நட்பு என்பது தேன்கூடு! களையாதிருக்கும் வரை..
நட்பு என்பது கண்ணாடி! உடையாதிருக்கும் வரை..
நட்பு என்பது பூந்தோட்டம்! வாடாதிருக்கும் வரை..
நட்பு என்பது காற்றாடி! சுழன்று கொண்டிருக்கும் வரை..
நட்பு என்பது உயிர்நாடி! நான் உயிரோடிருக்கும் வரை..
நீயும் நானும்……. பிறந்தோம் தாயின்கருவில் ஒன்றுபோல் …………….!
வளர்ந்தோம் உலகின் பிடியில் ஒன்றுபோல்…………………!
சமுதாயம் என்பது போர்க்களம் உனக்கும் எனக்கும் ………!
வாழ்க்கைச் சக்கரம் இவ்வாறாக சுழல……………
இறுதியில்…… என்னை பெண்ணுக்கு கொடுத்தார்கள்……..!
உன்னை மண்ணுக்கு கொடுத்தார்கள் ……..