உறவு
சுற்றி வந்த காற்றும்..
பற்றி வந்த கரங்களும்..
அதே பசுமையான நினைவுகளுடன்..
பார்த்து மகிழ்ந்த காட்சிகளும்...
கேட்டு ரசித்த கானங்களும்...
அதே இனிமையான சுவைகளுடன்..
நடந்து திரிந்த பாதைகளும்..
புரண்டு அழுத தோள்களும்..
அதே ஏக்கமான எண்ணங்களுடன்...
எழுதி வடித்த கவிதைகளும்...
புழுதி அடித்த மழைச்சாறலும்..
அதே மண் வாசனையுடன்..
புரட்டிப் படித்த கதைகளும்
விரட்டிப் பிடித்த விண்மீன்களும்..
அதே கண் சிமிட்டல்களுடன்..
தொட முயன்ற நிலவு...தொட முடியாமலும்..
விட முடியாத நம் உறவைப்போல்......
தொடர்கதையாய்..................