பரமேஸ்வரா நீ தியாகத் தீ..!
உன்சாவை கண்டுதானா
உலகம் விழிக்க வேண்டும்..
நீயும் தமிழமகன்தான்.
தளராத ஒரு வீரன்தான்.
பரமேஸ்வரா பார்திருக்க
உலகம் நீ பசித்திருக்கின்றாய்.
நல்லூர் வீதி விட்டு நகர்ந்துள்ள
உன்யாகம் வெள்ளை வீதியில்
ஆனால் கொடுங்கோல் முடிவில்லை
அதை செய்தவரும் மாறவில்லை.
தில்லையாடி வள்ளியம்மா
பிறந்த மண் என்பார்.
காந்தீய யாத்திரையால் சுதந்திரம்
கொண்டோம் என்பார்..
இன்று கொல்லும் போது எம்மை
ஏன் மெளனமாய் உதவுகின்றார்.
புரியாத எமக்கு புரிய முன்னர்
இழவுதான் மிஞ்சும்..
அவர் மெளனம் கலைக்க நீ தொடுத்த
போராட்டம் பொய்க்காது.
ஒற்றை மரம் தான் கண்ணுக்கு தெரியும்
அதை தாங்கும் வேர்கள் என்றுமே தெரியாது.
உனக்கு பின் தமிழர் நாமுள்ளோம்
மீண்டும் ஒரு பார்த்தீபனாய் வந்துள்ளாய்.
பாரினில் பெரும் தீ மூட்டி நீ வெள்ளை
துரைகளின் அரசியல் உறைவிடத்தில்.
ஆனால் ஒவ்வொரு தமிழனின்
மனதில் தியாகத்தீ நீ.
நீ இருக்கும் நோன்புக்கு பதில் கிடைக்கும்
உண்துணிவுக்கு தமிழர் தலைவணங்கும்
சுதந்திர நாள்கிடைக்கும்.போராட்டங்கள் பொய்த்தில்லை
சாவோடு நீ விளையாடி சொல்லி
நிற்கும் துன்பங்களும்..
இலட்சியத்தை அடைய நீ கொண்ட கோலம்
கண்ணுக்குதெரியுமா?
இல்லை கயவர்கள் கண்ணுக்கு உண்ணா நோன்பும்
பயங்கர வாதம் தானா?
ரகசியா சுகி