நண்பியே
நட்பின் முழு உருவமாய் நீயிருக்க
உணக்கு நண்பனாய் நானிருக்க - நீ
உன்னைபற்றி கவிதை எழுதச்சொல்ல
வர்னிக்க வர்ததையில்லை என்னசெய்ய
என்னுள் உள்ளதை உணக்குச் சொல்ல
நீ கொடுத்த சந்தர்ப்பத்தை மெல்ல
பயன்படுத்தி சொல்லி இருக்குரேன் மிஞ்ச
பெண்மையின் மென்மையை உன்னிடம் கன்டேன்
பேசிடும் வார்த்தையில் மயங்கி நின்றேன்
உண்மையாய் பேசயில் உளம் குளிர்ந்தேன்
உணர்ச்சி பரிமாரயில் உரைந்து நின்றேன் - உன்
நினைவலைகள் நெஞ்சில் நிரைந்து நிற்கின்றன
பேச்சிக்கள் மனதில் பச்சைக்குத்தின
கலங்கமற்ற நட்பு என்னை கவர்ந்தது
சொற்றொடர்கள் என்னை சொக்கவைத்தது
ஆருதல் மொழியால் அகம் குளிர்ந்தேன்
கருனையில் கரைந்து போனேன்
அன்பில் அடிமையானேன்
நட்பில் நாயகனானேன்
அன்பு நன்பியே
அடுத்த பிறவியிலும் உன் நட்புக்காய் காத்திருப்பேன்...!