அன்பான சிநேகிதனுக்கு!
நட்பு!
சினேகிதா!
நான் காதலித்த போது
என்னைவிட உன்னைப் பற்றித்தான்
அவளிடம் அதிகமாக கூறியிருக்கின்றேன்!
சினேகிதா!
நான் தோல்வி அடைந்த போது
என் தோல்விகளை விட
உன் வெற்றிகளைப் பற்றிதான்
அதிகமாக நினைத்துக் கொண்டேன்!
சினேகிதா
நான் வெற்றி பெற்ற போது
என் மகிழ்ச்சியை விட
உன் சிரிப்பினில்தான்
அதிகமாக மகிழ்ச்சியடைந்தேன்!
சினேகிதா!
நான் துன்பப்பட்ட போது
என் துயரத்தைவிட
உன் கண்ணீரில்தான்
வேதனை அதிகம் கண்டேன்!
சினேகிதா!
நான் தனிமைப்பட்ட போதும்
உன் பிரிவை விட
எம் நட்பின் நெருக்கத்தில்தான்
இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்!
சினேகிதா!
நாம் மறைந்து விட்ட போதும்
மரணித்துப் போகாத
நட்பின் சுவாசத்தில்
வாழ்ந்துகொண்டே இருப்போம்
கவிப்பூக்களாக நமது நிலா முற்றத்தில்!