கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்
2024-05-06
5:22 PM

Welcome Guest | RSS Main | தமிழனத்தின் விடியலுக்காய் அகிம்சைப் போராம் புனித நோன்பில் பரமேஸ்வரன் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழனத்தின் விடியலுக்காய் அகிம்சைப் போராம் புனித நோன்பில் பரமேஸ்வரன்

மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதோ
மெல்ல ரும் மெளனம் காட்டுமோ வுலகம்
வெழுதினான் வல்லவனிருந்தே வெறத்தானுணவை
மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில்
மெல்ல முடியா மலே.

வெள்ளிப் பனியுறையும் வெள்ளையர் தேசத்தே
தெள்ளிய குறிக்கோளாய் தானவர் தரணிக்கு
காவுகொள்ளும் தமிழனத்தின் குருதியது வழிந்தோட
மேவியே வழிகாட்டும் அரக்கர்களின் கொடுமைதனை
சீலத்தன்மையொடு சிந்தனையும் சேர்த்தங்கே
காலவன் கைகளுக்கு கைவிலங்கு போட்டிடவே

மனிதத்தின் வகையறிந்து மாயுமெங்கள் உறவுகளை
கனிவுகொண்டு காத்திடவே கருவாக எண்ணியங்கே
பண்பாளன் பார்த்திபனாம் திலீபனென்னும் மறுபெயரான்
காட்டிய வழிநெருங்கி கடந்தவீரெட்டு தினங்களாய்
ஏட்டிலோரைந்து கோரிக்கை தான் வைத்து

உணவருந்தா நோன்பதனை எற்றது கண்டுமனம்
கணப்பொழுது மச்சத்தால் கலங்கிக் கிடக்கிறதே
உல்லாச வாழ்க்கை தன்னை உதறிநீ தள்ளிவிட்டு
சல்லாபச் சிறகடிப்பை சரித்துநீ வைத்துவிட்டு

இங்கிலாந்தான் செய்தபிழை எமக்கிப்போ துன்பமென்று
அங்கேயே அதன்பதிலை அறியநீ வேண்டுகிறாய்
ஈழத்தமிழர்க்கு எவரிட்ட சாபமதோ என்றே தெரியவில்லை
பழந்தமிழர் வாழ்விற்கு வினையாகிப் போனதனால்

புதுநெல்லு நீயுமிங்கே போராடிக் கிடக்கின்றாய்
இதுவெமக்கு ஒளிதருமோ என்றவொரு ஏக்கத்தில்
உன்னையுருக்கி யுணவை யுறுத்தியங்கே உணர்வோடு
தன்னலம் பேணாது தாய்தமிழ் ஈழத்தே

போரை நிறுத்தியொரு புதுவசந்தம் தேடிவர
பாரைவேண்டிப் பண்பாளாநீ பார்த்திருக்க
அழிவையெங்களுக்கு ஆயுளாய் தருவுலகே
இழியாத்தமிழர்க்கு இன்னலை தீர்ப்பாயா

சாக்காணும் எம்மினத்தைக் காப்பாற்று இல்லையேல்
நோக்காணும் எந்தனுயிர் வாழ்வை அர்ப்பணிப்பேன்
என்றவொரு கொள்கையுடன் மரணிக்குவரை நோன்பு
சான்ற சத்தியத்தின் ஒளிகொண்ட நண்பா

பரம ஈஸ்வரனும் பரம யேசுபிரான் பார்த்துத் தொழுவார்க்கு
பரமேஸ்வரனே யின்று போற்றுதற் குரியவன்
தமிழினம் அழிகிறது தர்மமிங்கே சாகிறது
அமிழ்தெனுந் தமிழ் காக்கும் தலைவனவன் வழியினிலே
மலரவனனின் கீற்றாகி மகிழுமொரு மாதத்தை
பொறுத்திருந்தே ஓரினிய பொழுதொன் றெமக்குண்டு

உலகின் முன்றலிலே உனக்கென்று தனிப்பெருமை
காந்தீய யாத்திரையால் களிப்புற்ற பாரதம்போல்
வெந்தீயில் சாய்ந்தவெங்கள் மறவர்களின் தியாகத்தீ
நீயிருக்கும் நோன்பிற்கும் விடையுண்டு விரைவினிலே
நாளொரு வண்ணமாய் நலிவிழந்து போகின்றாய்
எழுந்துவா நண்பாவெனச் சொல்லத்தான் துடிக்கிறது
விழுந்துகிடக்குமுன் வாஞ்சையின் தெளிவுகண்டு

நீவேண்டும் கொள்கையது தீரும்வரை உன்னுரத்தால்
ஆன்மா துடித்தாலும் அனைத்தையும் வெற்றிகொள்ள
உலகின் மெளனத்தை கலைப்பதற்கு நீதொடுத்த
ஆன்ம விரதத்தால் பொய்க்காது தீர்ப்பதற்கு

அடியேனும் அரவணைத்து ஆதரவுக் கவிவழங்கி
வயதினிலே இளையவனா யிருந்தாலுமுந்தன்
பாதார விந்தங்கள் பற்றிநான் பணிந்தாலும்
சாவோடு போராடும் சத்தியனே யுந்தனுக்கு
மாருதி வள்ளலவன் மாயா வரமருளி
சேருந்தமிழீழ மலர்வோடு நீடுவாழ
அளவையூர் தந்தகவிக் குமரன்யான் வாழ்த்துகிறேன்





அளவையூர் கவிக்குமரன்
லம்போ
Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2024  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz