ஈழம் அதுவே உண்மை

உணர்வோடெழுவாய் உலகத்தமிழா
உரிமைக்காக உரத்துக் குரல் தர
எழு எழு தமிழா விரைந்து நீ எழு
அழுவதை விடுத்து ஆர்த்தெழு தமிழா





தர்மரத்தினம் (சுவிஸ்)
Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz