கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-03-29
2:01 AM

Welcome Guest | RSS Main | மடியொன்று கண்டேன்! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மடியொன்று கண்டேன்!

ஆழமறியா அண்ணன் அணியை-என்றும்
பலம் சேர்த்துப் பகை முறிக்க- அண்ணன்
திசை நோக்கித் திளைக்காமல் நடந்தனரே-எம்
மாவீரச் செல்வங்கள் இவர்கள்பணி நீயேற்று-மக்கள்
துயர்துடைக்க விரைந்து சென்று
அவர்களுள் ஒருவனாய்- இன்று
மீளாத்துயில் கொள்வோனே!


உன் திறனை நானறியேன்- அதை
உன் நண்பர் சொல்லிடவே செவிமடுப்பேன்- ஆனால்
உன்சுமையை நானறிவேன் எட்ட நின்று.
ஊரவரில் முன்நின்று உறுதியுடன் பேசிடுவாய்- இருந்தும்
வேதனைகள் உள்ளவரை வெறுமனவே விடமாட்டாய்- உன்னுடன்
நெருங்கிப் பழகினதோ மூன்றே மூன்று மாதங்கள்தான்- அதனுள்
புரிந்தவைகளோ ஏராளம் ஏராளம்!- ஒருபுறம்
சிறியவர் கருத்தை ஆர்வமுடன் நீயேற்றுப்
பணிவுடனே நடந்திடுவாய்- மறுபுறம்
மூத்தோர்கள் வியந்திடவே நேர்மையுடன் நடந்திடுவாய்.

ஈராண்டு கடந்தும்கூட – நீ
இன்றுவரை என்மனதில்.
உன் மீளாத் துயிலென்பது- நான்
காணும் கனவாகவே உள்ளது- ஏனெனில்
நீ கதைத்த கதை என் காதுகளில் இன்றுவரை ஒலிக்கிறது
உனது அழகான புன்னகை என் கண்களில் தெரிகிறது
நீ ஏவிய அன்பாணை என் இதயத்தைத் துளைக்கிறது- ஏன்
உனது தொலைநகல் விலாசம்கூட
இன்றும் என் கோப்புக்குள்- அதை
அழிக்கவோ மனம் மறுக்கிறது- ஏனெனில்
நீ இன்னொருமுறை கதைப்பாயெண்ட நப்பாசையில்.

யார்மனதும் புண்படாமல் அன்புடனே அரவணைத்து
அன்பினினால் முடித்திடுவாய் உன்செயலை- அப்பொழுதே
நான் கண்டேன் உன்னிட்த்தில் மடியொன்று-
அதையே! ஏதுமறியா குழந்தைபோல்- உன்
மடியும் நிலைத்திடுமென நானெண்ணி இருக்கையிலே!
திடுமென நீ மறைந்த செய்தி என்மார்பினைத் துழைத்ததேனோ!!!





கோவனத்தான்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz